settings icon
share icon
கேள்வி

மனித குளோனிங் குறித்த கிறிஸ்தவ பார்வை என்ன?

பதில்


மனித குளோனிங் குறித்த விஷயத்தில் வேதாகமம் குறிப்பாக எதையும் கூறி கையாளவில்லை என்றாலும், வேதத்தில் அதற்கான சில பிரமாணங்கள் மற்றும் அதன் கருத்துக்கு வேதாகமத்தில் அதிக வெளிச்சம் கொடுக்கிறது. குளோனிங்கிற்கு டி.என்.ஏ (DNA) மற்றும் கரு செல்கள் ஆகிய இரண்டும் தேவையாயிருக்கிறது. முதலில், ஒரு உயிரினத்தின் கலத்தின் கருவிலிருந்து டி.என்.ஏ அகற்றப்படுகிறது. குறியிடப்பட்ட மரபணு தகவல்களைத் தாங்கிய பொருள், பின்னர் ஒரு கருக்கலத்தின் கருவில் வைக்கப்படுகிறது. புதிய மரபணு தகவல்களைப் பெறும் செல் புதிய டி.என்.ஏவை ஏற்றுக்கொள்வதற்காக அதன் சொந்த டி.என்.ஏவை அகற்றப்பட்டிருக்கும். செல்லானது புதிய டி.என்.ஏவை ஏற்றுக்கொண்டால், அதன்மூலமாக ஒரு போலி கரு உருவாகிறது. இருப்பினும், கருச்செல் புதிய டி.என்.ஏவை நிராகரித்து இறக்கக்கூடும். மேலும், கரு அதன் மூலக்கூறிலிருந்து அகற்றப்பட்ட அசல் மரபணுப் பொருளைக் கொண்டு உயிர்வாழக்கூடாது என்பது மிகவும் சாத்தியம். பல சந்தர்ப்பங்களில், குளோனிங் முயற்சி செய்யப்படுகையில், பல மரபணுக்கள் புதிய மரபணு பொருளை வெற்றிகரமான நிலையில் உருவாக்க மற்றும் சாத்தியங்களை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் ஒரு போலி தோற்றத்தை (உதாரணமாக, டோலி செம்மறியாடு) உருவாகும் சாத்தியம் இருந்தாலும், மாறுபாடுகள் இல்லாத ஒரு உயிரினத்தை வெற்றிகரமாக நகல் எடுக்கும் வாய்ப்புகளும் சிக்கல்களும் இல்லாமல் மிகவும் மெலிதாக இருக்கின்றன.

மனித குளோனிங் செயல்பாட்டில் கிறிஸ்தவ பார்வையானது பல வேத பிரமாணங்களின் ஒளியில் குறிப்பிடப்படலாம். முதலாவதாக, மனிதர்கள் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள், எனவே, அவர்கள் தனித்துவமானவர்கள். ஆதியாகமம் 1:26-27 மனிதன் தேவனுடைய சாயலிலும் ரூபத்தின்படியேயும் படைக்கப்பட்டான் என்றும் எல்லா படைப்புகளிலும் அவனது படைப்பு தனித்துவமானது என்றும் வலியுறுத்துகிறது. மனித வாழ்க்கை என்பது தெளிவாக மதிப்பிடப்பட வேண்டிய ஒன்று, மாறாக வெறுமனே வாங்கப்பட்டு விற்கப்பட வேண்டிய ஒரு பண்டமாக கருதப்படுவதில்லை. உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் போது பொருத்தமான உடலுறுப்புகளைக் கொண்ட நன்கொடையாளரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவ்வாறு உடலுறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு மாற்று உறுப்புகளை உருவாக்கும் நோக்கத்திற்காக சிலர் மனித குளோனிங்கை ஊக்குவித்துள்ளனர். ஒருவரின் சொந்த டி.என்.ஏவை எடுத்து அந்த டி.என்.ஏவைக் கொண்ட ஒரு நகல் உறுப்பை உருவாக்குவது உறுப்பு நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கும் என்பது அவர்களின் சிந்தனையாகும். இது ஒருவேளை உண்மையாக இருக்கும்போது, பிரச்சனை என்னவென்றால் அவ்வாறு செய்வது மனித வாழ்க்கையை மலிவுறச்செய்கிறது. குளோனிங் செயல்முறைக்கு மனித கருக்கள் பயன்படுத்தப்பட வேண்டும். புதிய உறுப்புகளை உருவாக்க செல்களை உருவாக்க முடியும் என்றாலும், தேவையான டி.என்.ஏவைப் பெற பல கருக்களைக் கொல்ல வேண்டியது அவசியம். சாராம்சத்தில், பல மனித கருக்களை "கழிவுப்பொருட்களாக" குளோனிங் “தூக்கி எறிந்துவிடும்”, மேலும் அந்த கருக்கள் முழு முதிர்ச்சியுடன் வளர வாய்ப்பையும் நீக்குகிறது.

உயிரின் தோற்றம் கருத்தரித்தலில் உருவாகும் கருவிலிருந்து தொடங்குவதில்லை என்று பலர் நம்புகிறார்கள், எனவே கருக்கள் உண்மையில் மனிதர்கள் அல்ல என்பது அவர்களின் வாதம். ஆனால் வேதாகமம் வித்தியாசமாக கற்பிக்கிறது. சங்கீதம் 139:13-16 கூறுகிறது, “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” எழுத்தாளர், தாவீது அவர் பிறப்பதற்கு முன்பே தேவனால் தனிப்பட்ட முறையில் அறியப்பட்டதாக அறிவிக்கிறார், அதாவது அவரது கருவில் உருவாகும்போதே தேவனால்-நியமிக்கப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு மனிதராக இருந்தார் என்பது தெளிவாகிறது.

