settings icon
share icon
கேள்வி

பி”சாசு / சாத்தான் ஒரு நபரா அல்லது ஒரு சக்தியாக / தீமையின் உருவமா?”

பதில்


சாத்தான் என்பவன் இல்லை என்று அவனைக் குறித்து பலர் வற்புறுத்தி கூறிய போதிலும், சாத்தான் நிச்சயமாக ஒரு உண்மையான, தனிப்பட்ட நபர், அனைத்து அவிசுவாசத்துக்கும் மற்றும் உலகில் உள்ள அனைத்து வகையான தார்மீக மற்றும் ஆவிக்குரிய தீமைகளுக்கும் மூலாதாரமாக இருக்கிறான். அவன் வேதாகமத்தில் சாத்தான் ("எதிராளி" என்று அர்த்தம்—யோபு 1:6; ரோமர் 16:20), பிசாசு (அதாவது, "அவதூறு செய்பவன்"—மத்தேயு 4:1; 1 பீட்டர் 5:8) உட்பட பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறான். லூசிபர் (ஏசாயா 14:12), சர்ப்பம் (2 கொரிந்தியர் 11:3; வெளிப்படுத்துதல் 12:9) மற்றும் பல பெயர்கள் உண்டு.

சாத்தான் ஒரு தனிப்பட்ட நபராக இருப்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனை அப்படியே அங்கீகரித்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டது. இயேசு அவனை அடிக்கடி பெயரால் குறிப்பிட்டுள்ளார் (எ.கா., லூக்கா 10:18; மத்தேயு 4:10) அவரை "இந்த உலகத்தின் அதிபதி" என்று அழைத்தார் (யோவான் 12:31; 14:30; 16:11).

அப்போஸ்தலனாகிய பவுல் சாத்தானை "இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்" (2 கொரிந்தியர் 4: 4) மற்றும் "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபேசியர் 2:2) என்று அழைத்தார். அப்போஸ்தலனாகிய யோவான் கூறினார், "உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது" (1 யோவான் 5:19) மற்றும் சாத்தான் "உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்" (வெளிப்படுத்தல் 12:9). இவை ஆள்தன்மையற்ற சக்தியின் விளக்கங்களாகவோ அல்லது தீமையின் வெறும் உருவமாகவோ இருக்க முடியாது.

வேதம் மனிதனும் உலகமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, தேவன் "தேவதூதர்களின் ஆயிரம் பதினாயிரமான கூட்டத்தை" (எபிரெயர் 12:22) உருவாக்கியுள்ளார், இது மிகுந்த வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தின் ஆவிக்குரிய மனிதர்களின் பரலோக புரவலன். இந்த உயிரினங்களில் மிக உயர்ந்தவர்கள் தேவனுடைய அரியாசனத்தில் பணியாற்றும் கேருபீன்கள், மேலும் "அபிஷேகம் செய்யப்பட்ட கேருப்" முதலில் சாத்தானே (எசேக்கியேல் 28:14). அவன் "ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்."

இருப்பினும், தேவன் சாத்தானை ஒரு தீயவனாக உருவாக்கவில்லை. தேவதூதர்கள், மனிதனைப் போல, சுதந்திரமான ஆவிகளாக உருவாக்கப்பட்டனர், சிந்திக்க இயலாத இயந்திரங்களாக அல்ல. அவர்கள் தேவனுடைய விருப்பத்தை முழுமையாக நிராகரித்து, அவர்கள் தேர்ந்தெடுத்ததால் அவருடைய அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்ய முடிந்தது.

மனிதன் மற்றும் தேவதூதர்கள் இரண்டிலும், உள்ள அடிப்படை பாவம் அவிசுவாசம் மற்றும் பெருமையின் என்கிற இரட்டை பாவம். சாத்தான் தன் இருதயத்தில், "நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; ... நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசாயா 14:13,14). மீண்டும், இவை ஆள்தன்மையற்ற சக்தியின் செயல்கள் அல்லது உந்துதல்களாக இருக்க முடியாது.

சாத்தானின் சில குணாதிசயங்களையும் இயேசு சொன்னார். கிறிஸ்து அவன் ஆதியில் இருந்தே ஒரு கொலைபாதகனாய் இருக்கிறான், சத்தியத்தை கடைபிடிக்கவில்லை, ஏனென்றால் அவனிடம் உண்மை இல்லை, மேலும் அவன் பொய் பேசும்போது, அவன் தனது சொந்த மொழியை பேசுகிறான், ஏனெனில் அவன் ஒரு பொய்யன் மற்றும் பொய்க்குப் பிதா (யோவான் 8:44).

கிறிஸ்தவர்கள் சாத்தானின் யதார்த்தத்தை உணர்ந்து, அவன் யாரை விழுங்கலாம் என்று வகைத்தேடும் கர்ஜிக்கும் சிங்கத்தைப் போல சுற்றித் திரிகிறான் என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் (1 பேதுரு 5:8). பிசாசின் பாவத்தையும் சோதனையையும் நம்மால் வெல்வது சாத்தியமில்லை, ஆனால் எப்படி வலிமையாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. நாம் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை அணிந்து சோதனையை எதிர்கொள்ள வேண்டும் (எபேசியர் 6:13).

English



முகப்பு பக்கம்

பி”சாசு / சாத்தான் ஒரு நபரா அல்லது ஒரு சக்தியாக / தீமையின் உருவமா?”
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries