கேள்வி
வேதாகமத்தை அதன் சூழ்நிலையில் படிப்பது ஏன் முக்கியம்? வசனங்களை அதன் சூழ்நிலையை விட்டு வெளியே எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?
பதில்
வேதாகமத்தின் பத்திகளையும் சம்பவங்களையும் அவற்றின் சூழ்நிலையின் பின்னணியில் படிப்பது முக்கியம். வசனங்களை அவற்றின் சூழ்நிலையை விட்டு புறம்பே எடுத்துக்கொள்வது அனைத்து வகையான பிழைகள் மற்றும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். சூழலைப் புரிந்துகொள்வது நான்கு கொள்கைகளுடன் தொடங்குகிறது: நேரடி அர்த்தம் (அது என்ன சொல்கிறது), வரலாற்று அமைப்பு (கதையின் நிகழ்வுகள், அது யாருக்கு உரையாற்றப்பட்டது, அந்த நேரத்தில் அது எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது), இலக்கணம் (உடனடி வாக்கியம் மற்றும் பத்தியில் வருகிற வார்த்தை அல்லது சொற்றொடர்), மற்றும் தொகுப்பாய்வு (வேதத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுதல்). வேதாகம விளக்கத்திற்கு சந்தர்ப்ப சூழல் முக்கியமானது. ஒரு பத்தியின் நேரடி, வரலாற்று மற்றும் இலக்கணத் தன்மையைக் கணக்கிட்ட பிறகு, நாம் புத்தகத்தின் அமைப்பு, பின்னர் அதிகாரம், பின்னர் பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவை அனைத்தும் "சந்தர்ப்ப சூழலில்" சேர்க்கப்பட்டுள்ளன. விளக்குவதற்கு, இது கூகுள் வரைபடத்தில் உலக வரைபடத்தைப் பார்ப்பது மற்றும் படிப்படியாக ஒரு வீட்டை மட்டும் பெரிதாக்குவது போன்றதாகும்.
சொற்றொடர்கள் மற்றும் வசனங்களை சந்தர்ப்ப சூழலுக்கு வெளியே எடுத்துக்கொள்வது எப்போதும் தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, "தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:7-16) என்ற சொற்றொடரை அதன் சூழலில் இருந்து எடுத்துக்கொண்டால், நம் தேவன் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் எல்லா நேரங்களிலும் ஒரு காதல் வயப்படக்கூடிய நிலையில், காதல் வகை அன்புடன் நேசிக்கிறார் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதன் நேரடி மற்றும் இலக்கண சூழலில், "அன்பு" என்பது அகப்பே அன்பைக் குறிக்கிறது, இதன் சாராம்சம் மற்றொருவரின் நன்மைக்காக செய்யும் தியாகம் ஆகும், வெறுமனே ஒரு உணர்ச்சி அல்லது காதல் உணர்வு அல்ல. வரலாற்றுச் சூழலும் மிக முக்கியமானது, ஏனென்றால் யோவான் முதல் நூற்றாண்டு சபை விசுவாசிகளுக்கு உரையாற்றி அவர்களுக்கு தேவனுடைய அன்பைப் பற்றி அறிவுறுத்தவில்லை, ஆனால் உண்மையான போதகர்களிடம் இருந்து உண்மையான விசுவாசிகளை எப்படி அடையாளம் காண்பது என்று அறிவுறுத்தினார். உண்மையான அன்பு - தியாகம், நன்மை பயக்கும் வகை—உண்மையான விசுவாசியின் அடையாளம் (வசனம் 7); நேசிக்காதவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள் அல்ல (வசனம் 8); நாம் அவரை நேசிப்பதற்கு முன்பு தேவன் நம்மை நேசித்தார் (வசனங்கள் 9-10); அதனால்தான் நாம் ஒருவருக்கொருவர் அன்புகூறவேண்டும், அதனால் நாம் அவருடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் (வசனம் 11-12).
மேலும், "தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்ற சொற்றொடரை அனைத்து வேதவாக்கியங்களின் (தொகுப்பு) பின்னணியில் கருதுவது பொய்யான விளக்க அல்லது புரிதல் நிலைக்கு வருவதைத் தடுக்கும், மேலும் மிகவும் பொதுவானது, தேவனுடைய அன்பு மட்டுமே அல்லது அவரது அன்பு தான் மற்ற எல்லா பண்புகளையும்விட பெரியது என்ற முடிவுக்கு கொண்டுவரும். தேவன் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், விசுவாசமுள்ளவர், நம்பகமானவர், கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர், கனிவானவர், இரக்கமுள்ளவர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர் மற்றும் சர்வத்தையும் அறிந்தவர் மற்றும் பல்வேறு காரியங்களை நாம் அறிவோம். தேவன் விரும்புவது மட்டுமல்ல, அவர் வெறுக்கிறார் என்பதையும் மற்ற பத்திகளிலிருந்து நாம் அறிவோம் (சங்கீதம் 11:5).
வேதாகமம் தேவனுடைய வார்த்தை, உண்மையில் "தேவனின்-சுவாசம்" (2 தீமோத்தேயு 3:16), நல்ல வேதாகமப் படிப்பு முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், எப்போதும் பரிசுத்தத்தின் ஒளியுடன் அதைப் படிக்கவும், ஆராயவும், புரிந்துகொள்ளவும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம். ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் (1 கொரிந்தியர் 2:14). சந்தர்ப்ப சூழல் விஷயத்தில் விடாமுயற்சியைப் பராமரிப்பதன் மூலம் நம் ஆய்வு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வேதத்தின் மற்ற பகுதிகளுக்கு முரண்படும் இடங்களை சுட்டிக்காட்டுவது கடினம் அல்ல, ஆனால் நாம் அவற்றின் சந்தர்ப்ப சூழலை கவனமாகப் பார்த்து, வேதாகமத்தினை முழுவதையும் ஒரு குறிப்பாகப் பயன்படுத்தினால், ஒரு பத்தியின் அர்த்தத்தையும், வெளிப்படையான முரண்பாடுகளையும் விளக்கலாம். "சந்தர்ப்பமே ராஜா" என்றால் சந்தர்ப்ப சூழல் பெரும்பாலும் ஒரு சொற்றொடரின் அர்த்தத்தை இயக்குகிறது. சூழலை புறக்கணிப்பது என்பது நமக்கு மிகப்பெரிய தீமையை விளைவிப்பதாகும்.
English
வேதாகமத்தை அதன் சூழ்நிலையில் படிப்பது ஏன் முக்கியம்? வசனங்களை அதன் சூழ்நிலையை விட்டு வெளியே எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?