கேள்வி
நாம் யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமா அவர்களிடம் நாம் நம்முடைய பாவங்களை அறிக்கப்பண்ண வேண்டுமா?
பதில்
நம்முடைய பாவங்களை தேவனிடம் அறிக்கைப்பண்ண வேண்டும் என்பது நமக்குத் தெரியும், ஆனால் பல கிறிஸ்தவர்கள் நாம் யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமோ அவர்களிடமும் அறிக்கைப்பண்ண வேண்டுமா என்று ஆச்சரியப்படுகிறார்கள். நாம் நாம் யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமோ அவர்களிடம் மன்னிக்கவும் என்று கேட்க வேண்டுமா? "ஒளியில் நடத்தல்" (1 யோவான் 1:7) என்றால் நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கிறோம் என்று அர்த்தம். அதே வசனத்தில், கிறிஸ்துவின் மூலம் மன்னிப்பு மற்றும் "ஒருவருக்கொருவர் ஐக்கியப்படுதல்" பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, "சுத்தமான இருதயம்" வைத்திருப்பதற்கும் மற்றவர்களுடனான நமது உறவுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.
ஒவ்வொரு பாவமும் இறுதியில் தேவனுக்கு எதிராக செய்யப்படுகிறது (சங்கீதம் 51:4). நம்முடைய பாவங்களை அவரிடம் அறிக்கைப்பண்ண வேண்டியதன் அவசியத்தை வேதாகமம் தொடர்ந்து வலியுறுத்துகிறது (சங்கீதம் 41:4; 130:4; அப்போஸ்தலர் 8:22; 1 யோவான் 1:9). நம் பாவங்களை ஜனங்களிடம் அறிக்கையிடுவதைப் பொறுத்தவரை, வேதாகமம் எந்த ஒரு கட்டளையையும் கொடுக்கவில்லை. நம்முடைய பாவங்களை கர்த்தரிடம் அறிக்கையிடுமாறு பலமுறை கூறப்பட்டாலும், வியாதியுற்றவர்களுக்காக சபையின் மூப்பர்கள் ஜெபிக்கும் சூழலில்தான் வேறொருவரிடம் அறிக்கையிட வேண்டும் என்ற ஒரே நேரடியான கட்டளை உள்ளது (யாக்கோபு 5:16).
நாம் ஒருபோதும் மற்றொரு நபரிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மற்றவர்களிடம் அறிக்கைச்செய்ததற்கான உதாரணங்களை வேதாகமம் தருகிறது. ஒன்று, ஆதியாகமம் 50:17-18ல் யோசேப்பின் சகோதரர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்பது. லூக்கா 17:3-4 போன்ற வேதப்பகுதிகளில் நபருக்கு நபர் அறிக்கைப்பண்ணுதல் மறைமுகமாக உள்ளது; எபேசியர் 4:32; மற்றும் கொலோசெயர் 3:13.
இங்குள்ள கொள்கைகள் 1) ஒவ்வொரு பாவத்திற்கும் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் "உள்ளத்தில் உண்மையிருக்க" விரும்புகிறார் (சங்கீதம் 51:6). 2) கர்த்தருடனான நமது உறவு சரியாக இருந்தால், மற்றவர்களுடனான நமது உறவுகள் சரியாகும். மற்றவர்களிடம் கிருபையோடும், நீதியோடும் நேர்மையோடும் நடந்து கொள்வோம் (சங்கீதம் 15). ஒருவருக்கு எதிராக பாவம் செய்து அதைச் சரி செய்ய முயற்சிக்காமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாதது. 3) ஒரு பாவத்திற்கான மன்னிப்பின் அளவு பாவத்தின் தாக்கத்தின் அளவோடு பொருந்த வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குணப்படுத்துவதை உறுதி செய்வதற்காக நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு ஆண் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தால், அவன் உடனடியாக கர்த்தரிடம் பாவத்தை அறிக்கைப்பண்ண வேண்டும். அந்தப் பெண்ணிடம் அந்தப் பாவத்தை அறிக்கைப்பண்ணுவது அவசியமாகவோ பொருத்தமானதாகவோ இருக்காது. அந்த பாவம் மனிதனுக்கும் கர்த்தருக்கும் இடையில் உள்ளது. இருப்பினும், ஒரு ஆண் வாக்குறுதியை மீறினால், அல்லது பெண்ணை நேரடியாக பாதிக்கும் வகையில் ஏதாவது செய்தால், அவன் அவளிடம் அறிக்கைப்பண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு பாவம் ஒரு திருச்சபை போன்ற ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஜனங்களை உள்ளடக்கியிருந்தால், ஒரு ஆணோ பெண்ணோ பின்னர் அறிக்கையை திருச்சபையின் உறுப்பினர்களுக்கு கூற வேண்டும். எனவே அறிக்கைப்பண்ணுதலும் மன்னிப்பும் தாக்கத்துடன் பொருந்த வேண்டும். பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அறிக்கைப்பண்ணுதலைக் கேட்க வேண்டும்.
தேவனுடனான நமது மன்னிப்பு, நம்முடைய பாவங்களை மற்றவர்களிடம் அறிக்கைப்பண்ணுதலையும் / அல்லது அவர்கள் நம்மை மன்னிப்பதையும் சார்ந்து இல்லை என்றாலும், நம்முடைய தவறுகள் குறித்து மற்றவர்களிடம் நேர்மையாக இருக்கவும் வரவும் தேவன் நம்மை அழைக்கிறார், குறிப்பாக நம்முடைய தவறுகள் அவர்களை உள்ளடக்கியிருக்கும் போது. நாம் மற்றவர்களைப் புண்படுத்தியிருந்தால் அல்லது பாவம் செய்திருந்தால், நேர்மையான மன்னிப்பு மற்றும் அறிக்கைப்பண்ணுதல் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு வழங்கப்படுமா என்பது யாருக்கு அறிக்கைப்பண்ணினோமோ அவர்களைப் பொறுத்தது. உண்மையாக மனந்திரும்பி, பாவத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்பது நமது பொறுப்பு.
English
நாம் யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமா அவர்களிடம் நாம் நம்முடைய பாவங்களை அறிக்கப்பண்ண வேண்டுமா?