கேள்வி
சபையிலுள்ள உதவிக்காரர்களின் பொறுப்புகள் என்ன?
பதில்
புதிய ஏற்பாட்டில், பொதுவாக "சேவை" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை கிரேக்க மொழியில் டயகோனியோ என்னும் வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது "அழுக்கு வழியாக" என்று எழுத்தியல் அர்த்தத்தில் வருகிறது. இது ஒரு உதவியாளர், பணியாளர் அல்லது மற்றொருவருக்கு ஊழியம் செய்பவரை குறிக்கிறது. இந்த வார்த்தையிலிருந்து ஆங்கில வார்த்தை டீக்கன் (deacon) நமக்கு கிடைக்கிறது. சபையில் உதவி செய்பவர்களை குறிப்பதற்கு டீக்கன் என்ற வார்த்தையை அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் முதலில் பார்க்கிறோம். "அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல” (அப். 6:2). பிரசங்கிப்பதன் மூலமும் போதனையின் மூலமும் மந்தைக்கு உணவளிக்கும் மனிதர்கள், அந்தச் செயல்பாடுகளை பந்தி விசாரிப்புக்காக விட்டுவிடுவது சரியல்ல என்பதை உணர்ந்தனர், எனவே அவர்கள் ஆவிக்குரிய தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேளையில், சேவை செய்யத் தயாராக இருந்த வேறு சில மனிதர்களைக் கண்டுபிடித்து அவர்களை சபையின் பந்தி விசாரிப்பாகிய சரீர தேவைகளுக்குச் சேவை செய்யும்படி ஏற்படுத்தினார்கள். இது மூலங்களின் சிறந்த பயன்பாடு மற்றும் அனைவரின் வரங்களையும் சிறப்பாகப் பயன்படுத்துவதாகும். இது ஒருவருக்கொருவர் சேவை செய்வதிலும் உதவுவதிலும் அதிக மக்களை ஈடுபடுத்தியது.
இன்று, வேதாகம சபைக்கு, இந்த பாத்திரங்கள் அடிப்படையில் ஒரே மாதிரியானவையாகும். மூப்பர்கள் மற்றும் போதகர்கள் "தேவனுடைய திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணி; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல வேண்டும்" (2 தீமோத்தேயு 4:2), மற்றும் உதவிக்காரர்கள் மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு உதவிக்காரனின் பொறுப்புகளில் நிர்வாக அல்லது நிறுவனப் பணிகளை மேற்கொள்வது, கட்டிடத்தை பராமரித்தல், பேணுதல் அல்லது சபையின் பொருளாளராக தன்னார்வத் தொண்டு செய்வது ஆகியவை அடங்கும். இது சபையின் தேவைகள் மற்றும் கிடைக்கும் மனிதர்களின் வரங்களைப் பொறுத்தது.
ஒரு உதவிக்காரனின் பொறுப்புகள் வேதத்தில் தெளிவாக பட்டியலிடப்படவில்லை அல்லது கோடிட்டுக் காட்டப்படவில்லை; அவை ஒரு மூப்பர் அல்லது போதகரின் கடமைகளை உட்படுத்தாத அனைத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால் ஒரு உதவிக்காரனுக்கான தகுதிகள் வேதத்தில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும், ஒரு மனைவியை உடையவர்களாக இருக்கவேண்டும், சொந்தக் குடும்பங்களை நன்றாய் நடத்துகிறவர்களாக இருக்கவேண்டும், மரியாதைக்குரியவர்கள், நேர்மையானவர்கள், மதுபானப்பிரியராக இல்லாமல் மற்றும் இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாகவும் இல்லாமல் இருக்கவேண்டும் (1 தீமோத்தேயு 3:8-12). வார்த்தையின்படி, உதவிக்காரர் பதவி ஒரு மரியாதை மற்றும் ஆசீர்வாதமுள்ளதாகும். "இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்" (1 தீமோத்தேயு 3:13).
English
சபையிலுள்ள உதவிக்காரர்களின் பொறுப்புகள் என்ன?