கேள்வி
இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் அவசியம் என்று அப்போஸ்தலர் 2:38 போதிக்கிறதா?
பதில்
அப்போஸ்தலர் 2:38, “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” எந்தவொரு ஒற்றை வசனம் அல்லது வேதப்பகுதியுடனும், வேதாகமத்தின் மீதமுள்ள பகுதிகளில் அதைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றின் மூலம் முதலில் வேதாகமம் என்ன கூறுகிறது என்பது நாம் கண்டறிவதன் மூலம் நாம் அவற்றை சரியாகப் புரிந்துகொள்கிறோம். ஞானஸ்நானம் மற்றும் இரட்சிப்பின் விஷயத்தில், ஞானஸ்நானம் உட்பட எந்தவிதமான கிரியைகளினாலும் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்து மீதான விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு என்பதை வேதாகமம் மிகத் தெளிவாக கூறுகிறது (எபேசியர் 2:8-9). எனவே, ஞானஸ்நானம் அல்லது வேறு எந்த செயலும் இரட்சிப்புக்கு அவசியம் என்ற முடிவுக்கு வரும் எந்த விளக்கமும் தவறான விளக்கமாகும். மேலும் கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் இணையதள வலைப்பக்கத்தில் "இரட்சிப்பு விசுவாசத்தால் மட்டுமா, அல்லது விசுவாசம் மற்றும் கிரியைகளினாலா?"
அப்படியானால், சிலர் இரட்சிக்கப்பட நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு ஏன் வருகிறார்கள்? பெரும்பாலும், இந்த வேதப்பகுதியில் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் தேவை என்பது போதிக்கப்படுகிறதா இல்லையா என்கிற விவாதம் இந்த வசனத்தில் "க்கு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையான எய்ஸை (eis) மையமாகக்கொண்டு அதைச்சுற்றியே வருகிறது. இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்கிற விசுவாசத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இந்த வசனத்தை உடனடியாக இந்த வசனத்தைக் குறிப்பிட்டு "ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்வதை சுட்டிக்காட்டுகிறார்கள், அந்த வசனத்தில் "என்று" (for) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை இந்த வசனத்தில் "பெறுவதற்காக" என்று பொருள்படுகிறது. இருப்பினும், கிரேக்கம் மற்றும் ஆங்கிலத்தில், "for" (ஃபார்) என்ற வார்த்தைக்கு பல சாத்தியமான பயன்பாடுகள் உள்ளன.
உதாரணமாக, "உங்கள் தலைவலிக்கு இரண்டு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஒருவர் கூறும்போது, "உங்கள் தலைவலியைப் பெற இரண்டு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அர்த்தம் இல்லை என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும், ஆனால் அதற்கு பதிலாக "உங்களுக்கு ஏற்கனவே தலைவலி இருக்கிறபடியினால் இரண்டு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றர்த்தமாகும். அப்போஸ்தலர் 2:38 இன் பின்னணிக்கு பொருந்தக்கூடிய "ஃபார்" (for) என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன: 1—“இருக்க, மாற, பெற்றுக்கொள்ள, கொண்டிருக்க, வைத்த்துக்கொள்ள, முதலியன”, 2—“ஏனெனில், இதன் விளைவாக,” அல்லது 3—“தொடர்பாக.” இந்த வேதப்பகுதியின் பின்னணிக்கு மூன்று அர்த்தங்களில் ஏதேனும் ஒன்று பொருந்தும் என்பதால், எது சரியானது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.
நாம் மூல மொழியில் எய்ஸ் என்ற கிரேக்க வார்த்தையின் மெய்யான அர்த்தத்தைத் திரும்பிப் பார்க்கத் தொடங்க வேண்டும். இது ஒரு பொதுவான கிரேக்க வார்த்தை (இது புதிய ஏற்பாட்டில் 1774 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது) பல வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில வார்த்தை "for" ஐ போல இது பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். எனவே, மீண்டும், வேதப்பகுதியின் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று சாத்தியமான அர்த்தங்களைக் காண்கிறோம், ஒன்று இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்பதை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது, மற்றவை இல்லை. கிரேக்க வார்த்தையான எய்ஸின் இரண்டு அர்த்தங்களும் வேதத்தின் வெவ்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும், நன்கு அறியப்பட்ட கிரேக்க அறிஞர்கள் A.T. ராபர்ட்சன் மற்றும் J.R. மான்டே என்பவர்கள், அப்போஸ்தலர் 2:38 இல் உள்ள கிரேக்க முன்னிடைச் சொல் எய்ஸ் "காரணமாக" அல்லது "பார்வையில்" என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும், "பொருட்டு" அல்லது "நோக்கத்திற்காக" என்று மொழிபெயர்க்க கூடாது என்று கூறுகிறார்கள்.
