settings icon
share icon
கேள்வி

வேதாகமத்தின் நியதி என்றால் என்ன?

பதில்


"கானோன்" என்கிற வார்த்தை ஒரு தரநிலையை அளவிடுகிற நியதிச் சட்டத்தில் இருந்து வருகிறது. வேதவாக்கியங்களின் எழுத்துக்கள் எழுதப்பட்ட சமயத்தில் தானே நியமனமானது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம். காகிதத்தோலில் எழுதுகோல் தொட்டபோதே வேதவாக்கியங்கள் வேதவாக்கியங்களாக இருந்தன. இது மிகவும் முக்கியமானதாகும் ஏனென்றால் கிறிஸ்தவம் என்பது தேவன் அல்லது இயேசு கிறிஸ்துவை அல்லது இரட்சிப்பை வரையறுப்பதன் மூலம் ஆரம்பிக்கப்படவில்லை. கிறிஸ்தவத்தின் அடிப்படையானது வேதவாக்கியத்தின் அதிகாரத்தில் காணப்படுகிறது. வேதவாக்கியத்தை நாம் அடையாளம் காண முடியாவிட்டால், பிறகு நாம் எந்த இறையியல் உண்மையையும் பிழையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

எந்தெந்த புத்தகங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டு வேதவாக்கியங்களாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க என்ன அளவீடு அல்லது நிலையானது பயன்படுத்தப்பட்டது? செயல்முறை மற்றும் நோக்கத்தை புரிந்துகொள்ளும் ஒரு முக்கிய வசனம், ஒருவேளை வேதாகமம் கொடுக்கப்பட்ட நேரத்தைக் காண்பிப்பது யூதாவின் புத்தகம் 3-வது வசனமாகும், அதாவது "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம்" என்று கூறுகிறது. நம்முடைய விசுவாசம் வேதாகமத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக எல்லா கிறிஸ்தவர்களுடைய நலனுக்காக வேதாகமம் வழங்கப்பட்டது என்று சொல்லலாம். இதுவரை காணப்படாத மறைந்த அல்லது இழந்த கையெழுத்துப் பிரதிகளாக எதையும் நாம் இதுவரையில் காணவில்லை என்பது ஆச்சரியமல்லவா? ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிற நிலையில் ரகசிய புத்தகங்களைக் கொண்டிருக்கவில்லை, அப்படி எவரும் உயிருடன் இல்லை, இமாலய அளவிலான விழிப்புணர்வு பெற ஒரு சாட்சி இல்லாமல் தேவன் நம்மை விட்டு விலகவில்லை என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம். தேவன் தம்முடைய வார்த்தையைத் உருவாக்க பயன்படுத்திய அதே இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அவற்றைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டது.

தேவனுடைய வார்த்தையின் முழுமையும் சத்தியம் என்பதை சங்கீதம் 119:160 குறிப்பிடுகிறது. இந்த முன்கருதலை மனதில் இருத்திக்கொண்டு, வேதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்கு வெளியே சோதனைகளை எவையேனும் சந்திக்கின்றனவா என்பதைக் காணலாம். உதாரணமாக, இயேசு கிறிஸ்து தேவன் என்று வேதாகமம் கூறுகிறது (ஏசாயா 9:6-7; மத்தேயு 1:22-23; யோவான் 1: 1, 2, 14; 20:28, அப்போஸ்தலர் 16:31, 34; பிலிப்பியர் 2:5-6; கொலோசெயர் 2:9; தீத்து 2:13, எபிரெயர் 1:8; 2 பேதுரு 1:1). இன்னும் கூடுதலாக வேதவாக்கியங்களுக்கு வெளியே உள்ளவைகளை வேதவாக்கியம் எனக் கூறுகின்றனவைகள், இயேசு தேவன் அல்ல என்று வாதிடுகின்றன. தெளிவான முரண்பாடுகள் இருந்தாலும்கூட, நிறுவப்பட்ட வேதாகமம் நம்பகமானதாக இருக்க வேண்டும், வேதாகமத்தின் வெளிப்புறத்திலுள்ள மற்றவர்களை அதன் போக்கிலே விட்டுவிட வேண்டும்.

திருச்சபையின் ஆரம்ப நூற்றாண்டுகளில், கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் வேதவாக்கியங்களின் நகல்களை வைத்திருந்தார்கள் என்பதற்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். இந்த உபத்திரவத்தின் காரணமாக, "எந்தெந்த புத்தகங்கள் மரிப்பதற்கும் பாத்திரமானவைகள்?" என்கிற கேள்வி விரைவில் எழுந்தது. சில புத்தகங்களில் இயேசுவின் கூற்றுகள் இருக்கலாம், ஆனால் 2 தீமோத்தேயு 3:16-ல் சொல்லப்பட்டபடி அவைகள் தேவனுடைய உந்துதலைக் கொண்டவைகளா? திருச்சபையின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பகிரங்கமாக அங்கீகரிப்பதில் திருச்சபை ஆலோசனை சங்கங்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன, ஆனால் பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட திருச்சபை அல்லது சபைகளின் குழுக்கள் ஒரு புத்தகத்தை அதன் எழுத்திலிருந்தே அவைகள் தேவனால் உந்தப்பட்டு எழுதப்பட்டவைகள் என்பதை கண்டுகொண்டனர் (உதாரணமாக கொலோசெயர் 4:16; 1 தெசலோனிக்கேயர் 5:27). சபையின் ஆரம்ப நூற்றாண்டுகளிலிருந்து, சில புத்தகங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்தன. அவைகளின் பட்டியல் முடிவாக கி.பி. 303-ல் ஒரு தீர்வுக்கு வந்தது.

பழைய ஏற்பாட்டிற்கு வந்தபோது, மூன்று முக்கிய உண்மைகள் கருத்தில் கொள்ளவேண்டும்: 1) புதிய ஏற்பாடு ஒவ்வொரு பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து ஒன்று அல்லது இரு குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறது. 2) இயேசு மத்தேயு 23:35-ல் எபிரெய வேதாகமத்தை சிறந்த விதத்தில் ஆதரித்தார், அதாவது முதல் மற்றும் கடைசி புத்தகத்திலிருந்து அவர் மேற்கோள் காட்டினார். 3) யூதர்கள் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களைக் பாதுகாத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர், அவற்றில் எந்த பகுதிகளை வேதவாக்கியங்களில் சேர்ப்பது எந்த பகுதிகளை புறக்கணிப்பது என்பதில் விவாதத்தை கொண்டிருந்தனர். ரோமன் கத்தோலிக்க அப்பொக்ரிபாவை அவர்கள் அளவிடவில்லை, அவைகள் வேதாகமத்தின் வரையறைக்கு வெளியே இருந்தன, ஆதலால் யூதர்கள் அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

வேதாகமத்தில் எந்த புத்தகங்களைச் சேர்ப்பது என்பதில் கிறிஸ்துவின் காலத்திலிருந்தும், அதற்குப்பின் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அதிக கேள்விகள் எழுந்தன. புத்தகங்கள் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக கருதப்படுவதற்கு ஆரம்பகால சபை சில குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருந்தது. இதில் பின்வருபவைகள் அடங்கும்: இயேசு கிறிஸ்துவை கண்ணால்கண்ட சாட்சியாக இருந்தவர் எழுதிய புத்தகமா? புத்தகம் "சத்திய சோதனையை" கடந்து விட்டதா? (அதாவது ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வேதாகமத்தோடு ஒத்துப்போகிறதா?). புதிய ஏற்பாட்டு புத்தகங்களை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, அவைகள் பல்வேறு காலகட்டத்தில் பல சோதனைகளை சகித்திருக்கின்றன, கிறிஸ்தவ மரபுவழி இந்த நூற்றாண்டுகளுக்கு சற்று சவாலாக இருக்கிறது.

குறிப்பிட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் முதல் நூற்றாண்டு பெறுநர்கள் அல்லது வாசகர்கள் தங்கள் நம்பகத்தன்மையைக் காட்டிய நேரடியான சான்றுகளை அளித்தனர். மேலும், கடைசிகால விஷயங்களைக் கொண்ட வெளிப்படுத்துதல் புத்தகம், 22:18-ல் வார்த்தைகளை சேர்க்க தடைவிதிக்கும் காரியம் அந்த காலத்தின்போது தானே வேதவாகியங்களின் எழுத்து முற்றுப்பெற்று விட்டது என்பதைக் காண்பிக்கிறது (தோராயமாக கி.பி. 95) .

தவறவிடப்படக்கூடாத ஒரு முக்கியமான இறையியல் குறிப்பு உள்ளது. ஒரு முக்கிய நோக்கத்திற்காக ஆயிரம் ஆண்டுகளாக தேவன் தம் வார்த்தையின் மூலமாக தன்னை வெளிப்படுத்துவதற்கும் மனிதகுலத்தோடு தொடர்புகொள்வதற்கும் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தினார். இறுதியில், ஒரு புத்தகம் வேதாகமதிற்குட்பட்டது என்பதை சபையின் ஆலோசனை சங்கங்கள் முடிவு செய்யவில்லை; மனித எழுத்தாளர் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு எழுதப்பட்டபோது அது முடிவெடுத்தது. பல நூற்றாண்டுகளாக அவருடைய வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக ஆரம்பகால திருச்சபை ஆலோசனை சங்கங்களை தேவன் நியமித்து அதன் மூலமாக வேதவாக்கியங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டு அவைகளைப் பாதுகாத்து வரும்படியாக வழிகாட்டினார்.

தேவனின் மெய்யான தன்மை, இப்பிரபஞ்சத்தின் தோற்றம், வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம், இரட்சிப்பின் அதிசயங்கள், மற்றும் எதிர்கால நிகழ்வுகள் (மனிதகுலத்தின் எதிர்காலம் உட்பட) போன்ற இயற்கை விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வது இயல்பான கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதும் மனிதனின் அறிவியல் திறனுக்கு மேலானதுமாகும். நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களிடமிருந்து மதிப்புமிக்க மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவைப் பற்றி நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விளக்குவதற்கு வேதாகமம் போதுமானதாகும் (யோவான் 5:18; அப்போஸ்தலர் 18:28; கலாத்தியர் 3:22; 2 தீமோத்தேயு 3:15) மற்றும் நம்மை கற்பிப்பதற்கும், திருத்துவதற்கும், எல்லா நீதியான காரியங்களை கற்பிப்பதற்கும் வேதாகமம் போதுமானதாக இருக்கிறது (2 தீமோத்தேயு 3:16).

English



முகப்பு பக்கம்

வேதாகமத்தின் நியதி என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries