settings icon
share icon
கேள்வி

நான் எப்படி தேவனுடைய பிள்ளையாக முடியும்?

பதில்


தேவனுடைய பிள்ளையாக மாறுவதற்கு இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிற விசுவாசம் தேவையாயிருக்கிறது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).

"நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்"

நிக்கொதேமு என்னும் மதத் தலைவன் இயேசுவினிடத்தில் விஜயம் செய்தபோது, இயேசு உடனடியாக அவனுக்கு பரலோகத்திற்கு செல்லுவதற்கான உறுதியளிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவன் தேவனுடைய ஒரு பிள்ளையாக மாறவேண்டும் என்று கூறி, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்றார் (யோவான் 3: 3).

முதல் முறையாக ஒரு நபர் பிறக்கிறபோது, அவர் ஏதேன் தோட்டத்தில் ஆதாமின் கீழ்ப்படியாமையிலிருந்து உருவான பாவ சுபாவத்தை அவரிலிருந்து சுதந்தரித்துக்கொள்கிறார். பாவம் எப்படிச் செய்யவேண்டும் என்று ஒரு குழந்தைக்கு ஒருவரும் கற்பிக்க வேண்டியதில்லை. அந்த குழந்தை தன் சொந்த தவறான ஆசைகளை இயல்பாகவே பின்பற்றி, அதன்மூலமாக பொய், திருட்டு, வெறுப்பு போன்ற பாவங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறார். தேவனுடைய பிள்ளையாக இருப்பதற்குப் பதிலாக, அவர் கீழ்ப்படியாமையின் மற்றும் கோபாக்கினையின் பிள்ளையாயிருக்கிறார் (எபேசியர் 2:1-3).

கோபாக்கினையின் பிள்ளைகளாக, நாம் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு நரகத்தில் பங்கடைய வேண்டும். அதிர்ஷ்டவசமாக, எபேசியர் 2:4-5 கூறுகிறது, “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” நாம் கிறிஸ்துவுடன் எப்படி உயிரோடு எழுப்பப்படுகிறோம் / மறுபடியும் பிறக்கிறோம் / தேவனுடைய பிள்ளைகளாக உருவாக்கப்பட்டோம்? நாம் விசுவாசத்தினால் இயேசுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!

இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12.). தேவனுடைய பிள்ளையாக எப்படி ஆக்குவது என்று இந்த வசனம் தெளிவாக விளக்குகிறது. நாம் இயேசுவை விசுவாசத்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவைப் பற்றி நாம் என்ன நம்ப வேண்டும்? முதலாவதாக, இயேசுவே மனிதனான வந்த தேவனுடைய நித்திய குமாரன் என்பதை ஒரு தேவனுடைய பிள்ளை அறிந்துகொள்ளவேண்டும். இயேசு ஆதாமின் பாவ சுபாவத்திற்குரியவர் அல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் ஒரு கன்னியின் மகனாக பிறந்தார். ஆகையால்தான், இயேசு இரண்டாம் ஆதாம் என்று அழைக்கப்படுகிறார் (1 கொரிந்தியர் 15:22). ஆதாமின் கீழ்ப்படியாமை உலகத்திற்கு பாவத்தின் சாபத்தை கொண்டு வந்தபோது, கிறிஸ்துவின் பரிபூரணமான கீழ்ப்படிதல் ஒரு ஆசீர்வாதத்தை கொண்டுவருகிறதாக இருக்கிறது. நம்முடைய பதில் மனந்திரும்ப வேண்டும் (பாவத்திலிருந்து திரும்புதல்) மற்றும் கிறிஸ்துவில் மன்னிப்பைத் தேட வேண்டும்.

இரண்டாவதாக, ஒரு தேவனுடைய பிள்ளைக்கு இயேசுவின்மேல் இரட்சகராக விசுவாசம் வைத்து விசுவாசிக்கிறார். தேவனுடைய திட்டம், தம்முடைய பரிபூரணமான குமாரனை சிலுவையில் நாம் அடையவேண்டிய நம்முடைய பாவத்தின் தண்டனையை செலுத்தும்படிக்கு பலியிடுவதாய் இருந்தது: அதாவது அவரது சிலுவை மரணம். பாவத்தின் தண்டனை மற்றும் வல்லமையிலிருந்து அவரை ஏற்றுக்கொள்கிறவர்களை கிறிஸ்துவின் மரணம் விடுவிக்கிறது. அவரது உயிர்த்தெழுதல் நம்மை நீதிமான்களாக்குகிறது (ரோமர் 4:25).

