கேள்வி
ஒரு நபர் ஐக்கியத்தைப் பெறுவதற்கு முன்பு ஞானஸ்நானம் தேவையா?
பதில்
கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதற்கு முன்பு ஒருவர் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று வேதத்தில் கூறப்படவில்லை. இருப்பினும், ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கேற்பது ஆகிய இரண்டிற்கும் ஒரே தேவை இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மீதான நம்பிக்கை மூலம் பெறுகிற இரட்சிப்பு ஆகும்.
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மாலையில் தமது சீடர்களுடன் பஸ்கா உணவை சாப்பிட்டபோது கர்த்தருடைய இராப்போஜனம் அவரால் ஏற்படுத்தப்பட்டது (மத்தேயு 26:20-28). மத்தேயு 28:19 இல், நம்முடைய கர்த்தரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் தனது சீடர்களுக்கு உலகெங்கும் சென்று அவருடைய நற்செய்தியைப் போதிக்கும்படி பிரதான ஆணையைக் கொடுத்தார். புதிய விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கான கட்டளையுடன் இயேசு தமது ஆணையில் தொடர்ந்து கூறினார். திரித்துவத்தின் பெயரால் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவது சபையின் ஆரம்பத்தில் இருந்து நடைமுறையில் இருந்தது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரே தேவை என்னவென்றால், அந்த நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக நம்புகிறவராக இருக்கவேண்டும். ஞானஸ்நானம் என்பது இரட்சிப்பின் அனுபவத்தின் ஒரு சித்திரம் மற்றும் இது நாம் நம்முடைய கர்த்தருக்குக் கீழ்ப்படிதலைக் காண்பிக்கிறது. இது பல வேத அறிஞர்களால் கிறிஸ்தவ சீடர்களின் முதல் படியாக கருதப்படுகிறது.
கிறிஸ்துவில் விசுவாசிக்கும் விசுவாசிகள் தங்கள் கர்த்தருடன் ஐக்கியங்கொள்ளவும் அவருடைய மரணத்தை நினைவு கூறவும் கர்த்தருடைய இராப்போஜனம் ஒரு வழியாகும். ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவில் உள்ள விசுவாசிகளின் முக்கியமான அடையாளம். ஞானஸ்நானம் பெறாத ஒருவர் ஒரு விசுவாசியாக இருக்கலாம் ஆனால் அவர் தன்னை இன்னும் பகிரங்கமாக கிறிஸ்துவோடு அடையாளம் காணவில்லை அல்லது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதற்கான முதல் படியை அவர் எடுக்கவில்லை. ஒருவேளை சில சபைகள் கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பதற்கு முன்பு ஞானஸ்நானம் தேவைப்படுகிறது என்று கூறுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இருப்பினும், மீண்டும், வேதம் எங்கும் இந்த அறிவுறுத்தலைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English
ஒரு நபர் ஐக்கியத்தைப் பெறுவதற்கு முன்பு ஞானஸ்நானம் தேவையா?