கேள்வி
நான் எப்படி ஒரு கிறிஸ்தவனாக முடியும்?
பதில்
ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கான முதல் படி "கிறிஸ்தவன்" என்கிற சொல்லின் அர்த்தம் என்னவென்பதை அறிந்துகொள்வதேயாகும். "கிறிஸ்தவன்" என்கிற சொல்லின் தோற்றம் கி.பி. முதல் நூற்றாண்டில் அந்தியோக்கியா என்னும் நகரில் இருந்தாகும் (காண்க அப்போஸ்தலர் 11:26). முதன் முதலில் "கிறிஸ்தவன்" என்கிற சொல், ஒரு அவமானம் என்று கருதப்பட்டிருக்கலாம். இந்த வார்த்தை முக்கியமாக "சிறிய கிறிஸ்து" என்று அர்த்தப்படுகிறது. எனினும், நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகள் “கிறிஸ்தவன்” என்கிற வார்த்தையை ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக தங்களை அடையாளம் காட்ட பயன்படுத்தினர். ஒரு கிறிஸ்தவன் என்பதன் எளிய சொற்பொருள் விளக்கம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒரு நபர் என்பதாகும்.
நான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக மாறவேண்டும்?
இயேசு நான் “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்” என்று அறிவித்தார் (மாற்கு 10:45). பிறகு இங்கே கேள்வி எழுகிறது - நாம் ஏன் மீட்கப்பட வேண்டும்? மீட்குதல் என்னும் கருத்து ஒரு நபரை மீட்டுக்கொண்டு வருவதற்கு பதிலாக செலுத்த வேண்டிய பணம் ஆகும். இந்த கறுத்து ஒரு கடத்தலுக்கான யோசனையில் பெரும்பாலும் வருகிறது, அதாவது கடத்தல் சம்பவங்களில் பயன்படுத்தப்படுகிறது, யாரோ ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, அவர் விடுதலையைப் பெறுவதற்கு ஒரு மீட்கும் தொகையை கடத்தியவர்கள் பெறும்வரையில் கடத்தப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுதலை செய்ய இயேசு நம் மீட்கும்பொருளைக் கொடுத்தார்! என்ன அடிமைத்தனம்? பாவம் மற்றும் அதன் விளைவுகளான சரீர மரணம், பிறகு தேவனிடத்திலிருந்து பிரிந்திருக்கிற நித்தியமான பிரிவு. இயேசு ஏன் இந்த மீட்கும்பொருளை செலுத்த வேண்டியதாயிருந்தது? ஏனென்றால் நாம் எல்லோருமே பாவம் செய்திருக்கிறோம் (ரோமர் 3:23), எனவே தேவனின் நியாயத்தீர்ப்புக்குப் பாத்திரமானவர்களாக இருக்கிறோம் (ரோமர் 6:23). இயேசு நம் மீட்கும் பணத்தை எப்படிக் கொடுத்தார்? நம்முடைய பாவங்களுக்காக தண்டனை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு அவைகளின் விலைக்கிரயத்தைக் கொடுப்பதற்காக சிலுவையில் மரித்தார் (1 கொரிந்தியர் 15:3; 2 கொரிந்தியர் 5:21). இயேசுவின் மரணம் நம் எல்லாருடைய பாவங்களுக்கும் போதுமானதாக எப்படி செலுத்தமுடிந்தது? இயேசு மனித உருவில் இருந்த தேவனானவர், தேவன் பூமியில் நம்மில் ஒருவரைப்போலானார், அவர் நம்மைப்போல அடையாளப்படுத்திக்கொண்டு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் (யோவான் 1:1, 14). தேவனாக இருக்கிற இயேசுவின் மரணம் முடிவில்லாததும், முழு உலகின் பாவங்களுக்காக செலுத்த வேண்டிய விலைக்கிரயத்திற்கு போதுமானதாவும் இருந்தது (1 யோவான் 2:2). அவருடைய மரணத்திற்குப்பின்புள்ள இயேசுவின் உயிர்த்தெழுதல் போதுமான பலி என்று நிரூபித்தது, மேலும் அவர் பாவத்தையும் மரணத்தையும் உண்மையில் வென்றுவிட்டார் என்பதையும் தெரிவிக்கிறது.
நான் எப்படி ஒரு கிறிஸ்தவனாக முடியும்?
இது சிறந்த பகுதியாகும். தேவன் நம்மீது கொண்டிருக்கிற அன்பு நிமித்தமாக, ஒருவர் கிறிஸ்தவராவதற்கு மிகவும் எளிமையான வழியை ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உங்கள் பாவங்களுக்காக போதுமான பலியாக அவருடைய மரணம் இருந்தது என்று முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் (யோவான் 3:16), அவரையே உங்கள் இரட்சகராக முழுமையாய் நம்பவேண்டும் (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12). ஒரு கிரிஸ்தவராக மாறுதல் என்பது எந்தவிதமான சடங்குகள் பற்றியது அல்ல, திருச்சபைக்கு போகிறது, அல்லது வேறு விஷயங்களை மற்ற சில விஷயங்களை செய்வதிலிருந்து விலகி செய்வது போன்றவைகள் அல்ல. கிறிஸ்தவராக மாறுதல் என்பது இயேசு கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது ஆகும். விசுவாசத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவு கொள்ளுகிற ஒரு நபரையே ஒரு கிறிஸ்தவனாக உருவாக்குகிறது.
நீங்கள் ஒரு கிறிஸ்தவராவதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா?
இயேசு கிறிஸ்துவையும் உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விசுவாசிப்பது ஒன்றுதான். நீங்கள் பாவம் செய்தீர்கள் என்றும் தேவனிடமிருந்து நியாயத்தீர்ப்புக்கு தகுதியானவர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு நம்புகிறீர்களா? இயேசு உங்கள் தண்டனையை உங்களிடமிருந்து அவர்மேல் ஏற்றுக்கொண்டார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு நம்புகிறீர்களா? அவருடைய மரணம் உங்கள் பாவங்களுக்காக செலுத்த வேண்டியதற்குரிய போதுமான பலியாக இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டு நம்புகிறீர்களா? இந்த மூன்று கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் ஆம் என்றால், உங்கள் இரட்சகராக இயேசுவில் உங்கள் நம்பிக்கையை வையுங்கள். விசுவாசத்தினாலே அவரை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளுங்கள். இதுதான் ஒருவர் கிரிஸ்துவராக மாறுவதற்கு தேவையானதாக இருக்கிறது.
நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.
English
நான் எப்படி ஒரு கிறிஸ்தவனாக முடியும்?