கேள்வி
ஒரு கிறிஸ்தவ தாயாக இருப்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
ஒரு தாயாக இருப்பது என்பது பெண்களுக்கு தேவன் கொடுப்பதற்கு தெரிந்துகொண்ட ஒரு மிக முக்கியமான பங்காக இருக்கிறது. ஒரு கிறிஸ்தவ தாய் தன் பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது (தீத்து 2:4-5), அப்படிசெய்வது மூலம் அவள் தரித்திருக்கும் இரட்சகரான தேவனுடைய நாமத்திற்கு நிந்தையை கொண்டுவரமாட்டாள்.
பிள்ளைகள் தேவனிடத்திலிருந்து வருகிற ஈவு ஆகும் (சங்கீதம் 127:3-5). தீத்து 2:4 ல் “பிலோடெக்னோஸ்” என்கிற கிரேக்க பதம் குழந்தையை நேசிக்கும் தாயைக் குறிக்கிறதாக இருக்கிறது. இந்த வார்த்தை சிறந்த நிலையிலுள்ள “தாயின் அன்பைக்” குறிக்கிறது. இவ்வார்த்தையில் இருந்து நமக்கு வெளியாகிற காரியங்கள் என்னவென்றால், தாயானவள் தன் பிள்ளைகளை பராமரிக்கவேண்டும், போஷித்து வளர்க்கவேண்டும், கட்டி அணைத்துக்கொள்ளவேண்டும், அவர்களுடைய தேவைகளை சந்திக்கவேண்டும், மற்றும் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தேவனுடைய கரத்திலிருந்து வந்த ஈவாக இருப்பதால், மென்மையான நட்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளே.
கிறிஸ்தவ தாய்மார்களைக் குறித்து பல்வேறுபட்ட காரியங்கள் தேவனுடைய வார்த்தையில் கட்டளையிடப்பட்டிருக்கிறது:
இருத்தல் (நேரத்தை ஒதுக்குதலில்): காலை, மதியம் மற்றும் இரவு (உபாகமம் 6:6-7)
தொடர்புடையாதாய் இருத்தல்: உரையாடுதல், கலந்துரையாடல், சிந்தித்தல், ஒன்றாக சேர்ந்து வாழ்தல் (எபேசியர் 6:4)
போதித்தல்: வேதவாக்கியங்களையும் வேதாகம கண்ணோட்டத்தையும் போதித்தல் (சங்கீதம் 78:5-6; உபாகமம் 4:10; எபேசியர் 6:4).
பயிற்றுவித்தல்: பிளையினுடைய திறமையை வளர்த்துக்கொள்ளல் மற்றும் அவன்/அவளுக்கு இருக்கும் பலம் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் என்ன என்பதை கண்டுகொள்ள உதவுதல் (நீதிமொழிகள் 22:6; ரோமர் 12:3-8 மற்றும் 1 கொரிந்தியர் 12).
சீர்படுத்துதல்: தேவ பயத்தை போதித்தல், தெடர்ச்சியாக வரைமுறைகளை நிர்ணயித்தல், அன்பாக, உறுதியாக சீர்படுத்துதல் (எபேசியர் 6:4; எபிரெயர் 12:5-11; நீதிமொழிகள் 13:24; 19:18; 22:15; 23:13-14; 29:15-17).
போஷித்தல்: தொடர்ச்சியான நிலையில் வாய்மொழி ஆதரவு கிடைக்ககூடிய சூழலை ஏற்படுத்துதல், தோல்வி குறித்த பயமின்மை, ஏற்பு, பாசம், நிபந்தனையற்ற அன்பு ஆகியவைகளில் கொண்டு வருதல் (தீத்து 2:4; 2 தீமோத்தேயு 1:7; எபேசியர் 4:29-32; 5:1-2; கலாத்தியர் 5:22; 1 பேதுரு 3:8-9).
நேர்மையில் முன்மாதிரி: வாழ்கிற படியே போதித்தல், பிள்ளைகள் தேவபக்தியுள்ள முறையில் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் விதத்தில் முன்மாதிரியான வாழ்கை வாழ்வது அவசியமாகும் (உபாகமம் 4:9, 15, 23; நீதிமொழிகள் 10:9; 11:3; சங்கீதம் 37:18, 37).
எல்லா பெண்களும் தாயாகயிருக்க வேண்டும் என்று வேதாகமம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. எனினும் யாரையெல்லாம் தாயாக இருக்கும்படி தேவன் ஆசீர்வதித்திருக்கிறாறோ அவர்கள் யாவரும் தங்கள் பொறுப்பிலே கவனமாகயிருக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. தாய்மார்களுக்கு தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் தனிப்பட்ட முக்கிய பங்கு இருக்கிறது. தாய்மை என்பது ஏதோ இடைக்கால வேலையோ அல்லது விரும்பத்தகாத வேலையோ அல்ல. எப்படி ஒரு தாயானவள் தன் கர்ப்பத்தில் பிள்ளையை சுமந்து, எப்படி பாலூட்டி அதனை வளர்த்து, குழந்தை பருவத்தில் எப்படி அக்கரைகாட்டுகிறாளோ, அதைப்போல தன் குழந்தையின் இளம் பருவம், இளமை பருவம், தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்தாலும் அவர்களுடைய வளர்ச்சியில் தாய்மார்களின் பங்கு நீடித்து இருக்கின்றது. தாய்மையின் பங்கு மாறினாலும் மற்றும் வளர்ச்சிபெற்றாலும் தாயின் அன்பு, கருசனை, போஷிப்பு, மற்றும் ஊக்குவிக்கும் முறைகள் ஒருபோதும் முடிவில்லாமல் இருந்துகொண்டேயிருக்கும்.
English
ஒரு கிறிஸ்தவ தாயாக இருப்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?