settings icon
share icon
கேள்வி

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவையா? ஞானஸ்நான மறுபிறப்பு என்றால் என்ன?

பதில்


ஞானஸ்நான மறுபிறப்பு என்பது ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்காக ஞானஸ்நானம் பெற வேண்டும் என்கிற நம்பிக்கையாகும். ஒரு கிறிஸ்தவன் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வதற்கு கீழ்ப்படிவது மிகவும் முக்கியமானதும் நம்முடைய கடமையாகும், ஆனால் ஞானஸ்நானம் இரட்சிப்புக்குத் தேவையானது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தண்ணீர் முழுக்கின் மூலம் திருமுழுக்கு எடுக்கவேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கிறிஸ்துவின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றோடு ஒரு விசுவாசியின் அடையாளத்தை ஞானஸ்நானம் வெளிப்படுத்துகிறது. ரோமர் 6:3-4 இவ்வாறு கூறுகிறது: “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.” தண்ணீரில் மூழ்கிப்போகும் செயல் கிறிஸ்துவுடன் மரித்து அடக்கம்பண்ணகூடியதைக் காண்பிக்கிறது. தண்ணீரிலிருந்து வெளியே வரக்கூடிய காரியம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் காண்பிக்கிறது.

இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கிற விசுவாசத்திற்கும் மேலதிகமாக எதையும் எதிர்பார்ப்பதென்பது ஒரு செயல்-சார்ந்த இரட்சிப்பாகும். நற்செய்தியிடம் எதையாவது சேர்ப்பதென்பது, இயேசுவின் சிலுவை மரணம் நம்மை மீட்பதற்கும் நமக்கு இரட்சிப்பை வழங்குவதற்கும் போதுமானதல்ல என்று சொல்லுவதற்கு சமமாகும். மேலும் இரட்சிக்கப்படுவதற்காக நாம் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்றால், நம்முடைய சொந்த நற்கிரியைகளையும் கிறிஸ்துவின் மரணத்திற்கு கீழ்ப்படிவதையும் இரட்சிப்பதற்குப் போதுமானதாக நாம் மாற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும். இயேசுவின் மரணம் மட்டுமே நம் பாவங்களுக்காக செலுத்தப்பட்டது (ரோமர் 5:8; 2 கொரிந்தியர் 5:21). நம்முடைய பாவங்களுக்காக இயேசு செலுத்திய விலை நம்முடைய "கணக்கிற்கு” போதுமானதாக இருக்கிறது (யோவான் 3:16; அப்போஸ்தலர் 16:31; எபேசியர் 2:8-9). ஆகையால், ஞானஸ்நானமானது இரட்சிக்கப்பட்ட பின்னர் கீழ்ப்படிவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கிறது, ஆனால் இரட்சிப்பின் தேவையாக இருக்கவில்லை.

ஆமாம், ஞானஸ்நானத்தை இரட்சிப்பின் தேவையாக குறிக்கும் சில வசனங்கள் உள்ளன. ஆனாலும், விசுவாசத்தினால் மட்டுமே இரட்சிப்பை நாம் பெறமுடியும் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (யோவான் 3:16; எபேசியர் 2:8-9; தீத்து 3:5), நிச்சயமாக அந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் இருக்க வேண்டும். வேதவாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லை. வேதாகம காலங்களில், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறிய ஒருவர் அந்த மாற்றத்தை காண்பிக்கும் அடையாளமாக ஞானஸ்நானம் பெற்றார்கள். தாங்கள் எடுத்திருந்த ஒரு தீர்மானத்தை வெளிப்படையாக அறிவிப்பதற்கான ஒரு வழிமுறையாக ஞானஸ்நானம் இருந்தது. ஞானஸ்நானம் பெற மறுத்தவர்கள் உண்மையிலேயே அவர்கள் இன்னும் நம்பவில்லை என்று சொன்னார்கள். எனவே, அப்போஸ்தலர்கள் மற்றும் ஆரம்பகால சீஷர்கள் மனதில், திருமுழுக்கு பெறாத விசுவாசி என்பது அவர்கள் ஒருநாளும் கேள்விப்படாத காரியமாகும். ஒரு நபர் கிறிஸ்துவை விசுவாசிக்கிறதாகக் கூறிக்கொண்டிருக்கிறபோதும், அவருடைய விசுவாசத்தை பகிரங்கமாக அறிவிக்க அவருக்கு வெட்கமாக இருந்ததானால், அவரில் உண்மையான விசுவாசம் இல்லை என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

இரட்சிப்பிற்கு ஞானஸ்நானம் அவசியமானால், “நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை” (1 கொரிந்தியர் 1:14) என்று பவுல் எதற்காக சொல்லவேண்டும்? “ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்” (1 கொரிந்தியர் 1:17) என்று ஏன் சொல்லவேண்டும்? இந்த பத்தியில் பவுல் கொரிந்திய சபைக்கு வாதையைக் பிரிவுகளுக்கு எதிராக வாதிடுகிறார் என்பது உண்மைதான். எனினும், "நான் யாருக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்" என்றும் பவுல் கூறிகிறார். இல்லையென்றால் இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவையாக இருந்தால், “ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை” என்றும் "நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்பதற்கு நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்" என்றும், "கிறிஸ்துவே என்னை இரட்சிப்பதற்காக அனுப்பவில்லை ..." என்று பவுல் உண்மையில் சொல்லியிருந்தால், பவுல் செய்த ஒரு நம்பத்தகாத மோசடி அறிக்கை இதுவாக இருந்திருக்கும். மேலும், பவுல் சுவிசேஷத்தை எண்ணிப்பார்க்கும்போது (1 கொரிந்தியர் 15:1-8) ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கும்போது, ஞானஸ்நானம் குறித்து அவர் ஏன் புறக்கணிக்கிறார்? ஞானஸ்நானம் இரட்சிப்பின் தேவையாக இருந்தால், அந்த நற்செய்தியின் ஞானஸ்நானத்தைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்க முடியாது?

திருமுழுக்கு மறுபிறப்பு என்பது ஒரு வேதாகம விவிலிய கருத்து அல்ல. ஞானஸ்நானம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பதில்லை, மாறாக ஒரு கெட்ட மனசாட்சியிலிருந்து விடுவிக்கிறதாக இருக்கிறது. 1 பேதுரு 3:21-ல், ஞானஸ்நானம் பரிசுத்த சுத்திகரிப்பு சடங்கு அல்ல, ஆனால் கடவுளிடம் நல் மனசாட்சியின் உடன்படிக்கை என்பதை பேதுரு தெளிவுபடுத்தினார். கிறிஸ்துவை இரட்சகராக நம்பியவரின் இதயத்திலும் வாழ்விலும் ஏற்கெனவே நிகழ்ந்திருக்கும் அடையாளமாக ஞானஸ்நானம் இருக்கிறது (ரோமர் 6:3-5; கலாத்தியர் 3:27; கொலோசெயர் 2:12). ஞானஸ்நானம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரும் கீழ்ப்படிந்து எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான படியாகும். ஆனால் ஞானஸ்நானம் இரட்சிப்பின் தேவையாக இருக்க முடியாது. இது இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒரு தாக்குதல் ஆகும்.

English



முகப்பு பக்கம்

இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவையா? ஞானஸ்நான மறுபிறப்பு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries