settings icon
share icon
கேள்வி

வேதாகமத்தில் அதிக புத்தகங்களைச் சேர்க்ககூடிய வகையில் இருந்ததா?

பதில்


தேவன் தம்முடைய வார்த்தையில் இன்னும் கூடுதலாக சேர்க்கும் வகையில் வெளிப்படுத்தியிருப்பதாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆதியாகமம் புத்தகத்தில் மனுக்குலத்தின் ஆரம்பத்தோடு வேதாகமம் தொடங்குகிறது பிறகு அது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் மனிதகுலத்தின் முடிவில் முடிகிறது என்பது நமக்குத் தெரியும். விசுவாசிகளாகிய நம்முடைய நன்மைக்காக, ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் தேவனுடைய சத்தியத்தோடு வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதை நாம் 2 தீமோத்தேயு 3:16-17-ல் அறிந்திருக்கிறோம், " வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது."

மேலும் புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருந்தால், இன்று நமக்கு இருக்கும் வேதாகமம் முழுமையானது இல்லை என்றும் அது கூறும் காரியங்கள் யாவும் பூரணமற்றவை என்றும் சொல்லுவதற்கு சமமாக இருக்கும். இது வெளிப்படுத்துதல் புத்தகத்திற்கு நேரடியாக பொருந்துகிறது என்றாலும், வெளிப்படுத்துதல் 22:18-20 வரையிலுள்ள வசனங்களில் தேவனுடைய வார்த்தையில் சேர்த்துக்கொள்வதைப் பற்றி ஒரு முக்கியமான உண்மையை நமக்கு போதிக்கிறது: "இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்."

நமக்கு தேவையானது எல்லாமுமாக உள்ளது மற்றும் தேவையானது யாதென்றால், வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்கள் மட்டுமேயாகும். வாழ்க்கையில் எந்தஒரு குறிப்பிட்ட சூழ்நிலையும் வேதாகமத்தில் இல்லை அல்லது குறிப்பிடப்படவில்லை என்று தீர்க்கமாக கூறமுடியாது. ஆதியாகமத்தில் ஆரம்பமானது யாவும் முடிவை வெளிப்படுத்துதலில் முடிவில் காணப்படுகிறது. வேதாகமம் முற்றிலும் பூரணமானது மற்றும் போதுமானது ஆகும். தேவன் எதையாவது வேதாகமத்தில் சேர்க்க இயலுமா? நிச்சயமாக அவரால் முடியும். இருப்பினும், அவர் அவ்வாறு செய்யப் போகிறார் என்று நம்புவதற்கும் வேறெதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதற்கும் எந்தவொரு காரணமும் இறையியல் மற்றும் தத்துவ ரீதியாக இல்லை.

English



முகப்பு பக்கம்

வேதாகமத்தில் அதிக புத்தகங்களைச் சேர்க்ககூடிய வகையில் இருந்ததா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries