கேள்வி
திருவெளிப்பாடு என்றால் என்ன?
பதில்
"திருவெளிப்பாடு" என்ற வார்த்தை அப்போகலுப்சிஸ் என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது "வெளிப்படுத்துதல், திறந்து காண்பித்தல், மற்றும் மூடுதலை எடுத்துபோடுதல்" போன்ற அர்த்தங்களில் வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் சில நேரங்களில் "யோவானின் வெளிப்பாடு" என அழைக்கப்படுகிறது காரணம் அப்போஸ்தலனாகிய யோவானிடம் தேவன் நேரடியாக வெளிப்படுத்தியவைகள் ஆகும். அதோடு, "வெளிப்பாடு" என்னும் இந்த கிரேக்க வார்த்தைத்தான் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முதல் அதிகாராத்தின் முதல் வார்த்தையாகும். எதிர்கால நிகழ்வுகளை சித்தரிப்பதற்கு அடையாளங்கள், படங்கள் மற்றும் எண்களின் பயன்பாட்டை விவரிப்பதற்கு "வெளிப்படுத்தல் இலக்கியம்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திற்கு வெளியிலிருந்து, தானியேல் 7-12 அதிகாரங்களும், ஏசாயா 24-27 அதிகாரங்களும், எசேக்கியேல் 37-41 அதிகாரங்களும், சகரியா 9-12 அதிகாரங்களும் இவற்றில் அடங்கியுள்ளன.
இத்தகைய அறிகுறிகளாலும் கற்பனையினாலும் ஏன் வெளிப்படுத்தல் இலக்கியம் எழுதப்பட்டது? வெளிப்படையான மொழிகளில் செய்தியை வழங்குவதைக் காட்டிலும் படங்களை மற்றும் அடையாளங்களில் செய்தியை மறைக்க மிகவும் விவேகமானதாக இருக்கும் வகையில் வெளிப்படுத்தின புத்தகங்கள் எழுதப்பட்டன. மேலும், நேரம் மற்றும் இடத்தின் விவரங்களை குறிப்பதற்கான மர்மம் ஒரு அடையாளத்தை உருவாக்கியது. இதுபோன்ற அடையாளங்களுக்கான நோக்கம் குழப்பத்தை உண்டாக்குவதல்ல, கடினமான காலங்களில் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் சோர்ந்து போகாதபடிக்கு அவர்களை அறிவுறுத்துவதும் ஊக்குவிப்பதும் ஆகும்.
குறிப்பான வேதாகம அர்த்தத்திற்கு அப்பால், இந்த "அப்பொகலிப்ஸ்" என்ற வார்த்தை பெரும்பாலும் இறுதி நேரங்களை பொதுவாக குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் இறுதியில் சம்பவிக்கப்போகிறவைகளை குறிப்பாக அறிவிக்கிறதாக இருக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் அர்மகெதோன் போர் போன்ற இறுதி நேர நிகழ்வுகள் சில நேரங்களில் அப்போகலிப்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. தேவனின் திருவெளிப்பாடானது, தேவனின் கோபம், அவரது நீதி, மற்றும், இறுதியில், அவரது அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இயேசு கிறிஸ்துவே தேவனுடைய மிகப்பெரிய "அப்போகலிப்ஸ்" ஆகும், அவர் நமக்கு தேவனை வெளிப்படுத்தினார் (யோவான் 14:9; எபிரெயர் 1:2).
English
திருவெளிப்பாடு என்றால் என்ன?