கேள்வி
மரண படுக்கையில் மனமாற்றம் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
வேதாகமத்தில் மிக உயரிய மரணபடுக்கை / கடைசி நிமிட மனமாற்றம் மூலம் இயேசுவினிடத்தில் வருதல், இயேசுவுடன் சேர்ந்து சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியின் நிகழ்வைப் போலிருக்கிறது (லூக்கா 23:39-43). அவனது மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இந்த குற்றவாளி கிறிஸ்துவை நம்பாமல் பரியாசம் பண்ணுகிறவனாக இருந்தான் (மத்தேயு 27:44). இருப்பினும், கடைசி நேரத்தில், குற்றவாளி மனந்திரும்பி, இயேசுவை பரலோக ராஜாவாக ஒப்புக்கொண்டான். "இன்று நீ என்னுடனே பரதீசுவில் இருப்பாய்" என்று கர்த்தர் அவனுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குறுதியை அளித்தார்.
சிலுவையில் அறையப்பட்ட இந்த குற்றவாளியின் கதை கடைசி நிமிட மனமாற்றங்கள் சாத்தியம் என்பதை நிரூபித்தாலும், மற்றொரு கணம் காத்திருக்காமல், இப்போது மனந்திரும்பும்படி வேதாகமம் எச்சரிக்கிறது. யோவான் ஸ்நானகன் எச்சரித்தார், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 3:2). உடனடி மனந்திரும்புதலின் தேவை குறித்து இயேசுவுக்கும் அதே மாதிரியான செய்தி இருந்தது (மத்தேயு 4:17).
வாழ்க்கையின் சுருக்கத்தைப் பற்றி வேதாகமம் நமக்கு எச்சரிக்கிறது. "கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே" (யாக்கோபு 4:14). ஒரு நாள் மனம்மாறுவதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படவில்லை, ஆனால் இன்று விசுவாசிக்க வேண்டும்! "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்" (எபிரேயர் 4:7). இந்த வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது அல்லது நம் மரணத்தின் சூழ்நிலைகள் என்னவாக இருக்கும் என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. திடீரென்று, எதிர்பாராத விதத்தில் நாம் மரிக்கலாம், அது மரணப் படுக்கையில் மனம் மாறும் வாய்ப்பை இல்லாமல் ஆக்கலாம். நியாயமான ஒரே வழி இன்று மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதுதான். "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்" (2 கொரிந்தியர் 6:2).
English
மரண படுக்கையில் மனமாற்றம் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?