மேலும், ஏசாயா 49:1-5ல் தேவன் ஏசாயா தாயின் வயிற்றில் இருந்தபோது அவனை ஒரு தீர்க்கதரிசியாக தனது ஊழியத்திற்கு அழைத்ததைப் பற்றி பேசுகிறார். மேலும், யோவான்ஸ்நானன் பரிசுத்த ஆவியினால் அவர் வயிற்றில் இருந்தபோது நிரப்பப்பட்டார் (லூக்கா 1:15). இவை அனைத்தும் கருத்தரித்தல் தொடங்கி வாழ்க்கையைப் பற்றிய வேதாகமத்தின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுகின்றன. இதன் வெளிச்சத்தில், மனித குளோனிங், மனித கருக்களை அழிப்பதன் மூலம், மனித உயிரைப்பற்றிய வேதாகம பார்வையுடன் ஒத்துப்போகாது.

மேலும், மனிதகுலம் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால், ஒரு சிருஷ்டிகர் இருக்க வேண்டும், எனவே மனிதகுலம் அந்த சிருஷ்டிகருக்கு உட்பட்டது மற்றும் பொறுப்புக்கூறக்கூடியது ஆகும். பிரபலமான சிந்தனை, மதச்சார்பற்ற-சிந்தனை, உளவியல் மற்றும் மனிதநேய சிந்தனை-மனிதன் தன்னைத் தவிர வேறு யாருக்கும் பொறுப்பாளி ஆகமுடியாது என்றும், மனிதனே இறுதி அதிகாரம் உடையவன் என்றும் ஒருவர் நம்புவார் என்றாலும், வேதாகமம் போதிக்கிறது என்னவோ வித்தியாசமானதாக இருக்கிறது. தேவன் மனிதனைப் படைத்து பூமியின்மீது பொறுப்பைக் கொடுத்தார் (ஆதியாகமம் 1:28-29, 9:1-2). இந்த பொறுப்புடன் சேர்ந்து தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தலும் வருகிறது. மனிதன் தன்னில்தானே இறுதி அதிகாரம் உடையவனல்ல, ஆகவே மனித வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி முடிவெடுக்கும் நிலையில் அவன் இல்லை. அப்படியானால், மனித குளோனிங், கருக்கலைப்பு அல்லது கருணைக்கொலை ஆகியவற்றின் நெறிமுறைகள் தீர்மானிக்கப்படும் அதிகாரம் அறிவியலுக்கல்ல. வேதாகமத்தின் கூற்றுப்படி, மனித வாழ்க்கையின் மீது முழு இறையாண்மை மற்றும் கட்டுப்படுத்துதல் அதிகாரம் உடையவர் தேவன் மட்டுமே. இதுபோன்றவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது, தன்னை தேவனின் நிலையில் நிறுத்துவதாகும். மனிதன் இதைச் செய்யக்கூடாது என்பது தெளிவாகிறது.

மனிதனை தனித்துவமான ஒரு படைப்பு அல்ல, வெறுமனே இன்னொரு உயிரினமாக நாம் கருதினால், பிறகு மனிதர்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தலுக்கு தேவைப்படும் வெறும் வழிமுறைகளாக பார்ப்பது கடினம் அல்ல. ஆனால் நாம் வெறும் மூலக்கூறுகள் மற்றும் ரசாயனங்களின் தொகுப்பு மட்டுமல்ல. தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தோடு சிருஷ்டித்திருக்கிறார் என்று வேதாகமம் போதிக்கிறது. மேலும், அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நம் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட உறவை நாடுகிறார். மனித குளோனிங்கின் அம்சங்கள் நன்மை பயக்கும் என்று தோன்றினாலும், குளோனிங் தொழில்நுட்பம் எங்கு செல்லக்கூடும் என்பதில் மனிதகுலத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நல்ல நோக்கங்கள் மட்டுமே குளோனிங்கின் பயன்பாட்டை வழிநடத்தும் என்று கருதுவது முட்டாள்தனம். மனிதர்களின் குளோனிங்கை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு அல்லது தீர்ப்பை செயல்படுத்துகிற நிலையில் மனிதன் இல்லை.

மனித குளோனிங் ஒரு நாள் வெற்றிகரமாக இருக்கும் என்று கருதி, ஒரு குளோன் செய்யப்பட்ட மனிதனுக்கு ஒரு ஆத்துமா இருக்குமா என்பதுதான் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. ஆதியாகமம் 2:7 கூறுகிறது, “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” தேவன் ஒரு ஜீவனுள்ள, மனித ஆத்துமாவை உருவாக்குவதன் விவரணம் இங்கே இருக்கிறது. ஆத்மாக்கள் என்பது நாம் யாராக இருக்கிறோம் என்பதாகும் மாறாக நாம் என்னக் கொண்டிருக்கிறோம் என்பதல்ல (1 கொரிந்தியர் 15:45). மனித குளோனிங் மூலம் எந்த வகையான உயிருள்ள ஆத்துமா உருவாக்கப்படும் என்பதுதான் கேள்வி. அது தீர்க்கமாக முடிவான ஒரு பதிலளிக்கக்கூடிய கேள்வி அல்ல. இருப்பினும், ஒரு மனிதன் வெற்றிகரமாக குளோன் செய்யப்பட்டால், குளோனானது ஒரு மனிதனைப் போலவே இருக்கும், அதில் நித்திய ஆத்மா இருப்பது உட்பட, வேறு எந்த மனிதனையும் போலவே அது இருக்கும்.

English



முகப்பு பக்கம்

மனித குளோனிங் குறித்த கிறிஸ்தவ பார்வை என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries