கேள்வி
ஒரு மாம்சத்திற்குரிய கிறிஸ்தவன் என்றால் என்ன?
பதில்
ஒரு உண்மையான கிறிஸ்தவன் மாம்சத்திற்குரியவனாக இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு, முதலில் “மாம்சத்திற்குரிய” என்ற வார்த்தையை வரையறுப்போம். “மாம்சத்திற்குரிய” என்ற சொல் கிரேக்க வார்த்தையான சார்க்கிகோஸ் என்னும் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதன் பொருள் “மாம்சமானது” என்பதாகும். இந்த விளக்க வார்த்தை 1 கொரிந்தியர் 3:1-3-ல் உள்ள கிறிஸ்தவர்களின் சூழலில் காணப்படுகிறது. இந்த வேதப்பகுதியில், அப்போஸ்தலனாகிய பவுல் வாசகர்களை "சகோதரர்கள்" என்று உரையாற்றுகிறார், இது மற்ற கிறிஸ்தவர்களைக் குறிக்க கிட்டத்தட்ட பிரத்தியேகமாகப் பயன்படுத்துகிறது; பின்னர் அவர் அவர்களை "மாம்சத்திற்குரியவர்கள்" என்று விவரிக்கிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருக்க முடியும் என்று நாம் முடிவு செய்யலாம். யாரும் பாவமற்றவர்கள் அல்ல என்று வேதாகமம் முற்றிலும் தெளிவாக உள்ளது (1 யோவான் 1:8). ஒவ்வொரு முறையும் நாம் பாவம் செய்யும்போது, நாம் மாம்சத்திற்குரியவர்களாக செயல்படுகிறோம்.
புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு கிறிஸ்தவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, மாம்சத்திற்குரியவராக இருக்க முடியும், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர் வாழ்நாள் முழுவதும் மாம்சத்திற்குரியவராக இருக்க மாட்டார். சிலர் "மாம்சத்திற்குரிய கிறிஸ்தவர்" என்ற கருத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர், ஜனங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வர முடியும் என்று கூறி, பின்னர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முற்றிலும் மாம்சத்திற்குரிய முறையில் வாழ ஆரம்பிக்கிறார்கள், மறுபடியும் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை அல்லது ஒரு புதிய சிருடிப்பு (2 கொரிந்தியர் 5:17) என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அத்தகைய கருத்து முற்றிலும் வேதாகமத்தின்படியானது அல்ல. மெய்யான விசுவாசம் எப்போதும் நற்கிரியைகளை விளைவிக்கும் என்பதை யாக்கோபு 2 தெளிவுபடுத்துகிறது. விசுவாசத்தினாலே கிருபையால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுகையில், இரட்சிப்பு செயல்களில் விளைகிறது என்று எபேசியர் 2:8-10 அறிவிக்கிறது. ஒரு கிறிஸ்தவர், தோல்வி மற்றும் / அல்லது கிளர்ச்சியின் போது, மாம்சத்திற்குரியவராக தோன்ற முடியுமா? ஆம். ஒரு உண்மையான கிறிஸ்தவர் மாம்சத்திற்குரியவராக இருப்பாரா? இல்லை.
நித்திய பாதுகாப்பு என்பது வேதத்தின் சத்தியம் என்பதால், மாம்சத்திற்குரிய கிறிஸ்தவர் கூட இன்னும் இரட்சிக்கப்படுகிறார். இரட்சிப்பை இழக்க முடியாது, ஏனென்றால் இரட்சிப்பு என்பது தேவனின் ஈவு, அவர் அதை பறிக்க மாட்டார் (யோவான் 10:28; ரோமர் 8:37-39; 1 யோவான் 5:13 ஐக் காண்க). 1 கொரிந்தியர் 3:15-ல் கூட, மாம்சத்திற்குரிய கிறிஸ்தவர் இரட்சிப்பின் உறுதி அளிக்கப்படுகிறார்கள்: “ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.” கேள்வி என்னவென்றால், ஒரு தன்னை கிறிஸ்தவர் என்று கூறிக்கொண்டு, மாம்சத்திற்குரியவராக வாழ்ந்த ஒருவர் தனது இரட்சிப்பை இழந்துவிடுவாரா என்பது அல்ல, ஆனால் அந்த நபர் உண்மையிலேயே முதன்முதலில் இரட்சிக்ப்பட்டாரா என்பதுதான் (1 யோவான் 2:19).
தங்கள் நடத்தையில் மாம்சத்திற்குரியவராக மாறும் கிறிஸ்தவர்கள், தேவன் அவர்களை அன்பாக ஒழுங்குபடுத்துவார் (சீர்பொருந்தப்பண்ணுவார்) என்று எதிர்பார்க்கலாம் (எபிரெயர் 12:5-11) ஆகவே, அவருடன் நெருங்கிய ஐக்கியம் கொள்ள அவர்கள் மீட்கப்படலாம், மேலும் அவருக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொள்ளுவார்கள். நம்மைக் இரட்சிப்பதில் தேவனின் விருப்பம் என்னவென்றால், நாம் படிப்படியாக கிறிஸ்துவின் சாயலுக்கு நெருக்கமாக வளர வேண்டும் (ரோமர் 12:1-2) என்பதாகும், இது பெருகிய முறையில் ஆவிக்குரிய நிலையானது வளர்ந்தும் மாம்சதிற்குரிய நிலையானது குறைந்தும் வரும், இது பரிசுத்தமாக்கல் என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய பாவமுள்ள மாம்சத்திலிருந்து நாம் விடுவிக்கப்படும் வரை, மாம்சத்திற்குரிய தாக்கங்கள் இருக்கும். கிறிஸ்துவில் ஒரு உண்மையான விசுவாசியைப் பொறுத்தவரை, இந்த தாக்கங்கள் விதிவிலக்காக இருக்கும், மாறாக விதி அல்ல.
English
ஒரு மாம்சத்திற்குரிய கிறிஸ்தவன் என்றால் என்ன?