கேள்வி
கூட்டு இரட்சிப்பு என்றால் என்ன?
பதில்
அடிப்படையில், "கூட்டு இரட்சிப்பு" என்றால் "நாம் அனைவரும் இரட்சிக்கப்படாவிட்டால், நம்மில் யாரும் இரட்சிக்கப்பட மாட்டோம்" அல்லது "தனிநபர்களாகிய நாம் முழு நன்மைக்காக ஒத்துழைக்க வேண்டும் மற்றும் தியாகம் செய்ய வேண்டும்." கூட்டு இரட்சிப்பின் அர்த்தம் என்ன என்பதைக் கூறுவதற்கான மற்றொரு வழி, “என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியாது. மற்றவர்களின் இரட்சிப்பை உறுதிப்படுத்த, குழுவுடன் ஒத்துழைப்பதன் மூலம், தியாகம் செய்வதன் மூலம் நான் எனது பங்கைச் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் ஒன்றாக இரட்சிக்கப்படுகிறோம்." எவ்வாறாயினும், இரட்சிப்பு என்பது சிலுவையில் கிறிஸ்துவின் பலியின் மூலம் தேவன் தனிநபர்களை இரட்சிக்கும் ஒரு செயல்முறை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. ஒவ்வொரு நபரும் கிறிஸ்துவிடம் தனித்தனியாக வர வேண்டும், கூட்டாக அல்ல.
சமூக மற்றும் தார்மீக இலக்குகளை அடைவதற்காக பல முக்கியமான புராட்டஸ்டன்ட் திருச்சபைகள் கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம், கிழக்கத்திய மாய மதங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தழுவுவதற்குத் தயாராக இருப்பதால் கூட்டு இரட்சிப்பு என்பது எல்லா மதங்களையும் உட்படுத்திய இயக்கத்திற்கு ஒத்ததாகும். அவர்களின் எண்ணம் என்னவென்றால், போதுமான தெய்வ பக்தியுள்ள மக்கள் ஒன்றிணைந்தால், அனைத்து அறநெறிகளையும் கைவிட்ட சமூகங்களில் தெவனற்ற புறமதத்திற்கும் தீமைக்கும் எதிரான போரில் வெற்றிபெற முடியும். பொது நலனுக்காக அனைத்து தனிமனிதர்களும் ஒத்துழைத்து தியாகம் செய்தால், அனைத்து சமூகக் கேடுகளும் ஒழிந்துவிடும் என்பது நம்பிக்கை. வேதாகமப் போதனையின் நூலினால் நெருக்கமாக இழையப்பட்டுள்ள கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புனிதப் போரில் திருச்சபை இருப்பதாக எல்லா மதங்களையும் உட்படுத்திய இயக்கத்தைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர், மேலும் கோட்பாட்டின் மீதான நமது கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, சிதைந்து வரும் உலகத்திற்கு எதிராக இந்தப் போரை நடத்த ஒன்று சேர வேண்டும் என்கின்றனர்.
எக்குமினிசம் அல்லது கூட்டு இரட்சிப்புக்கான கோட்பாட்டாளர்கள் பெரும்பாலும் யோவான் 17-ஐத் தங்கள் ஆதார வேதப்பகுதியாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் கருத்து என்னவெனில், இயேசு எல்லோருடனும் பழக வேண்டும் என்று ஜெபிக்கிறார், ஆகவே நமக்குள்ளே சண்டை போடக்கூடாது என்பதாகும். ஆனால் உண்மையில் அவருடைய ஜெபம் அவருடைய சீடர்களுக்காக மட்டுமே இருந்தது-அவரைப் பின்பற்றும் அனைவருக்கும், மற்ற அனைவரையும் தவிர்த்து-அவர்கள் ஒரு பொதுவான பிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும், தேவனுடைய ஆவியில் ஒருமைப்படுவார்கள், இது இறுதியில் பெந்தெகொஸ்தே நாளில் உணரப்பட்டது (அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்). கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்கள் மீது வந்தபோது, அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஆவியானவரால் ஞானஸ்நானம் பெற்றபோது, தேவன் கிறிஸ்தவர்களிடையே இந்தப் பொதுவான பிணைப்பை உருவாக்கினார். பவுல் 1 கொரிந்தியர் 6:17ல், "அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்" என்று கூறியபோது இதை இவ்வாறு சுருக்கமாகக் கூறினார்.
கூட்டு இரட்சிப்பின் கருத்தின் பிரச்சனை என்னவென்றால், அது வேதத்தில் எங்கும் காணப்படவில்லை. கூட்டு இரட்சிப்பின் முக்கிய கூறுகளில் ஒன்று, இன்று நம் சமூகத்தில் ஊடுருவி வரும் அனைத்து ஒழுக்கக்கேடுகளிலிருந்தும் உலகிலிருந்து விடுபட ஒரு ஒருங்கிணைந்த முயற்சியில் திருச்சபை ஒன்றிணைய வேண்டும் என்ற ஏமாற்றும் சிந்தனையுடன் தொடர்புடையது. இருப்பினும், புதிய ஏற்பாட்டில் இயேசுவோ அல்லது அப்போஸ்தலர்களோ அரசாங்கங்கள் உட்பட தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்ததாக எந்த நிகழ்வும் இல்லை. அவர்கள் கற்பித்தது என்னவென்றால், ஒருவரின் இரட்சிப்பு கிறிஸ்துவின் நற்செய்தியின் மூலம் ஒரு தனிப்பட்ட மட்டத்தில் மட்டுமே உள்ளது, கூட்டாக அல்ல. கிறிஸ்து தனிநபரின் இருதயத்திற்கு வருகிறார், நுழைவதைத் தட்டுகிறார், மேலும் பரிசுத்த ஆவியின் சக்தி மற்றும் அசைவினால், நாம் அவருக்கு நம் இருதயத்தின் கதவைத் திறக்கிறோம் (1 கொரிந்தியர் 2:12-16; வெளிப்படுத்துதல் 3:20).
கூட்டு இரட்சிப்பு அல்லது எக்குமினிசம் என்ற கருத்தாக்கத்தின் மிகவும் பிரச்சனையான அம்சங்களில் ஒன்று, கலாச்சாரப் போரை எதிர்த்துப் போராடுவதே நமது நோக்கம், நாம் ஒருவித மனித சக்தித் தளம், பெரிய தொகுதிகளில் வாக்களிப்பதன் மூலம் அல்லது பரப்புரை மூலம் அரசாங்கங்களைச் செல்வாக்கு செலுத்த முடியும். நமது சமூகத்தில் அறநெறியைப் பாதுகாக்கவும் அங்கீகரிக்கவும் கூடிய நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்யலாம். ஆனால் இது கிறிஸ்தவரின் பங்கு அல்ல என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார்: "அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்" (2 தீமோத்தேயு 3:12-13). நமது கிறிஸ்தவ வேதாகம ஆணைக்கு அரசியல் ரீதியாகவோ, அமைப்பு ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ செய்யப்படுகிற எந்தவொரு கூட்டு ஒழுக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கிறிஸ்து மூலம் தனிப்பட்ட இரட்சிப்புக்கு மற்றவர்களை அழைக்கும் கிறிஸ்துவின் பிரதான ஆணையுடன் நம்முடைய ஆணை அனைத்தையும் கொண்டுள்ளது.
English
கூட்டு இரட்சிப்பு என்றால் என்ன?