settings icon
share icon
கேள்வி

அப்போஸ்தலர்களுடைய மரணத்தை குறித்து வேதாகமத்தில் வாசிக்கிறோமா?

பதில்


வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு அப்போஸ்தலருடைய மரணம் யாக்கோபுடையது மட்டுமே (அப்போஸ்தலர் 12:2). ஏரோது ராஜா யாக்கோபுவை பட்டயத்தினால் கொலை செய்தான். பிற அப்போஸ்தலர்களுடைய மரணங்களின் சூழ்நிலைகள் சபையின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது எனவே நாம் வேறு எந்த குறிப்புகளுக்கும் அதீத முக்கியதுவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு ரோமாபுரியில் இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்திற்கு ஏற்றார் போல் (யோவான் 21:18) தலைகீழாக எக்ஸ் (X) வடிவில் சிலுவையில் அறையப்பட்டார் என்பதுதான் பெரும்பாலான நிலையில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருச்சபையின் பாரம்பரியம் ஆகும். பின்வருபவைகள் மற்ற அப்போஸ்தலர்களுடைய மரணத்தைக் குறித்த மிகவும் பிரசித்திப்பெற்ற மரபுகள் ஆகும்:

மத்தேயு எத்தியோப்பியாவில் பட்டயத்தினால் ஏற்பட்ட காயத்தினால் பாடுபட்டு மரித்தார். யோவான் ரோமாபுரியில் நடந்த உபத்திரவத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்கிற எண்ணெயில் வேகவைக்கப்பட்ட போது மரணத்தை சந்தித்தார். ஆனாலும் அவர் அற்புதமாக மரணத்திலிருந்து மீட்கப்பட்டார். பின்பு யோவான் பத்மு தீவில் சுரங்க சிறையில் தண்டிக்கப்பட்டார். அவர் தன்னுடைய தீர்க்கதரிசன புத்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தை பத்முவில் தான் எழுதினான். பின்பு அப்போஸ்தலனாகிய யோவான் விடுதலையாக்கப்பட்டு தற்போது துருக்கி என்று அழைக்கப்படுகிற நாட்டிற்கு திரும்பினார். அவர் வயது சென்றவராக மரித்தார். சமாதானமாக மரித்த அப்போஸ்தலன் இவர் ஒருவரே.

இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு (அதிகாரப்பூர்வமான அப்போஸ்தலனல்ல) எருசலேம் திருச்சபையில் தலைமைத்துவம் வகித்திருந்தார். கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை மறுதலிப்பதற்கு அவர் மறுத்தபோது தேவாலயத்தில் தென்கிழக்கு உப்பரிகையின் உச்சியிலிருந்து (நூற்றுக்கும் மேற்பட்ட அடி உயரத்திலிருந்து) கீழே எறியப்பட்டார். அவர் வீழ்ந்ததிலிருந்து தப்பினதை கண்ட அவருடைய எதிரிகள் அவரைக் கூட்டமாக அடித்து கொன்றனர். இந்த உப்பரிகையின் உச்சத்திற்குத்தான் இயேசுவை சாத்தான் சோதித்தப்போது கூட்டிச் சென்றான்.

பற்தொலொமேயு என்று அழைக்கப்பட்ட நாத்தான்வேல் ஆசியாவிற்கு மிஷனரியாக வந்தார். அவர் தற்போது துருக்கி என்று அழைக்கப்படும் நாட்டில் கிறிஸ்துவைக் குறித்து சாட்சியாக அறிவித்தார், அங்கு ஆர்மினியாவில் பிரசங்கித்ததற்காக சவுக்கினால் அடிக்கப்பட்டு மரண தண்டனையை பெற்றார். அந்திரேயா கிரேக்க நாட்டில் எக்ஸ் வடிவ சிலுவையில் அறையப்பட்டார். ஏழு போர்ச் சேவகர்களால் நன்கு சவுக்கினால் அடிக்கப்பட்ட பின்பு அவர் வேதனையில் நீடிக்க அவருடைய சரீரத்தை கயிறுகளால் இறுக்கி சிலுவையில் கட்டினார்கள். சிலுவையில் கட்டப்பட்டபோது அந்திரேயா சொன்ன வார்த்தைகளாக அவருடைய சீஷர்கள் கூறியது: “இந்த சந்தோஷமான தருனத்தையே நான் நீண்ட நாள் ஆசையாக எதிர்பார்த்தேன். கிறிஸ்துவின் சரீரம் சிலுவையில் தொங்கவிடப்பட்டபடியினாலே இந்த சிலுவை சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது என்றான்.” அவர் தன்னுடைய வேதனையோடு இரண்டு நாட்கள் அந்த சிலுவையில் மரிக்கும் வரை பிரசங்கித்தார். அப்போஸ்தலனாகிய தோமா இந்தியாவில் சபையை ஸ்தாபிப்பதற்கான தன்னுடைய மிஷனரி பணியில் ஈடுபட்ட போது ஈட்டியால் குத்தப்பட்டார். யூதாஸ் காரியோத்திற்கு பதிலாக தெரிந்தெடுக்கப்பட்ட மத்தியா கல்லெறியப்பட்டு பின்பு தலை துண்டிக்கப்பட்டு மரித்தார். கி.பி. 67ல் ரோமாபுரியில் தீய பேரரசரான நீரோவினால் அப்போஸ்தலனாகிய பவுல் சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் தலை துண்டிக்கப்பட்டு மரித்தார். மற்ற அப்போஸ்தலர்களை பற்றியும் சில மரபுகள் உள்ளன ஆனால் அவைகள் வரலாற்று பாரம்பரிய ஆதரவு அற்றவைகள்.

அப்போஸ்தலர்கள் எப்படி மரித்தார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் அனைவரும் தங்களுடைய விசுவாசத்திற்காக மரிக்க வாஞ்சையாக இருந்தனர் என்பதே முக்கியமாகும். இயேசு உயிர்தெழவில்லை என்றால் சீஷர்களுக்கு அது தெரிந்திருக்கும். யாரும் தங்களுக்கு பொய் என்று தெரிந்தவைகளுக்காக மரிக்கத் துணிய மாட்டார்கள். எல்லா அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை மறுதலிக்க மறுத்து மரிக்க வாஞ்சையுள்ளவர்களாக இருந்தனர் என்பது தான் உண்மை. இதுவே அவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துக்கு உண்மையான சாட்சிகளாக இருந்தனர் என்பதற்கான மிக பெரிய ஆதாரம் ஆகும்.

English



முகப்பு பக்கம்

அப்போஸ்தலர்களுடைய மரணத்தை வேதாகமம் குறிப்பிடுகிறதா? ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் எப்படி மரித்தார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries