settings icon
share icon
கேள்வி

கர்த்தருடைய நாள் என்றால் என்ன?

பதில்


"கர்த்தருடைய நாள்" என்ற சொற்றொடர் பொதுவாக வரலாற்றின் முடிவில் நடந்தேறவிருக்கிற நிகழ்வுகளை அடையாளப்படுத்துகிறது (ஏசாயா 7:18-25) மற்றும் "அந்த நாளில்" என்ற சொற்றொடருடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. இந்த சொற்றொடரைப் புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சில தனிப்பட்ட அம்சங்களை அவரது திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்காக தேவன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனிப்பட்ட முறையில் தலையிடுவதை இது குறிப்பாக திட்டவட்டமாக அடையாளம் காட்டுகிறது.

பெரும்பாலானோர் கர்த்தருடைய நாள் என்பதை அவரது உலகின் நோக்கம் மனிதகுலத்தில் நிறைவேறும் போது ஏற்படும் ஒரு காலம் அல்லது ஒரு சிறப்பு நாள் என்பதாக தொடர்புபடுத்துகிறார்கள். கர்த்தருடைய நாள் என்பது ஒரு நாள் மட்டும் என்றில்லாமல், அது ஒரு நாளைக்கும் மேலாக ஒரு நீண்ட காலமாக இருக்கிறது என சில அறிஞர்கள் நம்புகிறார்கள் – அதாவது உலகமெங்கும் ஆளப்போகிற காலப்பகுதியாக, மனிதகுலத்தின் நித்திய நிலைக்குத் தயார்படுத்துவதற்காக அவர் வானத்தையும் பூமியையும் தூய்மைப்படுத்துவதற்கு முன்பு உலகெங்கும் ஆட்சி செய்வார் என்பதாக கருதுகிறார்கள். பிற அறிஞர்கள் கர்த்தருடைய நாள் என்பது ஒரு தொடர் நிகழ்வாக அவர் விசுவாசிகளை மீட்கவும் மற்றும் அவிசுவாசிகளை நித்திய அழிவிற்குள் அனுப்பவும் கிறிஸ்து பூமிக்கு திரும்பும் போது நிகழ்கிறதான ஒரு உடனடி நிகழ்வாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

“கர்த்தருடைய நாள்” என்னும் சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது (உதாரணமாக: ஏசாயா 2:12; 13:6, 9; எசேக்கியேல் 13:5, 30:3; யோவேல் 1:15; 2:1, 11, 31; 3:14; ஆமோஸ் 5:18, 20; ஒபதியா 15, செப்பனியா 1:7, 14; சகரியா 14:1; மல்கியா 4:5) மற்றும் புதிய ஏற்பாட்டிலும் பல முறை வருகிறது (உதாரணமாக: அப்போஸ்தலர் 2:20; 2 கொரிந்தியர் 1:14; 1 தெசலோனிக்கேயர் 5:2; 2 தெசலோனிக்கேயர் 2:2; 2 பேதுரு 3:10). இது மற்ற பத்தியில் ஜாடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (வெளி. 6:17; 16:14).

கர்த்தருடைய நாளோடு தொடர்புடைய பழைய ஏற்பாட்டுப் வேதப்பகுதிகள் பெரும்பாலும் உடனடி, நெருங்கிய, எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துகின்றன: "அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது" (ஏசாயா 13:6); “நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது” (எசேக்கியேல் 30:3); “கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது” (யோவேல் 2:1); “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது” (யோவேல் 3:14); “கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது” (செப்பனியா 1:7). இந்த பழைய ஏற்பாட்டு பத்திகள் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களைப் போலவே, கர்த்தருடைய நாளை குறிப்பிடுவது பெரும்பாலும் ஒரு அருகாமையும், ஒரு நிறைவான நிறைவேறுதலையும் பற்றி பேசுகிறது. சில பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் வரலாற்றுச் சம்பவமாக ஏற்கனவே நடந்தேறிய நிகழ்வுகளைக் கூறுகிறதாகவும் இருக்கிறது (ஏசாயா 13:6-22; எசேக்கியேல் 30:2-19; யோவேல் 1:15; 3:14; ஆமோஸ் 5:18-20; செப்பனியா 1:14-18), மற்றவர்கள் இவற்றை தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்புகளைக் குறிப்பிடுகிறதாக காண்கிறார்கள், அதாவது கடைசி காலத்தில் முடிவில் சம்பவிக்கப்போகிற காரியங்களாக காண்கிறார்கள் (யோவேல் 2:30-32; சகரியா 14:1; மல்கியா 4:1, 5).

புதிய ஏற்பாடு இந்த நாளை "கோபத்தின்" நாள், "சந்திக்கும்” நாள், "சர்வவல்லமையுள்ள தேவனின் பெரிய நாள்" போன்ற நிலைகளில் அழைக்கிறது (வெளி. 16:14), மற்றும் தேவனுடைய கோபம் அவிசுவாசிகளான இஸ்ரவேலர்கள் மேல் ஊற்றப்படப் போகிறதை எதிர்கால சம்பவமாக குறிப்பிடுகிறது (ஏசாயா 22; எரேமியா 30:1-17; யோவேல் 1-2; ஆமோஸ் 5; செப்பனியா 1) மற்றும் அவிசுவாச உலகின்மேல் வருகிற நாளாகவும் குறிப்பிடுகிறது (எசேக்கியேல் 38-39; சகரியா 14). இரவிலே திருடன் வருகிறது போன்று "கர்த்தருடைய நாள்" சீக்கிரத்தில் வரும் என்று வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன (செப்பனியா 1:14-15; 2 தெசலோனிக்கேயர் 2:2), ஆகையால் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் வருகைக்காக எந்த நேரமும் விழிப்புடன் இருக்கவும் தயாராகவும் இருக்க வேண்டும்.

கர்த்தருடைய நாள் நியாயத்தீர்ப்புக் காலம் என்பதோடு, தேவன் இஸ்ரவேலில் மீதியானவர்களை “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்பதற்கேற்ப அவர்களை விடுவிப்பார் (ரோமர் 11:26), அவர்களுடைய பாவங்களை மன்னித்து, ஆபிரகாமுக்கு தேவன் வாக்களித்த தேசத்திற்கு ஜனங்களை கொண்டுவரத்தக்கதாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மீட்கும் தேவன் இரட்சிப்பதற்கான காலமாகவும் இது இருக்கும் (ஏசாயா 10:27; எரேமியா 30:19-31, 40; மீகா 4; சகரியா 13). கர்த்தருடைய நாளின் இறுதியான விளைவு என்னவென்றால், “அப்பொழுது நரரின் மேட்டிமைதாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத்தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்” (ஏசாயா 2:17). கர்த்தருடைய நாள் பற்றிய தீர்க்கதரிசனங்களின் இறுதி அல்லது இறுதி நிறைவேற்றமானது, தேவனின் வியத்தகு வல்லமையால், தீமைகளை தண்டிப்பதும், அவருடைய வாக்குறுதிகளை பூர்த்தி செய்வதும் வரலாற்றின் முடிவில் வரும்.

English



முகப்பு பக்கம்

கர்த்தருடைய நாள் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries