கேள்வி
வேதாகம பிரித்தெடுப்பு என்றால் என்ன?
பதில்
வேதாகம பிரித்தெடுப்பு என்பது, தேவன் உலகத்திலிருந்து விசுவாசிகளை அழைத்ததையும் மற்றும் பாவமுள்ள கலாச்சாரங்களின் மத்தியில் தனிப்பட்ட நிலையிலும் கூட்டான தூய்மைக்குள்ளாகவும் உள்ளதை அறிந்துகொண்டு அங்கீகரிப்பதாகும். வேதாகம பிரித்தெடுப்பு பொதுவாக இரண்டு பகுதிகளில் கருதப்படுகிறது: தனிப்பட்ட நிலையில் மற்றும் திருச்சபையாக.
தனிப்பட்ட பிரித்தெடுப்பு ஒரு தேவபக்தியுள்ள நடத்தைக்கு ஒரு தனிநபரின் உறுதிப்பாட்டை உட்படுத்துகிறது. தானியேல் தனிப்பட்ட பிரித்தெடுப்பு நிலையை "ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று" தீர்மானம் பண்ணினார் (தானியேல் 1:8). அவருடைய பிரித்தெடுப்பு வேதாகமத்தின்படியானதாகும் காரணம் அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தார்.
தனிப்பட்ட பிரித்தெடுப்புக்கான ஒரு நவீன உதாரணம் ஆல்கஹால் வழங்கப்படும் கூடுகைகளுக்கு மற்றும் விழாக்களுக்கு விடுக்கும் அழைப்புகளை தவிர்க்கிற தீர்மானமாக இருக்கலாம். சோதனையைச் சமாளிப்பதற்காக இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் (ரோமர் 13:14) "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு” விலகவேண்டும் (1 தெசலோனிக்கேயர் 5:22), அல்லது தனிப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட நிலைபாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் (ரோமர் 14:5).
தேவனுடைய பிள்ளைகள் உலகத்திலிருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று வேதாகமம் தெளிவாகக் கற்பிக்கிறது. "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரிந்தியர் 6:14-17; 1 பேதுரு 1: 14-16-ஐயும் காண்க).
சபையாகயுள்ள பிரித்தெடுப்பானது, இறையியல் அல்லது நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பிற அமைப்புகளுடன் அதன் உறவுகளைப் பற்றிய ஒரு சபையின் முடிவுகளை உள்ளடக்கியதாகும். பிரித்தெடுப்பு “சபை” என்னும் சொல்லில்தானே இருக்கிறது, இந்த “சபை” என்னும் சொல் “சபையாக அழைக்கப்பட்ட” என்னும் அர்த்தம் வருகிற “எக்ளேசியா” என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. பெர்கமு சபைக்கு இயேசு எழுதிய கடிதத்தில், பொய்யான போதனைகளை கற்பித்தவர்களை பொறுத்துக்கொண்டதன் பேரில் அவர்களை அவர் எச்சரித்தார் (வெளிப்படுத்துதல் 2:14-15). மதங்களுக்கு எதிரான கொள்கைகளை உடைத்து சபையானது பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். திருச்சபை பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் இருப்பதற்கான ஒரு நவீன உதாரணம் விசுவாசத்துரோகிகளுடன் திருச்சபையை ஐக்கியப்படுத்தும் எந்த ஒரு கிறிஸ்தவ வகுப்புகளுடனும் கூட்டுறவு வைக்காமல் அவர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாகும்.
கிறிஸ்துவ பிரித்தெடுப்பு என்பது கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதல்ல. இயேசுவைப் போலவே பாவிகளோடு சேர்ந்து அவர்களுடைய பாவத்திற்கு மட்டும் உட்படாமல் அவர்களோடு நாம் நட்பாக இருக்க வேண்டும் (லூக்கா 7:34). பிரித்தெடுக்கப்பட்ட நிலையைக் குறித்து ஒரு சமநிலையான கண்ணோட்டத்தை பவுல் வெளிப்படுத்துகிறார்: "விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே" (1 கொரிந்தியர் 5:9-10). வேறுவிதமாக கூறினால், நாம் உலகில் இருக்கிறோம், ஆனால் உலகத்தோடு அல்ல.
உலகத்தை ஒளிரச்செய்யாமல் இருக்க அனுமதியாமல், உலகத்தை ஒளிரச்செய்கிற வகையில், நாம் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:14-16).
English
வேதாகம பிரித்தெடுப்பு என்றால் என்ன?