கேள்வி
நான் எனது விபச்சாரத்தை என் மனைவியிடம் அறிக்கை செய்ய வேண்டுமா?
பதில்
விபச்சாரத்தின் பாவத்தை தன் துணையிடம் ஒப்புக்கொள்வதா இல்லையா என்பது விபச்சாரத்திற்கு அடிபணிந்த துரதிர்ஷ்டவசமான அனுபவத்தைப் பெற்ற பல கிறிஸ்தவர்களுக்கு ஒரு குழப்பமாக உள்ளது. உலக "நிபுணர்கள்" பொதுவாக விபச்சாரம் செய்பவர்கள் தங்கள் துரோகங்களைப் பற்றி வாயை மூடிக்கொண்டு இருக்க ஊக்குவிக்கிறார்கள், அறிக்கைப் பண்ணினதால் மோசமான சேதம் ஏற்படும் என்று அறிவிக்கிறார்கள். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இது ஒருவரின் மனசாட்சியை முடக்குகிறது மற்றும் அறிக்கை செய்வது உள்ளடக்கிய உறவுகளை மீட்டெடுக்க அனுமதிக்காது. யாக்கோபு 5:16 கூறுகிறது, "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது."
அப்போஸ்தலனாகிய பவுல் ஞானமாகக் கூறினார், "இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்" (அப்போஸ்தலர் 24:16). விபச்சாரம் தேவனுக்கு எதிரான பாவம் என்றாலும், முதன்மையாக, நம் உடல்கள் நமக்குச் சொந்தமானது அல்ல, மாறாக நாம் திருமணம் செய்துகொண்டவருக்கு சொந்தமானது என்று வேதாகமம் கூறுகிறது (1 கொரிந்தியர் 7:4). தாம்பத்தியத்தின் உடலுறவு என்பது, திருமணமான தம்பதிகள், தேவன் அவர்களைத் திருமணத்தில் இணைக்கும்போது அவர்கள் ஒரே மாம்சமாக மாறுவதற்கான அடையாளமாகும் (1 கொரிந்தியர் 6:15-16). இந்த காரணங்களுக்காக, விபச்சாரம் செய்த ஒரு நபர் ஜெபிக்க வேண்டும் மற்றும் பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்த அனுமதிக்க வேண்டும், சரியான நேரத்தில் துரோகத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஒரு குற்றமுள்ள மனசாட்சி அதை புறக்கணிக்க முயற்சிப்பதால் வெறுமனே போய்விடாது. இது உண்மையில் உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு கூட வழிவகுக்கும். கணவன் அல்லது மனைவி துரோகம் செய்ததாக எவருக்கும் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்தாலும், அது திருமணத்தின் நேர்மைக்கு மட்டுமல்ல, நபருக்கும் தேவனுக்கும் இடையிலான உறவுக்கும் அவசியம், இதனால் அவர்களின் மனசாட்சி தெளிவாக சுத்தமாக இருக்கும். மேலும் அவர்கள் பரிசுத்தமான மற்றும் குற்றமற்ற வாழ்க்கையை வாழ முடியும்.
English
நான் எனது விபச்சாரத்தை என் மனைவியிடம் அறிக்கை செய்ய வேண்டுமா?