இந்த முன்னிடைச் சொல் மற்ற வேதப்பகுதிகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மத்தேயு 12:41 இல் காணப்படுகிறது, அங்கு ஒரு செயலின் "விளைவை" எய்ஸ் என்ற வார்த்தையை அர்த்தமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் நினிவே மக்கள் "யோனாவின் பிரசங்கத்த்தைக் கேட்டு மனந்திரும்பினர்" என்று கூறப்படுகிறது ("இல்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை அதே கிரேக்க வார்த்தை எய்ஸ்). தெளிவாக, இந்தப் பகுதியின் பொருள் அவர்கள் மனந்திரும்பின "காரணமாக" அல்லது "யோனாவின் பிரசங்கத்தின் விளைவாக" மனந்திரும்பினார்கள். அவ்வாறே, அப்போஸ்தலர் 2:38 உண்மையில் அவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்ற உண்மையை "இதன் விளைவாக" அல்லது "ஏனெனில்" அவர்கள் ஏற்கனவே விசுவாசித்து நம்பிக்கை கொண்டிருந்தார்கள் மற்றும் அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் ஏற்கனவே தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றிருந்தார்கள். (யோவான் 1:12; யோவான் 3:14-18; 5:24; 11:25-26; அப்போஸ்தலர் 10:43; 13:39; 16:31; 26:18; ரோமர் 10:9; எபேசியர் 1:12-14). வேதப்பகுதியின் இந்த விளக்கம் அவிசுவாசிகளுக்கு பேதுரு பிரசங்கித்த அடுத்த இரண்டு பிரசங்கங்களில் பதிவு செய்யப்பட்ட செய்தியுடன் ஒத்துப்போகிறது, அங்கு அவர் ஞானஸ்நானத்தைக் கூட குறிப்பிடாமல் மனந்திரும்புதலுடன் மற்றும் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்துடன் பாவங்கள் மன்னிக்கப்படுதலை குறிப்பிடுகிறார் (அப் 3:17-26; 4:8-12).
அப்போஸ்தலர் 2:38 ஐத் தவிர, கிரேக்க வார்த்தையான எய்ஸ் "ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" அல்லது "ஞானஸ்நானம்" என்ற வார்த்தையுடன் இணைந்து மூன்று வசனங்கள் உள்ளன. இவற்றில் முதலாவது மத்தேயு 3:11, "மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்." கிரேக்க வார்த்தையான எய்ஸ் இந்த வசனத்தில் "பெறுவதற்காக" என்று பொருள் கொள்ள முடியாது. அவர்கள் "மனந்திரும்புதலுக்காக" ஞானஸ்நானம் பெறவில்லை, ஆனால் "அவர்கள் மனந்திரும்பியதால் ஞானஸ்நானம் பெற்றார்கள்." இரண்டாவது வசனம் ரோமர் 6:3, அங்கு "அவருடைய மரணத்துக்குள்ளாக (eis), ஞானஸ்நானம் பெற்றதை" என்று வருகிறது. இது மீண்டும் "காரணமாக" அல்லது "சம்பந்தமாக" என்ற பொருளுடன் பொருந்துகிறது. மூன்றாவது மற்றும் கடைசியாக உள்ள வசனம் 1 கொரிந்தியர் 10:2 ல் "மோசேக்குள்ளாக (eis) மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்" என்ற சொற்றொடர் உள்ளது. மீண்டும், எய்ஸ் இந்த வசனத்தில் "பெறுவதற்காக" என்று அர்த்தப்படுத்த முடியாது, ஏனென்றால் இஸ்ரவேலர்கள் மோசேயை தங்கள் தலைவராகப் பெறுவதற்காக ஞானஸ்நானம் பெறவில்லை, ஆனால் அவர் அவர்களின் தலைவராக இருந்ததால் அவர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். ஞானஸ்நானத்துடன் இணைந்து eis (எய்ஸ்) என்ற முன்னிடைச்சொல் பயன்படுத்தப்பட்ட விதத்தில் ஒருவர் ஒத்துப்போகிறார் என்றால், அவர்கள் அப்போஸ்தலர் 2:38 உண்மையில் ஞானஸ்நானம் பெறுவதைக் குறிப்பிடுகிறார்கள் என்று நாம் முடிவு செய்ய வேண்டும். மத்தேயு 28:19; 1 பேதுரு 3:21; அப்போஸ்தலர் 19:3; 1 கொரிந்தியர் 1:15; மற்றும் 12:13 ஆகிய வசனங்களில் கிரேக்க முன்னிடைச்சொல் எய்ஸ் என்பது "பெறுவதற்காக" என்ற அர்த்தத்தில் வரவில்லை.
இந்த வசனத்தைச் சுற்றியுள்ள இலக்கணச் சான்றுகள் மற்றும் முன்னிடைச்சொல் eis (எய்ஸ்) ஆகியவை தெளிவாக உள்ளன, இந்த வசனத்தின் இரண்டு பார்வைகளும் பின்னணிக்குள் மற்றும் வசனத்தின் சாத்தியமான அர்த்தங்களின் வரம்பிற்குள் இருந்தாலும், பெரும்பான்மையான சான்றுகள் "for" என்பது "காரணமாக" அல்லது "சம்பந்தமாக" என்னும் வார்த்தையின் சிறந்த வரையறைக்கு ஆதரவாக உள்ளன மற்றும் "பெறுவதற்காக" என்று அல்ல. ஆகையால், அப்போஸ்தலர் 2:38, சரியாக வியாக்கியானம் பண்ணப்படும்போது, இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று போதிக்கவில்லை.
இந்த வசனத்தில் "க்கு" என்று மொழிபெயர்க்கப்பட்ட முன்னிடைச்சொல்லின் துல்லியமான பொருளைத் தவிர, இந்த வசனத்தின் மற்றொரு இலக்கண அம்சம் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் அதாவது வசனத்தில் வினைச்சொற்கள் மற்றும் பிரதிபெயர்களுக்கு இடையில் இரண்டாவது நபர் மற்றும் மூன்றாவது நபருக்கு இடையிலான மாற்றம் உள்ளது. உதாரணமாக, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் பேதுருவின் கட்டளைகளில் "மனந்திரும்புங்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல் இரண்டாவது நபரின் பன்மையில் உள்ளது, அதே நேரத்தில் "ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்ற வினைச்சொல் மூன்றாவது நபரின் ஒருமையில் உள்ளது. "உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கு" என்ற சொற்றொடரில் "உங்கள்" என்ற பிரதிபெயரும் இரண்டாவது நபரின் பன்மை என்ற உண்மையுடன் இதை இணைக்கும்போது, இந்த வசனத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான வேறுபாடு செய்யப்படுவதைக் காண்கிறோம். இரண்டாவது நபரின் பன்மை முதல் மூன்றாம் நபர் ஒருமை மற்றும் மீண்டும் இந்த மாற்றத்தின் விளைவு "உங்கள் பாவங்களை மன்னிப்பது" என்ற சொற்றொடரை நேரடியாக "மனந்திரும்புங்கள்" என்ற கட்டளையுடன் இணைப்பதாக தெரிகிறது. ஆகையால், நீங்கள் ஒருமை மற்றும் பன்மையின் மாற்றத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, முக்கியமாக உங்களிடம் இருப்பது "நீங்கள் (பன்மை) மனந்திரும்பி, ஒவ்வொருவரும் (ஒருமை) பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” அல்லது, இன்னும் தனித்துவமான வகையில் சொல்வதென்றால்: "உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதற்காக நீங்கள் அனைவரும் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்."
அப்போஸ்தலர் 2:38 இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று போதிப்பவர்கள் செய்யும் மற்றொரு பிழை சில நேரங்களில் எதிர்மறை அனுமானம் தவறானவை என்று அழைக்கப்படுகிறது. எளிமையாகச் சொல்வதானால், ஒரு அறிக்கை உண்மையாக இருப்பதால், அந்த அறிக்கையின் அனைத்து மறுப்புகளையும் (அல்லது எதிரெதிரானவை) உண்மை என்று நாம் கருத முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அப்போஸ்தலர் 2:38 "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று கூறுவதினால் ஒருவர் மனந்திரும்பினாலும் அவர் ஞானஸ்நானம் பெறாவிட்டால், அவர் பாவ மன்னிப்பு அல்லது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறமாட்டார் என்று அர்த்தமல்ல.