இறுதியாக, தேவனுடைய பிள்ளையானவன் இயேசுவைக் கர்த்தராகப் பின்பற்றுகிறார். பாவம் மற்றும் மரணத்தின் மீது வெற்றிக்கொண்டவராக கிறிஸ்துவை எழுப்பின பிறகு, தேவன் அவருக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தார் (எபேசியர் 1:20-23). அவரை ஏற்றுக்கொள்கிற அனைவரையும் இயேசு வழிநடத்துகிறார்; அவரை நிராகரிக்கிற அனைவரையும் அவர் நியாயந்தீர்ப்பார் (அப்போஸ்தலர் 10:42). தேவனுடைய கிருபையால், நாம் தேவனுடைய பிள்ளையாக புதிய வாழ்க்கைக்கு மறுபடியும் பிறந்திருக்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் – வெறுமனே அவரை அறிந்துகொண்டதுமட்டுமின்றி, இரட்சிப்புக்காக அவரையே சார்ந்து, எஜமானனுக்கு கீழ்ப்படிதலைப் போல அவருக்கு கீழ்ப்படிந்து, மற்றும் அவரை மிக உயர்ந்த பொக்கிஷமாக நேசிக்கிறவர்கள் – தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.

ஒரு தேவனுடைய பிள்ளையாகுதல்

நம்முடைய இயற்கையான சரீர பிறப்பில் நமக்கு எந்த பங்கும் இல்லாதது போலவே, நாம் நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் அல்லது நம் சொந்த விசுவாசத்தினால் மன்றாடிக்கேட்பதன் மூலம் நாம் தேவனுடைய குடும்பத்தில் பிறக்கச்செய்ய முடியாது. தேவன் ஒருவரே தமது கிருபையுள்ள சித்தத்தின்படி நமக்கு இரக்கம் காண்பித்து நாம் தேவனுடைய பிள்ளைகளாகும்படிக்கு "அதிகாரம்” கொடுத்தார். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1). எனவே, தேவனுடைய பிள்ளைக்கு இதில் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை; அவருடைய ஒரே மேன்மை கர்த்தருக்குள் இருக்கிறது (எபேசியர் 2: 8-9).

ஒரு குழந்தை தன் பெற்றோரைப் போல் தோற்றமளிக்கத்தக்க நிலையில் வளர்கிறது. அவ்வாறே, தம் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவைப் போலவே அதிகமதிகமாய் வளர வேண்டுமென தேவன் விரும்புகிறார். பரலோகத்திலிருக்கிற போதுதான் நாம் பரிபூரணராக இருப்போம் என்கிறபோதிலும், தேவனுடைய பிள்ளை பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் பாவத்திலே உழன்று இருப்பதற்கு தன்னைப் பழகிக்கொள்ள மாட்டான். “பிள்ளைகளே நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராய் இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாய் இருக்கிறான். பாவஞ்செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல” (1 யோவான் 3: 7-10).

தவறு செய்யாதீர்கள் – தேவனுடைய பிள்ளை பாவஞ்செய்வதன் மூலம் "இல்லையென்று" கைவிடப்பட்டுள்ள நிலைக்கு செல்வதில்லை. ஆனால் கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் கவனத்தில் கொள்ளாமலேயே தொடர்ந்து பாவத்தை அனுபவிக்கிற ஒருவர் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறார். இப்படிப்பட்ட ஜனங்களைக் குறித்து இயேசு, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்” என்றார் (யோவான் 8:44). தேவனுடைய பிள்ளை மறுபுறம், பாவம் செய்து அதில் தன்னை திருப்திப்படுத்திக் கொள்ளாமல் பிதாவைக் குறித்தும் அறியவும், அன்பு செலுத்தவும், மற்றும் அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்கிற ஆசைகளை மட்டுமே கொண்டிருப்பான்.

தேவனுடைய பிள்ளையாக இருப்பதன் வெகுமதி அளவில்லாததாகும். தேவனுடைய பிள்ளை என்கிற நிலையில் நாம் அவருடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம் (திருச்சபை), பரலோகத்தில் ஒரு வீட்டிற்கு வாக்குறுதி அளித்திருக்கிறார், ஜெபத்தில் தேவனை அணுகுவதற்கு உரிமையைக் கொடுத்திருக்கிறார் (எபேசியர் 2:19; 1 பேதுரு 1:3-6; ரோமர் 8:15). தேவனுடைய அழைப்பின் சத்தத்திற்கு செவிகொடுத்து பாவத்தை விட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசியுங்கள். இன்றே தேவனுடைய பிள்ளையாகுங்கள்!

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

நான் எப்படி தேவனுடைய பிள்ளையாக முடியும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries