கேள்வி
கன்பூசியனிசம் என்றால் என்ன?
பதில்
நம்பிக்கையூட்டும் மனித நேயத்தின் மதமான கன்பூசியனிசம், சீனாவின் வாழ்க்கை, சமூக அமைப்பு மற்றும் அரசியல் தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் ஸ்தாபனம் கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கன்பூசியஸ் என்று அழைக்கப்படும் ஒரு மனிதனிடம் செல்கிறது. கன்பூசியனிசம் முதன்மையாக தார்மீக நடத்தை மற்றும் நெறிமுறை வாழ்க்கை ஆகியவற்றைக் கையாளுகிறது மற்றும் பெரும்பாலும் ஒரு மதத்தை விட நெறிமுறை அமைப்பாகவே வகைப்படுத்தப்படுகிறது. இது பரலோகத்திற்குரியதை அல்ல, பூமிக்குரியதையே வலியுறுத்துகிறது. கன்பூசியனிசத்தின் கோட்பாடுகள் பின்வருபனவற்றை மையமாக கொண்டுள்ளன:
1. மூதாதையர் வழிபாடு - மரித்துப்போன மூதாதையர்களை வணங்குதல், அவர்களின் ஆவிகள் அவர்களின் சந்ததியினரின் அதிர்ஷ்டத்தைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
2. பெற்றோர் பக்தி – இளம் குடும்ப உறுப்பினர்களால் குடும்பத்தின் பெரியவர்களுக்கு காண்பிக்கும் பக்தி மற்றும் கீழ்ப்படிதல் மற்றும் மரியாதை.
கன்பூசியனிசத்தின் முதன்மையான கோட்பாடுகள்:
1. ஜென் - பொன் விதி
2. சுன்-டாய் - நல்லொழுக்கத்தின் பண்புள்ள மனிதர்
3. செங்-மிங் - சமூகத்தின் பாத்திரங்களில் சரியாக பங்கு வகித்தல்
4. தே - அறத்தின் சக்தி
5. லி - நடத்தைக்கான சிறந்த தரநிலைகள்
6. வென் - சமாதானமுள்ள கலைகள் (இசை, கவிதை, முதலியன)
கன்பூசியனிசத்தின் நெறிமுறை அமைப்பைப் பாராட்டுவதற்கு நிறைய உள்ளது, ஏனெனில் நல்லொழுக்கம் எப்போதும் ஒரு தனிநபரிலும் சமூகத்திலும் மிகவும் விரும்பத்தக்க ஒன்று. இருப்பினும், கன்பூசியஸ் முன்வைத்த நெறிமுறைத் தத்துவம், தேவனுக்கு இடமோ அல்லது தேவனின் தேவையோ இல்லாமல் சுய முயற்சியில் சார்ந்திருக்கும் ஒன்றாகும். கன்பூசியஸ், மனிதன் தனது வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என்று கற்பித்தார், அதை நிறைவேற்றுவதற்கு தனக்குள்ளேயே உள்ள நற்பண்புகளை நம்பியிருக்கிறார். இருப்பினும், வேதாகம கிறிஸ்தவம், இதற்கு நேர்மாறாக கற்பிக்கிறது. மனிதனிடம் "தன் செயலைப் பரிசுத்தப்படுத்தும்" திறன் இல்லாதது மட்டுமல்ல, அவனால் எந்த வகையிலும் தேவனைப் பிரியப்படுத்தவோ அல்லது பரலோகத்தில் நித்தியமாய் வாழும் நித்திய ஜீவனை அடையவோ முடியாது.
மனிதன் பிறப்பிலிருந்தே இயல்பாகவே பாவமுள்ளவன் என்று வேதாகமம் போதிக்கிறது (எரேமியா 17:9) மற்றும் பரிசுத்தமான மற்றும் பரிபூரண நீதியுள்ள தேவன் அவனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவனால் நற்செயல்களைச் செய்ய இயலாது. "எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை" (ரோமர் 3:20). எளிமையாகச் சொன்னால், மனிதனுக்கு அதைச் செய்ய ஒரு இரட்சகரின் அவசியத் தேவை உள்ளது. சிலுவையில் மரித்த தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில், நம்முடைய பாவத்திற்கான தண்டனையைச் செலுத்தி, நம்மைத் தேவன் ஏற்றுக்கொள்ளும்படி தேவன் அந்த இரட்சகரை வழங்கியுள்ளார். நம்முடைய பாவமுள்ளவர்களுக்காக அவர் தம்முடைய பரிபூரண ஜீவனைக் கொடுத்திருக்கிறார்: "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர் 5:21).
கன்பூசியனிசம், பிற எல்லா பொய் மதங்களைப் போலவே, மனிதனின் செயல்கள் மற்றும் திறன்களை மட்டுமே நம்பியுள்ளது. "எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள்" (ரோமர் 3:23) என்பதை கிறிஸ்தவம் மட்டுமே அங்கீகரிக்கிறது, மேலும் அதனைப் பின்பற்றுபவர்கள் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள், அவருடைய சிலுவையின் பலியில் அவரை நம்பி நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் இரட்சிப்பை வழங்குகிறது. தங்கள் மேல் நம்பிக்கை வைப்பவர்களை அல்ல, ஆனால் அவரில்(இயேசுவில்) மட்டுமே நம்பிக்கை வைப்பவர்கள்.
English
கன்பூசியனிசம் என்றால் என்ன?