settings icon
share icon
கேள்வி

சிருஷ்டிப்புக்கு எதிராக பரிணாமம்யைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


சிருஷ்டிப்புக்கு எதிரான பரிணாம வளர்ச்சி என்கிறதான விவாதத்திற்கான அறிவியல் ரீதியான நியாயத்தை பதிலாக அளிப்பது இந்த பதிலின் நோக்கமல்ல. இந்த கட்டுரையின் நோக்கம் வேதாகமத்தின்படி, சிருஷ்டிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சி விவாதம் அதன் தற்போதைய வடிவத்தில் கூட ஏன் இன்னும் உள்ளது என்பதை விளக்க வேண்டும். ரோமர் 1:25 இவ்வாறு கூறுகிறது: “தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.”

பரிணாம வளர்ச்சியின் நிலையில் ஒரு முக்கிய காரணி என்னவெனில், பரிணாம வளர்ச்சி விவாதத்தில் அதனை விசுவாசித்து விவாதிக்கிற விஞ்ஞானிகளில் பெரும்பான்மையானவர்கள் நாத்திகர்கள் அல்லது அக்னோஸ்டிக்ஸ்ட்கள் ஆகும். சிலர் தெய்வீக பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் தேவனைப்பற்றிய இருகொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள். தேவன் இருக்கிறார் என்பதில் விசுவாசம் வைக்கிறார்கள், அதேவேளையில் அவர் உலகில் ஈடுபடவில்லை, எல்லாவற்றையும் ஒரு தொடர்ச்சியான, இயற்கையான போக்கில் விட்டுவிட்டார் என்பதாக நம்புகிறார்கள். பலர் உண்மையான மற்றும் நேர்மையான தரவினைக்கண்டு பரிணாமம் ஒரு சிறந்தமுறையில் தரவுடன் பொருந்துகிறது என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இருப்பினும், இந்த விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் உரைநடை என்னவெனில், பரிணாமமானது எப்படியோ, வேதாகமத்தோடு ஒத்துப்போகவில்லை, மேலும் தேவன்மீது விசுவாசமும் இல்லை.

பரிணாமத்தை நம்புகிற சில விஞ்ஞானிகள், பரிணாமம் வேறு வேதாகமம் வேறு என்கிற முரண்பாட்டினை கண்டுகொள்ளாமல், தேவனையும் வேதாகமத்தையும் நம்புகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வது முக்கியமாகும். இருப்பினும், பரிணாம விஞ்ஞானிகளின் பெரும்பான்மையானவர்கள் உயிர்கள் எந்தஒரு தலையீடும் இல்லாமல் முழுதும் பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது என்கிற கருத்தைக் கொண்டுள்ளார்கள். பரிணாமத்தின் நவீன கோட்பாடுகள், நடைமுறையில் கிட்டத்தட்ட முற்றிலும் இயற்கை விஞ்ஞானம் ஆகும்.

இந்த சில நிலைகளுக்குப் பின்னால் ஆவிக்குரிய இயக்கிகள் உள்ளன. நாத்திகம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், இந்த பிரபஞ்சமும், உயிரினமும் எவ்வாறு உருவானது என்பதற்கு, ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதைத் தவிர வேறு ஒரு மாற்று விளக்கம் இருக்க வேண்டும். பரிணாம வளர்ச்சிக்கான சில வடிவங்களில் உள்ள நம்பிக்கை சார்லஸ் டார்வினின் முன்னரே இருந்தாலும், பரிணாம வளர்ச்சிக்கான ஒரு நம்பத்தகுந்த, இயற்கை ஆதாரத்தை டார்வின் தான் முதன்முதலில் உருவாக்கினார்: இயற்கையின் தேர்வு. டார்வின் முதலில் கிறிஸ்தவராக தன்னை அடையாளம் காட்டினார், ஆனால், அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சோகங்கள் காரணமாக, அவர் கிறிஸ்தவ விசுவாசத்தையும், தேவன் இருக்கிறார் என்கிற நம்பிக்கையையும் புறக்கணித்தார்.

டார்வினின் நோக்கம் தேவன் இருக்கிறார் என்பதை நிராகரித்து தேவன் இல்லை என்று நிருபிப்பது அல்ல, அவரது கோட்பாடும் அவ்வாறு செய்யவில்லை. துரதிருஷ்டவசமாக, அவருடைய சிந்தனைகள் நாத்திகத்தைத் தூண்டுவதற்கேற்ப ஊக்குவிக்கப்பட்டன. நவீன பரிணாம கோட்பாட்டை எதிர்த்து பல விசுவாசிகள் இன்று எதிர்த்து நிற்கும் காரணத்தினால், அது அடிக்கடி கட்டாயப்படுத்தி, நாத்திகவாத உலக கண்ணோட்டத்துடன் தொகுக்கப்பட்டு வருகிறது. பரிணாம விஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையின் தோற்றம் பற்றிய ஒரு மாற்று விளக்கத்தை வழங்குவதன் மூலம், நாத்திகத்திற்கான அஸ்திபாரத்தை வழங்குவதே இதன் குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மேலும், வேதாகமத்தின்படி, இன்று நாம் பார்க்கும் வழியில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு அணுகப்படுகிறது.

“தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்” (சங்கீதம் 14:1; 53:1) என்று வேதாகமம் சொல்லுகிறது. சிருஷ்டிகராகிய தேவன்மீது விசுவாசம் வைக்காதவர்களுக்கு சாக்குப்போக்கு சொல்லுவதற்கு இடமே இல்லையென்றும் அவர்கள் மன்னிக்கப்படுவதில்லை என்றும் வேதாகமம் சொல்லுகிறது. “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோமர் 1:20). வேதாகமத்தின்படி, தேவன் இருக்கிறார் என்பதை மறுதலிக்கிற எவரும் முட்டாள்களாக இருக்கின்றார்கள். முட்டாள்தனம் என்பது புத்திசாலித்தனத்தின் குறைபாடு அல்ல. அவசியமானால், பரிணாம விஞ்ஞானிகள் புத்திசாலித்தனமான அறிவாளிகள். முட்டாள்தனம் என்பது அறிவை சரியாக பிரயோகப்படுத்த அல்லது பொருத்துவதற்கான இயலாமையை காட்டுகிறது. நீதிமொழிகள் 1:7 சொல்லுகிறது: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.”

பரிணாமத்தை ஆதரிக்கும் நாத்திகர்கள் பெரும்பாலும் சிருஷ்டிப்பை பரிகசிப்பவர்களாக இருக்கிறார்கள், அறிவியல் மற்றும் புத்திசாலித்தனமான வடிவமைப்பை விஞ்ஞான பரிசோதனைக்கு தகுதியற்றவைகளாகவும், அவைகள் அறிவார்ந்த வடிவமைப்பாக இல்லை எனவும் கருதுகிறார்கள். ஒரு காரியம் "அறிவியலாக" கருதப்படுவதற்கு அது ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு, அது "இயல்பானதாக" இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். சிருஷ்டிப்பின் வரையறையானது, இயற்கை உலகின் விதிகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. தேவனை சோதிக்க முடியாதாகையால், சிருஷ்டிப்பு மற்றும் / அல்லது அறிவார்ந்த வடிவமைப்பு அறிவியல் கருத முடியாது என்பதாக வாதம் செல்கிறது.

கண்டிப்பாக பேசுகையில், பரிணாமம் உற்று நோக்க முடியாத ஒன்றாகும் அல்லது பரிணாமத்தை புத்திசாலித்தனமான வடிவமைப்பைக் காட்டிலும் கூடுதலாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ சோதனை செய்யப்பட முடியாது, ஆனால் இதை நம்பாத பரிணாமவாதிகளுக்கு அது ஒரு சிக்கலாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, அனைத்து தரவுகளிலும் முன்னுரைக்கப்பட்ட, நம்பகத்தன்மை மற்றும் முன்-ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை விஞ்ஞானத்தின் மூலம் வடிகட்டப்படுகிறது, மாற்று விளக்கங்கள் இல்லாமல் அப்படியே உள்ளதுபோல கருதப்படுகின்றன.

பிரபஞ்சத்தின் தோற்றம் அல்லது வாழ்க்கையின் தோற்றம் நேரடியாக சோதிக்கப்படவோ அல்லது கண்காணிக்கப்படவோ முடியாது. சிருஷ்டி மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொள்ளுவதற்கு ஒரு விசுவாசத்தின் அளவு தேவையாயிருக்கிறது. பிரபஞ்சத்தின் தோற்றத்தை அல்லது பிரபஞ்சத்தின் வாழ்வைக் காண நாம் பின்னோக்கி சென்று அந்த நேரத்தில் நாம் அதை கண்காணிக்க முடியாது. சிருஷ்டிப்புகளை நிராகரிக்கிறவர்கள் தங்களுடைய பரிணாமத்தை நிராகரிக்கும்படி தர்க்கரீதியாக நிரூபிக்கும் காரணங்களினால் அவ்வாறு செய்கிறார்கள்.

சிருஷ்டிப்பு என்பது உண்மையாக இருந்தால், நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டிய ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதையும் மெய்யாக்குகிறது.

இன்று பெரும்பாலும் வழங்கப்படுகிற பரிணாமம், நாத்திகத்திற்கான ஊக்கமளிக்கும் செயலாகு\வே இருக்கிறது. பரிணாம வளர்ச்சி நாத்திகர்களுக்கு ஒரு சிருஷ்டிகர் இல்லாமல் வேறு விதமாக எப்படி வளர்ந்தது என்பதை விளக்கும் ஒரு ஆதாரத்தை அளிக்கிறது. இதுபோன்றே, பரிணாமத்தின் நவீன கோட்பாடுகள் நாத்திக மதத்திற்கான பதிலாக "சிருஷ்டிப்பின் கதை" எனக் கூறுகின்றன.

வேதாகமம் தெளிவாக இருக்கிறது: தேவனே சிருஷ்டிகர். தோற்றத்துடன் தொடர்பு கொள்வதிலிருந்து தேவனை பிரித்து வேறுபடுத்தி அகற்ற முயற்சிக்கும் விஞ்ஞானத்தின் எந்தவொரு விளக்கமும் வேதாகமத்தோடு ஒத்துப்போவதில்லை.

English



முகப்பு பக்கம்

சிருஷ்டிப்புக்கு எதிராக பரிணாமம்யைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries