கேள்வி
பெந்தெகொஸ்தே நாள் என்றால் என்ன?
பதில்
"பெந்தெகொஸ்தே" என்பது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்கது. பெந்தெகொஸ்தே என்பது பழைய ஏற்பாட்டில் வாரங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஒரு பண்டிகைக்கான கிரேக்கப் பெயர் (லேவியராகமம் 23:15; உபாகமம் 16:9). கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "ஐம்பது" மற்றும் பஸ்காவின் அசைவாட்டப்படும் காணிக்கையிலிருந்து கடந்த ஐம்பது நாட்களைக் குறிக்கிறது. எழு வாரங்களின் பண்டிகை தானிய அறுவடையின் முடிவைக் கொண்டாடியதாய் இருந்தது இருப்பினும், யோவேல் மற்றும் அப்போஸ்தலர் புஸ்தகங்களில் அதன் பயன்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. யோவேலின் தீர்க்கதரிசனத்தை (யோவேல் 2:28-32) திரும்பிப் பார்க்கும்போது, கிறிஸ்துவின் பரமேறிச் செல்வதற்கு முன் பூமியில் கடைசியாகச் சொல்லப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தை எதிர்நோக்கிப் பார்க்கும்போது (அப்போஸ்தலர் 1:8), பெந்தெகொஸ்தே சபையில் காலத்தினுடைய ஆரம்பத்தைக் குறிக்கிறது.
பெந்தெகொஸ்தே நாளின் உண்மையான நிகழ்வுகள் பற்றிய ஒரே வேதாகமக் குறிப்பு அப்போஸ்தலர் 2:1-3 ஆகும். பெந்தெகொஸ்தே கடைசி இராப்போஜனத்தை நினைவூட்டுகிறது; இரண்டு நிகழ்வுகளிலும் சீடர்கள் ஒரு வீட்டில் ஒன்றாக இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாக நிரூபிக்கிறது. கடைசி இராப்போஜனத்தின் போது, சீடர்கள் மேசியாவின் பூமிக்குரிய ஊழியத்தின் முடிவைக் காண்கிறார்கள், அவர் மரித்த பிறகு அவர் திரும்பும் வரை அவரை நினைவுகூரும்படி கேட்டுக்கொள்கிறார். பெந்தெகொஸ்தே நாளில், அனைத்து விசுவாசிகளின் மேலும் வந்து தங்குவதற்கு பரிசுத்த ஆவியின் வருகையில் புதிய ஏற்பாட்டு திருச்சபையின் பிறப்பை சீடர்கள் சாட்சியாகக் காண்கிறார்கள். இவ்வாறு, பெந்தெகொஸ்தே நாளில் ஒரு அறையில் இருந்த சீடர்களின் காட்சி, திருச்சபையில் பரிசுத்த ஆவியின் கிரியையின் தொடக்கத்தை சிலுவையில் அறையப்படுவதற்கு முன் மேலறையில் கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின் முடிவுடன் இணைக்கிறது.
பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்ந்த கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அக்கினி மற்றும் பலத்த காற்று பற்றிய விளக்கம் பழைய மற்றும் புதிய ஏற்பாடு முழுவதும் ஒலிக்கிறது. பெந்தெகொஸ்தே நாளில் காற்றின் சத்தம் "சடுதியாக" மற்றும் "வலிமை வாய்ந்ததாக" இருந்தது. காற்றின் சக்தியைப் பற்றிய வேதப்பூர்வ குறிப்புகள் (எப்போதும் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது) ஏராளம் உள்ளன. யாத்திராகமம் 10:13; சங்கீதம் 18:42; மற்றும் பழைய ஏற்பாட்டில் ஏசாயா 11:15 மற்றும் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 14:23-32 ஆகியவை சில உதாரணங்கள் மட்டுமே. பலத்த காற்றை விட வல்லமையாக இருப்பது பழைய ஏற்பாட்டில் காற்றை ஜீவனாகவும் (யோபு 12:10) புதிய ஏற்பாட்டில் ஆவியாகவும் (யோவான் 3:8) முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது. முதல் ஆதாம் பௌதிக ஜீவ சுவாசத்தைப் பெற்றதைப் போலவே (ஆதியாகமம் 2:7), இரண்டாவது ஆதாமாகிய இயேசு, ஆவிக்குரிய ஜீவ சுவாசத்தைக் கொண்டுவருகிறார். பரிசுத்த ஆவியானவரால் ஜெநிப்பிக்கப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையின் யோசனை நிச்சயமாக பெந்தெகொஸ்தே பலத்த காற்றில் மறைமுகமாக உள்ளது.
பழைய ஏற்பாட்டில் அக்கினி பெரும்பாலும் தேவனுடைய பிரசன்னத்துடனும் (யாத்திராகமம் 3:2; 13:21-22; 24:17; ஏசாயா 10:17) அவருடைய பரிசுத்தத்துடனும் (சங்கீதம் 97:3; மல்கியா 3:2) தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ஏற்பாட்டில், அக்கினி தேவனுடைய பிரசன்னத்துடன் தொடர்புடையது (எபிரெயர் 12:29) மற்றும் மனித வாழ்க்கையில் அவர் கொண்டு வரக்கூடிய சுத்திகரிப்பு (வெளிப்படுத்துதல் 3:18). தேவனுடைய பிரசன்னமும் பரிசுத்தமும் பெந்தெகொஸ்தேயின் அக்கினிப் போன்ற பிளவுபட்ட நாவுகளில் மறைமுகமாக உள்ளது. உண்மையில், அக்கினி கிறிஸ்துவுடன் அடையாளப்படுத்தப்படுகிறது (வெளிப்படுத்துதல் 1:14;19:12); இந்த பந்தம் இயற்கையாகவே பரிசுத்த ஆவியின் பெந்தெகொஸ்தே வரத்திற்கு அடிகோலுகிறது, அவர் கிறிஸ்துவின் காரியங்களை சீஷர்களுக்கு போதிப்பார் (யோவான் 16:14).
பெந்தெகொஸ்தே நாளின் மற்றொரு அம்சம், பல்வேறு பாஷையில் பேசினக் குழுக்களைச் சேர்ந்த ஜனங்கள் அப்போஸ்தலர்களின் செய்தியைப் புரிந்துகொள்ள உதவியது. கூடுதலாக, ஒரு யூத பார்வையாளர்களுக்கு பேதுருவின் தைரியமான மற்றும் கூர்மையான பிரசங்கம். பிரசங்கத்தின் விளைவு சக்திவாய்ந்ததாக இருந்தது, ஏனெனில் கேட்போர் "இதயத்தில் குத்தப்பட்டனர்" (அப்போஸ்தலர் 2:37) மற்றும் "மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள்" (அப்போஸ்தலர் 2:38) என்று பேதுருவால் அறிவுறுத்தப்பட்டது. ஐக்கியத்தில் மூவாயிரம் ஆத்துமாக்கள் சேர்க்கப்பட்டு, அப்பம் பிட்குதல் ஜெபங்கள், அப்போஸ்தலிக்க அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள், மற்றும் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு சமூகம் உருவாக்கப்படுதல் ஆகியவற்றுடன் கதை முடிவடைகிறது.
English
பெந்தெகொஸ்தே நாள் என்றால் என்ன?