கேள்வி
அர்மீனியனிசம் என்றால் என்ன, அது வேதாகமத்தின் படியானதா?
பதில்
அர்மீனியனிசம் என்பது தேவனுடைய இறையாண்மைக்கும் மனிதகுலத்தின் சுதந்திரத்திற்கும் இடையே உள்ள உறவை, குறிப்பாக இரட்சிப்பு தொடர்பாக விளக்க முயற்சிக்கும் ஒரு விசுவாச அமைப்பாகும். ஜேக்கப் அர்மீனியஸ் (1560-1609) என்ற டச்சு இறையியலாளர் பெயரில் அர்மீனியனிசம் பெயரிடப்பட்டது. கால்வினிசம் தேவனுடைய இறையாண்மையை வலியுறுத்துகிறது, அர்மீனியனிசம் மனிதனின் பொறுப்பை வலியுறுத்துகிறது. கால்வினிசத்தின் ஐந்து புள்ளிகளைப் போலவே அர்மீனியனிசம் ஐந்து புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டால், இவை பின்வரும் ஐந்து புள்ளிகளாக இருக்கும்:
(1) பகுதி சீரழிவு - மனிதகுலம் சீரழிந்தாலும் இன்னும் தேவனைத் தேட முடிகிறது. நாம் பாவத்தால் வீழ்ச்சியடைந்து கறைபடிந்து இருக்கிறோம், ஆனால் தேவனிடமிருந்து வரும் கிருபையின் உதவியுடன் தேவனிடம் வந்து இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள நாம் தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு அல்ல. அத்தகைய கிருபை கொடுக்கப்பட்டால், மனித விருப்பம் சுதந்திரமானது மற்றும் ஆவியின் செல்வாக்கிற்கு இணங்கும் சக்தி கொண்டது. குறிப்பு: பல அர்மீனியனிச கோட்பாட்டாளர்கள் பகுதி சீரழிவை நிராகரித்து, கால்வினிசத்தின் முழுமையான சீரழிவுக்கு மிக நெருக்கமான பார்வையைக் கொண்டுள்ளனர். (2) நிபந்தனை தேர்ந்தெடுத்தல் - தேவன் விசுவாசிப்பதற்குத் தேர்ந்தெடுப்பவர்களை மட்டுமே "தேர்வு" செய்கிறார். பரலோகம் அல்லது நரகத்திற்கு யாரும் முன்னரே தீர்மானிக்கப்படவில்லை. (3) வரம்பற்ற பாவப்பரிகாரம் - இயேசு அனைவருக்காகவும் மரித்தார், தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மற்றும் விசுவாசிக்காதவர்கள் என எல்லோருக்காகவும் மரித்தார். இயேசுவின் மரணம் மனிதகுலம் அனைவருக்குமாக இருந்தது, அவரை விசுவாசிப்பதன் மூலம் எவரும் இரட்சிக்கப்பட முடியும். (4) எதிர்க்கக்கூடிய கிருபை - இரட்சிக்கப்படுவதற்கான தேவனுடைய அழைப்பை எதிர்க்கலாம் மற்றும்/அல்லது நிராகரிக்கலாம். நாம் விரும்பினால், இரட்சிப்பை நோக்கிய தேவனுடைய இழுத்தலை நாம் எதிர்க்க முடியும். (5) நிபந்தனை இரட்சிப்பு - கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் செல்வாக்கை தீவிரமாக நிராகரிப்பார்களானால், தங்கள் இரட்சிப்பை இழக்க நேரிடும். இரட்சிப்பின் பராமரிப்பானது ஒரு கிறிஸ்தவன் அதைத் தக்கவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. குறிப்பு: பல அர்மீனியனிச கோட்பாட்டாளர்கள் "நிபந்தனை இரட்சிப்பை" மறுக்கிறார்கள் மற்றும் அதற்கு பதிலாக "நித்திய பாதுகாப்பை" விசுவாசிக்கிறார்கள்.
நான்கு-புள்ளி கால்வினிஸ்டுகள் வேதாகமத்தின்படியானது என்று நம்பும் ஆர்மீனியனிசத்தின் ஒரேஒரு புள்ளி #3—வரம்பற்ற பாவப்பரிகாரம். 1 யோவான் 2:2 கூறுகிறது, "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்." 2 பேதுரு 2:1, இயேசு அழிந்துபோகும் கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கூட விலைக்கு வாங்கினார் என்று கூறுகிறது: “கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.” இயேசுவின் இரட்சிப்பு அவரை நம்பும் எவருக்கும் மற்றும் அனைவருக்கும் கிடைக்கும். இரட்சிக்கப்படுபவர்களுக்காக மட்டும் இயேசு மரிக்கவில்லை.
நான்கு-புள்ளி கால்வினிசம் (GotQuestions ஊழியங்களின் அதிகாரப்பூர்வ நிலை) அர்மீனியனிசத்தின் மற்ற நான்கு புள்ளிகள் வேதாகமத்திற்கு எதிரானவை மற்றும் வெவ்வேறு அளவுகளில் உள்ளன எனக் காண்கிறது. ரோமர் 3:10-18 முழுமையான சீரழிவுக்கு ஆதரவாக வலுவாக வாதிடுகிறது. நிபந்தனைக்குட்பட்ட தேர்ந்தெடுத்தல், அல்லது மனிதனின் கிரியைகள் குறித்த தேவனுடைய முன்அறிவை அடிப்படையாகக் கொண்ட தேர்ந்தெடுத்தல், தேவனுடைய இறையாண்மையை குறைத்து வலியுறுத்துகிறது (ரோமர் 8:28-30). எதிர்க்கும் கிருபை தேவனுடைய வல்லமையையும் உறுதியையும் குறைத்து மதிப்பிடுகிறது. நிபந்தனை இரட்சிப்பானது இரட்சிப்பை கிருபையின் ஈவாக இருப்பதைக் காட்டிலும் கிரியையின் வெகுமதியாக ஆக்குகிறது (எபேசியர் 2:8-10). இந்த இரண்டு அமைப்புகளிலும் சிக்கல்கள் உள்ளன, ஆனால் கால்வினிசம் அர்மீனியனிசத்தை விட வேதாகமத்தின் அடிப்படையிலானது. இருப்பினும், இரண்டு அமைப்புகளும் தேவனுடைய இறையாண்மைக்கும் மனிதகுலத்தின் சுதந்திரத்திற்கும் இடையிலான உறவை போதுமான அளவில் விளக்கத் தவறிவிட்டன—தேவன் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கருத்தை வரையறுக்கப்பட்ட மனிதனின் மனதால் கண்டறிய இயலாது.
English
அர்மீனியனிசம் என்றால் என்ன, அது வேதாகமத்தின் படியானதா?