settings icon
share icon
கேள்வி

கம்யூனிசம் வேதாகமம் யாவை?

பதில்


சோசிலிசத்தின் ஒரு கிளையான கம்யூனிசம், முதல் பார்வையில், இலட்சியங்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோதனை சமூக அமைப்பாக சில வேதாகமக் கொள்கைகளுடன் ஒத்துப்போவது போல் தோன்றும். இருப்பினும், கூர்ந்து ஆராயும்போது, வேதாகமம் உண்மையாகவே கம்யூனிசத்தை ஒப்புதல் அளிக்கிறது அல்லது ஆதரிக்கிறது என்பதற்கான மிகக் குறைந்த ஆதாரங்களையேக் காணலாம். கோட்பாட்டில் உள்ள கம்யூனிசத்திற்கும் நடைமுறையில் காணப்படுகின்ற கம்யூனிசத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, மேலும் கம்யூனிச கொள்கைகளுக்கு இணங்குவதாகத் தோன்றும் வேதாகம வசனங்கள் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் நடைமுறைகளால் முரண்படுகின்றன.

அப்போஸ்தலர் 2 இல் உள்ள திருச்சபையின் விளக்கத்தில் ஒரு ஆச்சரியமான வாக்கியம் உள்ளது, இது வேதாகமம் கம்யூனிசத்தை ஆதரிக்கிறதா என்று பலர் ஆச்சரியப்படுவதற்கு வழிவகுத்தது, மேலும் கம்யூனிசம் உண்மையில் வேதாகமத்தின்படியானதா என்கிற கருத்தை வலுவாகப் பாதுகாக்க சிலரை வழிநடத்தியது. வேதப்பகுதி கூறுகிறது, “விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்” (அப்போஸ்தலர் 2:44-45). இந்த அறிக்கையானது கம்யூனிசம் (இதன் இருதயத்தில், "சுற்றிலும் செல்வத்தை பரப்புவதன் மூலம்" வறுமையை அகற்றும் விருப்பம் உள்ளது) கிறிஸ்தவ திருச்சபைகளின் ஆரம்ப காலத்திலேயே இங்கு காணப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இருப்பினும், அப்போஸ்தலர் 2 இல் உள்ள திருச்சபைக்கும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு கம்யூனிச சமுதாயத்திற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.

அப்போஸ்தலர் 2 திருச்சபையில், மக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு ஒருவருக்கொருவர் கொடுத்து, அவர்கள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் தாராளமாய்க் கொடுத்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அன்பினாலும், பொதுவான குறிக்கோளினாலும், கிறிஸ்துவுக்காக வாழ்வது மற்றும் தேவனை மகிமைப்படுத்துவது போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு கம்யூனிச சமுதாயத்தில், மக்கள் கொடுக்கிறார்கள், ஏனென்றால் அரசாங்க அமைப்பு அவர்களை கொடுக்க வேண்டும் என்கிறது. அவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்கள் அல்லது யாருக்கு கொடுக்கிறார்கள் என்பதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, அவர்கள் யார் என்பதை இது பிரதிபலிக்காது; அது அவர்களின் அடையாளம் அல்லது தன்மை பற்றி எதுவும் கூறவில்லை. கம்யூனிசத்தின் கீழ், அவர்கள் சம்பாதிக்கும் அனைத்திலும், மகிழ்ச்சியான நிலையில், தாராளமாக கொடுப்பவர் மற்றும் கஞ்சத்தனமான மனிதர் இருவரும் ஒரே தொகையை கொடுக்க வேண்டும்—அதாவது.

இங்கே பிரச்சனைகளுள் ஒன்று என்னவென்றால் கட்டாயமாகக் கொடுப்பதற்கு எதிராக மகிழ்ச்சியுடன் கொடுப்பது (வேதாகமம் ஆதரிக்கிறது) ஆகும். 2 கொரிந்தியர் 9:7 கூறுகிறது, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” எல்லாவற்றிற்கும் மேலாக, ஏழைகளுக்கு உதவுதல், நம்மிடம் உள்ளதை தாராளமாக கொடுத்தல் மற்றும் வசதி குறைந்த ஏழ்மையாக உள்ளவர்களைக் கவனிப்பது போன்ற ஏராளமான குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. சரியான உந்துதலுடன் மகிழ்ச்சியான இருதயத்துடன் இந்தக் காரியத்தில் நாம் கீழ்ப்படிந்தால், நாம் கொடுப்பது தேவனுக்குப் பிரியமானது. தேவனுக்குப் பிரியமில்லாதது நிர்ப்பந்தத்தால் கொடுப்பதாகும், ஏனென்றால் கட்டாயமாகக் கொடுப்பது அன்பினால் கொடுக்கப்படுவதில்லை, எனவே ஆவிக்குரிய அர்த்தத்தில் எந்தப் பயனும் இல்லை. பவுல் கொரிந்தியர்களிடம் கூறுகிறார், "எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை" (1 கொரிந்தியர் 13:3). அன்பில்லாமல் கொடுப்பது கம்யூனிசத்தின் தவிர்க்க முடியாத விளைவு.

முதலாளித்துவம் உண்மையில் ஒரு சிறந்த அமைப்பாகும், அது கொடுக்கும்போது, அது தனிப்பட்ட செல்வத்தை அதிகரிப்பதில் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது அதன் குடிமக்கள் தங்கள் அதிகரிப்பிலிருந்து கொடுக்க அனுமதிக்கிறது. செல்வம் எங்கு செல்கிறது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தில் உள்ள மிகச் சிலரைத் தவிர, கம்யூனிசம் அதன் குடிமக்கள் அனைவரையும் ஏழைகளாக்குவதையே நிரூபித்துள்ளது. ஆனால் முதலாளித்துவம் கூட ஏழைகளுக்கு உதவுவதற்கான ஒரு அமைப்பாக செயல்படாது. அதன் குடிமக்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் (நீதிமொழிகள் 10:4) மற்றும் அவர்களின் உழைப்பின் பலன்களைக் கொண்டு தாராளமாக இருக்க வேண்டும் (1 தீமோத்தேயு 6:18) மற்றும் தேவன் மற்றும் அயலார்கள் மீது அன்பினால் கொடுக்க வேண்டும். ஆகவே, ஏழைகளின் பொருள் மற்றும் நிதித் தேவைகளை எந்தவொரு அரசாங்க முறைமையாலும் அல்லாமல், கிறிஸ்தவ தனிநபர்களால் பூர்த்தி செய்ய தேவன் வடிவமைத்திருப்பதைக் காண்கிறோம்.

English



முகப்பு பக்கம்

கம்யூனிசம் வேதாகமம் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries