கேள்வி
நாம் மரித்த பிறகு தேவதூதர்களாக மாறுகிறோமா?
பதில்
தேவதூதர்கள் தேவனால் படைக்கப்பட்டவர்கள் (கொலோசெயர் 1:15-17) மற்றும் மனிதர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் கிறிஸ்துவின் சீஷர்களுக்கு ஊழியம் செய்வதற்கும் தேவனின் விசேஷித்த முகவர்கள் ஆவர் (எபிரெயர் 1:13-14). தேவதூதர்கள் முன்பாக மனிதர்களாகவோ அல்லது வேறெதுவாகவோ இருந்தார்கள் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை, அவர்கள் தேவதூதர்களாகவே சிருஷ்டிக்கப்பட்டு இருந்தார்கள். கிறிஸ்து மனித இனத்திற்கு வழங்கிய மீட்பு தேவதூதர்களுக்கு தேவையில்லை, மற்றும் அவர்களால் அதை அனுபவிக்க முடியாது. நற்செய்தியைக் கவனிப்பதற்கான அவர்களுடைய ஆசைகளை முதல் பேதுரு 1:12 விவரிக்கிறது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.” அவர்கள் முன்னர் மனிதர்களாக இருந்திருந்தால், இரட்சிப்பின் கருத்து அவர்களுக்கு ஒரு மர்மமாக இருந்திருக்காது. ஆம், ஒரு பாவி கிறிஸ்துவிடம் திரும்பும்போது அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் (லூக்கா 15:10), ஆனால் கிறிஸ்துவில் இரட்சிப்பு அவர்களுக்கு இல்லை.
இறுதியில், கிறிஸ்துவில் விசுவாசிக்கும் விசுவாசியின் சரீரம் மரிக்கும். பிறகு என்ன நடக்கும்? விசுவாசியின் ஆவி பிரிந்து சென்று கிறிஸ்துவோடு இருக்கும் (2 கொரிந்தியர் 5:8). விசுவாசி ஒரு தேவதூதனாக மாறமுடியாது. எலியாவும் மோசேயும் மறுரூப மலையில் தோன்றினபோது அவர்கள் தூதர்களாக வரவில்லை மாறாக அவர்கள் தாங்கள் உள்ளபடியே தோன்றினார்கள், அவர்கள் மகிமையடந்து இருந்தார்கள் என்பது சரிதான் என்கிறபோதிலும், பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருக்குத் தெரிந்திருந்தனர், அடையாளம் கண்டுகொள்வதற்கு எந்த கடினமும் இல்லை.
1 தெசலோனிக்கேயர் 4:13-18 ல், கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகள் இயேசுவில் நித்திரையாக இருக்கிறார்கள் அதாவது மரித்திருக்கிறார்கள், ஆனால் அவர்களின் ஆவிகள் உயிருடன் தான் உள்ளன. கிறிஸ்துவின் வருகையில் நடைபெறும் உயிர்த்தெழுதலின்போது ஆவிக்குரிய புதிய சரீரத்தைப்பெற்று, அவருடன் அவர் கொண்டுவரும் அவர்களுடைய ஆவிகளோடு இணைந்திருப்பார்கள் என்று இந்த வேதப்பகுதி சொல்லுகிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் வாழ்கிற அனைத்து விசுவாசிகளும் தங்கள் சரீரங்களைப் பெற்று கிறிஸ்துவைப்போல் மாறியிருப்பார்கள், அவர்கள் தங்கள் பாவங்களில் இல்லாமல் முற்றிலும் புதியவர்களாய் இருப்பார்கள், பாவம் இயல்பும் அவர்களில் இருக்காது.
கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகள் எல்லாரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு, ஆண்டவருடன் எப்போதும் வாழுவார்கள். நாம் நமது கர்த்தரை நித்தியத்திற்கும் தேவதூதர்களாக அல்லாமல் தேவதூதர்களுடன் சேர்ந்து சேவிப்போம். இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்கு தேவன் வழங்கியிருக்கிற இந்த ஜீவனுள்ள நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
English
நாம் மரித்த பிறகு தேவதூதர்களாக மாறுகிறோமா?