கேள்வி
பிரதான தூதர்கள் என்றால் என்ன?
பதில்
பிரதானதூதன் என்ற வார்த்தை வேதாகமத்தில் இரண்டு வசனங்கள் மட்டுமே வருகிறது. 1 தெசலோனிக்கேயர் 4:16 கூறுகிறது: “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” இரண்டாவது வசனம் யூதா 9: “பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.” வேதாகமத்தில் பிரதான தூதனாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பிரதான தூதன் மிகாவேல் மட்டுமேயாகும்.
பிரதான தூதன் என்ற வார்த்தை ஆர்க்காங்கெலோஸ் (archangelos) என்கிற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, அர்த்தம் "தலைமைத் தூதன்" என்பதாகும். இது ஆர்க்கோன் ("தலைமை" அல்லது "ஆட்சியாளர்") மற்றும் ஆங்கலோஸ் ("தூதன்" அல்லது "தூதுவர்") ஆகியவற்றிலிருந்து வருகிரதான ஒரு கூட்டுவார்த்தையாகும். பல இடங்களில் தேவதூதர்கள் தலைமையின் கீழ் இருப்பதாக அதாவது அவர்களுக்கு தலைமையிடம் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது, ஒரு பிரதான தூதன் மற்ற தேவதூதர்களின் தலைவராக இருக்கிறார்.
அனைத்து தேவதூதர்களையும் போலவே, பிரதானதூதர்கள் தேவனால் படைக்கப்பட்டவர்கள் ஆகும். அவர்கள் ஞானம், வல்லமை, மற்றும் மகிமை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அவர்கள் இயல்பிலேயே ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்கள். தேவதூதர்கள் தேவனை சேவித்து அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்.
யூதா 9-வது வசனத்தில், பிரதான தூதனாகிய மிகாவேலைக் குறிப்பிடும்போது அங்கெ பயன்படுத்தப்பட்டுள்ள வரையறு சுட்டு மிகாவேல் ஒருவர் மட்டும்தான் பிரதான தூதன் என்பதை குறிப்பிடுகிறது. இருப்பினும், தானியேல் 10:13 மிகாவேலை “பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல்” என்றுதான் விவரிக்கிறார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதான தூதர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது, ஏனென்றால் அது மிகாவேலை மற்ற "பிரதான தூதர்களில்" ஒருவராக அவர் இருப்பதைக் குறிக்கிறது. எனவே, பல பிரதான தேவதூதர்கள் இருப்பது சாத்தியமாக இருப்பதால், மற்ற தேவதூதர்களை பிரதான தேவதூதர்களாக அறிவிப்பதன் மூலம் அது தேவனுடைய வார்த்தையில் இருக்கிற கருத்தாயிருக்க முடியாது. பல பிரதானிகள் இருந்தாலும்கூட, மிகாவேல் அவர்களில் பிரதானவர் என்று தெரிகிறது.
தானியேல் 10:21-ல் தானியேலை "அதிபதியாகிய மிகாவேல்" என ஒரு தேவதூதன் விவரிக்கிறார். தேவதூதன் தானியேலிடம் பேசியதாலும், தானியேல் ஒரு யூதன் என்பதாலும், யூத மக்களை மேற்பார்வையிடுவதில் மிகாவேல் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார் என்பதும் விளங்குகிறது. தானியேல் 12:1, மிகாவேலை “பெரிய அதிபதியாகிய உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.” மற்ற பிரதான தேவதூதர்களும் பிற தேசங்களைப் பாதுகாப்பதற்கான பணியை தேவன் கொடுத்திருக்கலாம், ஆனால் வேதாகமம் அவற்றை அடையாளம் காண்பிக்கவில்லை. பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான் என்கிற விஷயத்தில், தூதர்களை எதிர்க்கிற பிரபுக்களும் விழுந்துபோன தேவதூதர்கள் அவர்களுக்குள்ள எல்லைகளை கொண்டிருந்தார்கள் என்றும் தானியேலுக்கு பரிசுத்த தூதன் செய்தியை கொண்டுவந்ததும் தெளிவாக விளங்குகிறது (தானியேல் 10:20).
தானியேல் 10-வது அதிகாரத்தில் காண்கிறபடி, பிரதான தூதனுடைய ஒரு வேலை என்னவென்றால், ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடுவதாகும். 1 தெசலோனிக்கேயர் 4 ல், பிரதானதூதன் கிறிஸ்துவின் திருச்சபைக்காக வருகிற வருகையில் ஈடுபட்டுள்ளதை கண்டு கொள்ளலாம். யூதா 9-ல் சாத்தானுடன் போராடுகிற மிகாவேலை நாம் காண்கிறோம். ஒரு பிரதானதூதனாக மிகாவேல் வல்லமையையும் மகிமையையும் கொண்டிருந்தாலும், சாத்தானைக் கடிந்துகொள்ள தேவனிடம் வேண்டுதல் செய்வதைக் கண்டு கொள்ளலாம். இந்த செயல், சாத்தான் எவ்வளவு சக்திவாய்ந்தவன் என்பதைக் காண்பிக்கிறது, அதேபோல் மிகாவேல் எந்த அளவிற்கு தேவனுடைய வல்லமையில் மட்டுமே சார்ந்து இருக்கிறார் என்பதையும் இது காட்டுகிறது. பிரதானதூதன் அவருடைய உதவிக்காக தேவனை நோக்கி காணும்போது, நாம் எந்த அளவிற்கு தேவனையே நோக்கி இருக்கவேண்டும்?
English
பிரதான தூதர்கள் என்றால் என்ன?