இரட்சிப்பின் நிலைக்கும் இரட்சிப்பின் தேவைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. விசுவாசம் என்பது ஒரு நிபந்தனை மற்றும் தேவை என்பது வேதாகமம் தெளிவாக உள்ளது, ஆனால் ஞானஸ்நானத்திற்கும் இதைச் சொல்ல முடியாது. ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறாவிட்டால் அவன் இரட்சிக்கப்பட மாட்டான் என்று வேதாகமம் சொல்லவில்லை. ஒருவர் விசுவாசத்திற்கு எத்தனை நிபந்தனைகளை வேண்டுமானாலும் சேர்க்கலாம் (இது இரட்சிப்புக்குத் தேவை), அந்த நபர் இன்னும் இரட்சிக்கப்படலாம். உதாரணமாக ஒரு நபர் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்று, சபைக்குச் சென்று, ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர் இரட்சிக்கப்படுவார். சிந்தனையில் பிழை ஏற்படும் இடத்தில், இந்த மற்ற எல்லா நிபந்தனைகளையும் ஒருவர் கருதினால், "ஞானஸ்நானம், சபைக்குச் செல்வது, ஏழைகளுக்குக் கொடுப்பது" ஆகியவை ஒருவரை இரட்சிக்கும் என்றாகிவிடும். அவை இரட்சிப்பின் சான்றாக இருக்கும்போது, அவை இரட்சிப்பின் தேவை இல்லை. (இந்த தர்க்கரீதியான பிழையின் முழுமையான விளக்கத்திற்கு, தயவுசெய்து மாற்கு 16:16 இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று போதிக்கிறதா? என்ற கேள்வியைக் காணவும்).
மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற ஞானஸ்நானம் தேவையில்லை என்பது அப்போஸ்தலர் புத்தகத்தில் சிறிது தூரம் வாசிப்பதன் மூலம் தெளிவாக கண்டுகொள்ளலாம். அப்போஸ்தலர் 10:43 இல், பேதுரு கொர்நேலியுவிடம் "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான்" என்று கூறுகிறார் (ஞானஸ்நானம் பெறுவது பற்றி இந்த இடத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும், ஆனால் பேதுரு பாவங்களுக்கு கிடைக்கும் மன்னிப்பைக் கிறிஸ்துவில் விசுவாசிப்பதோடு இணைக்கிறார்). அடுத்து என்ன நடக்கிறது என்றால், கிறிஸ்துவைப் பற்றிய பேதுருவின் செய்தியை விசுவாசித்து, "வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்" (அப். 10:44). அவர்கள் விசுவாசித்தபிறகுதான், அதனால் அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்ற பிறகு, கொர்நேலியு மற்றும் அவரது குடும்பத்தினர் ஞானஸ்நானம் பெற்றனர் (அப். 10:47-48). பின்னணியும் வேதப்பகுதியும் மிகவும் தெளிவாக உள்ளது; கொர்நேலியு மற்றும் அவரது குடும்பத்தினர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு பாவ மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய இரண்டையும் பெற்றனர். உண்மையில், பேதுரு அவர்களை ஞானஸ்நானம் எடுக்க அனுமதித்ததற்கான காரணம், அவர்கள் "பேதுரு மற்றும் யூத விசுவாசிகளைப் போலவே" பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கான ஆதாரங்களைக் காண்பித்ததே ஆகும்.
நிறைவாக, இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று அப்போஸ்தலர் 2:38 போதிக்கவில்லை. ஞானஸ்நானம் ஒருவரை விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டதற்கான அடையாளமாகவும், கிறிஸ்துவில் ஒருவரின் விசுவாசத்தை பகிரங்கமாக அறிவிப்பதாகவும் மற்றும் உள்ளூர் விசுவாசிகளின் குழுவில் உறுப்பினராக இருப்பதாகவும் இருந்தாலும், அது பாவமன்னிப்பு அல்லது பாவ மன்னிப்புக்கான வழி அல்ல. கிருபையினாலே கிறிஸ்துவில் விசுவாசத்தைக்கொண்டு மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது (யோவான் 1:12; யோவான் 3:16; அப்போஸ்தலர் 16:31; ரோமர் 3:21-30; ரோமர் 4:5; ரோமர் 10:9 -10; எபேசியர் 2:8-10; பிலிப்பியர் 3:9; கலாத்தியர் 2:16).
English
இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் அவசியம் என்று அப்போஸ்தலர் 2:38 போதிக்கிறதா?