settings icon
share icon
கேள்வி

ஜெபம் எவ்வாறு தேவனுடன் தொடர்பு கொள்கிறது?

பதில்


நம்மோடு தொடர்பு கொள்ளுகிற தேவனுடைய தகவல்தொடர்பு தன்மையை புரிந்துகொள்வதற்கும், அவருடனான நம்முடைய தகவல் தொடர்பை புரிந்துகொள்ளவும், சில முக்கியமான பிரமாணங்களுடன் தொடங்க வேண்டும். முதலாவது தேவன் உண்மையை மட்டுமே பேசுகிறார் என்பதாகும். அவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார், அவர் ஒருபோதும் ஏமாற்றுபவரும் அல்ல. யோபு 34:12 இப்படியாக அறிவிக்கிறது, “தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.” இரண்டாவது பிரமாணம் என்னவென்றால், வேதாகமமானது தேவனுடைய வார்த்தைகளாக இருக்கிறது என்பதாகும். பழைய ஏற்பாட்டின் வேதவாக்கியங்களை விவரிக்க புதிய ஏற்பாட்டில் “வேதவாக்கியங்கள்” என்கிற வார்த்தைக்கு கிராஃபே என்ற கிரேக்க சொல் 51 முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைகள் உண்மையில் "தேவனால் சுவாசிக்கப்பட்டவை" என்று பவுல் 2 தீமோத்தேயு 3:16 ல் உறுதிப்படுத்துகிறார். கிராஃபே என்ற சொல் புதிய ஏற்பாட்டிற்கும் பொருந்தும், குறிப்பாக அப்போஸ்தலனாகிய பேதுரு 2 பேதுரு 3:16-ல் பவுலின் நிருபங்களை “வேதவாக்கியங்கள்” என்று அழைக்கிறார், அப்போஸ்தலனாகிய பவுல் (1 தீமோத்தேயு 5:18 ல்) லூக்கா 10:7ல் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டும்போது அவற்றை "வேதவாக்கியங்கள்" என்று அழைக்கிறார். ஆகவே, ஒரு புதிய ஏற்பாட்டு எழுத்து "வேதவாக்கியங்கள்" என்ற சிறப்பு வகையைச் சேர்ந்தது என்பதை நாம் நிறுவியவுடன், அந்த எழுத்துக்கும் 2 தீமோத்தேயு 3:16 ஐப் பயன்படுத்துவதில் நாம் சரியானவர்கள், மேலும் அந்த எழுத்துக்கும் உள்ளது பண்புகளை பவுல் "எல்லா வேதவாக்கியங்களுக்கும்" ஏற்றதாக கூறுகிறார். இது “தேவன் அருளினார்”, மற்றும் அதன் எல்லா வார்த்தைகளும் தேவனுடைய வார்த்தைகள் என்பதாகும்.

இந்த தகவல் ஏன் ஜெபத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது? தேவன் உண்மையை மட்டுமே பேசுகிறார் என்பதையும், வேதாகமம் தேவனுடைய வார்த்தைகள் என்பதையும் இப்போது நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், தேவனுடன் தொடர்புகொள்வது குறித்த பின்வரும் இரண்டு முடிவுகளுக்கு நாம் தர்க்கரீதியாக வரலாம். முதலாவதாக, தேவன் மனிதனுக்கு செவிகொடுத்து அவனைக் கேட்பார் என்று வேதாகமம் கூறுவதால் (சங்கீதம் 17:6; 77:1; ஏசாயா 38:5), மனிதன் தேவனோடு சரியான உறவில் இருக்கும்போது, அவன் தேவனிடம் பேசும்போது, தேவன் அவனைக் கேட்பார் என்று நம்பலாம். இரண்டாவதாக, வேதாகமம் தேவனுடைய வார்த்தைகள் என்பதால், மனிதன் தேவனுடன் சரியான உறவில் இருக்கும்போது, அவன் வேதாகமத்தைப் படிக்கும்போது, தேவன் பேசும் வார்த்தையை அவன் உண்மையில் கேட்கிறான் என்று நம்பலாம். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆரோக்கியமான தகவல்தொடர்புக்கு அவசியமான தேவனுடனான சரியான உறவு மூன்று வழிகளில் சாட்சியமளிக்கிறது. முதலாவது பாவத்திலிருந்து திரும்புவது அல்லது மனந்திரும்புதல். உதாரணமாக, சங்கீதம் 27:9, தாவீது அவரைக் கேட்டு, கோபத்தில் அவரிடமிருந்து விலகிவிடக் கூடாது என்று வைக்கும் வேண்டுகோள். இதிலிருந்து, தேவன் தன் முகத்தை மனிதன் பாவம் செய்யும்போது விலக்குகிறார் என்பதையும், பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்புக்குத் தடையாக இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஏசாயா 59:2-ல் காணப்படுகிறது, அங்கு ஏசாயா தீர்க்கதரிசி ஜனங்களிடம், “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.” ஆகவே, நம் வாழ்வில் பாவம் அறிக்கைச்செய்யப்படாத பாவம் இருக்கும்போது, அது தேவனுடனான தொடர்புக்குத் தடையாக இருக்கும்.

