கேள்வி
மரித்தவர்களை தொடர்புகொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?
பதில்
வேதாகமம், மரித்தவர்களைத் தொடர்புகொள்வது மற்றும் அவர்களிடம் பேசுவதைக் கையாள்வதில் தெளிவாக உள்ளது. அஞ்சனம் பார்த்தல், ஆவிகளைத் தொடர்புகொள்ளுதல் மற்றும் அதிர்ஷ்டம் சொல்லுதல் ஆகியவற்றின் நடைமுறையில் வேதம் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பார்வையைக் கொண்டுள்ளது. லேவியராகமம் 19:31 கூறுகிறது: “அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்…” லேவியராகமம் 20:6 கூறுகிறது: “அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.” உபாகமம் 18:12 கூறுகிறது, அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி ஆலோசனை கேட்பது அல்லது மரித்தவர்களிடம் தொடர்புகொள்ளுவது "அருவருப்பானது". மிகத்தெளிவாக, தேவன் இந்த நடைமுறைகளை பாவமாகவும் முற்றிலும் பயனற்றதாகவும் காண்கிறார்.
இஸ்ரவேலின் ஒரு சக்திவாய்ந்த ராஜாவான சவுல், கடைசியாக தேவனிடமிருந்து விலகிய தனது சோகமான வீழ்ச்சியின் முடிவை அடைந்தான். அவன் விரும்பிய பதில்களை தேவன் வழங்காதபோது சவுல் ஒரு அஞ்சனம் பார்க்கிறவளை நாடிப் பதில்களைத் தேடத் தேர்ந்தெடுத்தான். 1 சாமுவேல் 28:6-20 இல், சாமுவேல் தீர்க்கதரிசியின் ஆவியை வரவழைக்கும்படி சவுல் ஒரு ஒரு அஞ்சனம் பார்க்கிற பெண்ணிடம் கேட்கிறான். அவனுடைய பெரிய தவறு 1 நாளாகமம் 10:13-14 இல் பின்னர் குறிப்பிடப்பட்டுள்ளது, இது சவுலின் ஈடுபாடு தவறானது என்பதை வலியுறுத்துகிறது: “அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்."
கிறிஸ்தவர்களாகிய நாம் நமது கேள்விகளுக்கு தேவனிடம் பதில் தேட வேண்டும். வேறு எந்த உயிரினத்தினிடமும் ஜெபம் செய்வது அல்லது "தொடர்புகொள்ள" செய்வது விக்கிரகாராதனையாகும். அப்போஸ்தலர்கள், மரியாள் மற்றும் பலர் உட்பட, மரித்துப்போன எந்தவொரு நபரிடமும் ஜெபிப்பது, ஒரு சடங்கை நடத்துவது மற்றும் மரித்த உறவினரிடம் தங்களுக்கு உதவுமாறு கேட்பது மிகவும் வேறுபட்டதல்ல. பெரும்பாலான அஞ்சனம் பார்க்கிறவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் மக்களை முட்டாளாக்க நினைவாற்றல் தந்திரங்கள், முன்னமே ஆயத்தம்பண்ணப்பட்ட கூட்டாளிகள் மற்றும் சிறப்பு விளைவுகளைப் பயன்படுத்தும் மோசடி செய்பவர்கள் ஆகும். மோசடி செய்யாதவர்கள் ஆபத்தான ஆவிக்குரிய மனிதர்களுடன் ஒத்துழைக்கின்றனர். சாத்தானின் அடியாட்கள் உதவி செய்யும் ஆவிகளாகத் தோன்றுவதில் திறமையானவர்கள், மறித்தவர்களிடம் பேசுவதன் மூலம் தங்களைத் தேடிவரும் மக்களைக் குழப்பி, ஊழல் செய்வதை எளிதாக்கிக் கொள்ளுகிறார்கள்.
English
மரித்தவர்களை தொடர்புகொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?