கேள்வி
ஒரு சபை அது பெறும் காணிக்கையிலிருந்து 10 சதவிகிதம் தர வேண்டுமா?
பதில்
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் உள்ள மக்கள் தங்களின் அனைத்து வருவாயிலும் தசமபாகம் (எழுத்தியல் படி, "பத்தில்" ஒரு பாகம்) கொடுக்க வேண்டும். தசமபாகமானது தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு சரியான பதிலாக விளங்கியது. நாம் "நியாயப்பிரமாணத்தின் கீழ்" இல்லை என்பதால் தசமபாகம் விசுவாசிகளுக்கு இன்னும் பொருந்துமா என்று இன்று பல தனிநபர்கள் கேள்வி எழுப்புகின்றனர். புதிய ஏற்பாட்டில் சபைகளுக்கு எத்தனை சதவிகிதம் கொடுக்கவேண்டும் என்கிற கட்டளை கொடுக்கப்படவில்லை என்றாலும், விகிதாசார கொடுப்பின் கொள்கை கற்பிக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 16:2; 2 கொரிந்தியர் 8), மற்றும் பல விசுவாசிகள் தசமபாகத்தை வழங்குவது தங்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியமாக கருதுகின்றனர். சபையில் உள்ள விசுவாசிகள் மற்ற ஊழியங்களுக்கு கொடுக்க சேகரிக்கிறார்கள் என்பதையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது.
ஒரு சபை மற்ற ஊழியங்களுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லுகிற ஒரு வசனம் இல்லாவிட்டாலும், சபைகள் கர்த்தர் அவர்களை ஆசிர்வதிப்பதினால் செழித்து வளர்வதால் மற்ற ஊழியங்களை அவர்கள் ஆதரிப்பதில் தாராளமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சில சபைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகின் பெரிய தேவைகளில் சமநிலையான கவனம் செலுத்த உதவுவதற்கான ஒரு வழியாக "வெளி ஊழியங்களுக்கு" தங்கள் பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கின்றன. ஒரு சபை தசமபாகமும் (10 சதவிகிதம்) அல்லது வெளி ஊழியங்களுக்கு மற்றொரு சதவிகிதம் கொடுப்பதும் வழக்கமல்ல. இது சட்டப்பூர்வ தேவையாக இருக்கக்கூடாது. மாறாக, இது கர்த்தருடைய ஆசிர்வாதத்தினால் வருகிற மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்க வேண்டும்.
English
ஒரு சபை அது பெறும் காணிக்கையிலிருந்து 10 சதவிகிதம் தர வேண்டுமா?