தகவல்தொடர்புக்கு அவசியம் ஒரு தாழ்மையான இருதயம். ஏசாயா 66:2-ல் தேவன் பின்வரும் இந்த வார்த்தைகளைப் பேசுகிறார், “என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.” மூன்றாவது நீதியான வாழ்க்கை. இது பாவத்திலிருந்து திரும்புவதற்கான நேர்மறையான பக்கமாகும், மேலும் இது ஜெபத்தின் செயல்திறனால் குறிக்கப்படுகிறது. யாக்கோபு 5:16 கூறுகிறது, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”

தேவனிடம் நாம் பேசுவது ஒருவேளை குரல் சப்தமாக, நம் மனதில் அல்லது எழுதப்பட்டதாக இருக்கலாம். அவர் நம்மைக் கேட்பார் என்றும், நாம் ஜெபிக்க வேண்டியதை ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவார் என்றும் நாம் நம்பலாம். ரோமர் 8:26 கூறுகிறது, “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.”

தேவனிடம் நம்மைத் தொடர்புகொள்வதற்கான முறையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட செயல்களுக்கோ அல்லது முடிவுகளுக்கோ நம்மை வழிநடத்துவதற்காக தேவன் எப்போதும் எண்ணங்களை நம் மனதில் நேரடியாக வைப்பார் என்று நம்புவதை விட, முதன்மையாக வேதத்தின் மூலம் நம்மிடம் பேச தேவனைத் தேட வேண்டும். சுய வஞ்சகத்திற்கான நமது திறனின் காரணமாக, நம் மனதில் நுழையும் எந்தவொரு எண்ணமும் தேவனிடமிருந்து வந்தவை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. சில நேரங்களில், நம் வாழ்வில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து, தேவன் நேரடியாக வேதத்தின் மூலம் நம்மிடம் பேசுவதில்லை, மேலும் அந்த நிகழ்வுகளில் வேதாகமத்திற்கு புறம்பான வெளிப்பாட்டைத் தேடுவது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இருப்பினும், இதுபோன்ற சமயங்களில், தேவனின் வாயில் வார்த்தைகளை வைப்பதைத் தவிர்ப்பதற்கும் / அல்லது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு திறந்து வைப்பது தவிர்க்க அவர் ஏற்கனவே நமக்கு அளித்துள்ள வேதாகமக் கொள்கைகளைக் குறிப்பிடுவதன் மூலம் பதில்களைக் கண்டுபிடிப்பது மிகவும் புத்திசாலித்தனம்.

சரியான முடிவுகளுக்கு வருவதற்கு தேவையான ஞானம் வேண்டி ஜெபிப்பதும் அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் அப்படி ஞானத்தைக் கேட்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக்கோபு 1:5). ஜெபம் தேவனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது? ஜெபம் என்பது நம்முடைய இருதயங்களிலிருந்து நம்முடைய பரலோகத் தகப்பனிடம் பேசுவதும், அதற்குப் பிரதியுத்திரமாக, தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் தேவன் பேசுவதும், அவருடைய ஆவியின் வழிநடத்துதலால் நம்மை வழிநடத்துவதும் ஆகும்.

English



முகப்பு பக்கம்

ஜெபம் எவ்வாறு தேவனுடன் தொடர்பு கொள்கிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries