கேள்வி
கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி ஒழுக்கமான நிலையில் திருத்த வேண்டும்? இதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
எப்படி குழந்தைகளை நல்ல முறையில் ஒழுங்குபடுத்துவது என்பது மிக கடினமான இலக்காகும், ஆனால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சரீர நிலைமையில் தண்டிப்பதன் மூலம் ஒழுங்குபடுத்தும் ஒரு முறையைத்தான் வேதாகமம் போதிக்கிறது என்பது ஒரு சிலரின் கருத்தாகும். மற்றும் சிலர் “நேரம்-முடிதல்கள்” மற்றும் சரீரப்பிரகாமாக தண்டித்தலைத்தவிர பிற ஒழுக்குபடுத்தும் முறையே மிகவும் சிறந்தது என்று வலியுறுத்துகின்றனர். வேதாகமம் இதைக்குறித்து என்ன சொல்லுகிறது? சரீரப்பிரகாரமாக தண்டித்தலே ஏற்றது, பலனளிப்பது மற்றும் அவசியமானது என்று வேதாகமம் போதிக்கிறது.
நாங்கள் குழந்தைகளை கொடுமைபடுத்துவதை வலியுறுத்துகிறோம் என்று தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். குழந்தைகளை உடலில் சேதம் உண்டாகத்தக்கதாக ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது. வேதாகமத்தின்படி குழந்தைகள் ஏற்ற விதத்தில் மற்றும் கட்டுப்பாடோடு கூடிய தண்டனையே நல்லது மற்றும் அதுவே அவர்களுடைய நல்வாழ்வுக்கு மற்றும் சரியான முறையில் வளரவும் உதவும்.
அநேக வேத வசனங்கள் தண்டனையை வலியுறுத்துகின்றன. “பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே” (நீதிமொழிகள் 23:13-14; மற்றும் 13:24; 22:15; 20:30). ஓழுக்குபடுத்துவதின் முக்கியத்துவத்தை வேதாகமம் கடுமையாக வலியுறுத்துகிறது. ஆக்கப்பூர்வமான நபர்களாய் நாமிருப்பதற்கு இது நமக்கிருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாகும். இளம் வயதில் கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சீர்படுத்தப்படாத பிள்ளைகள் ஒழுக்கமற்றவர்களாக முரட்டாட்டமுள்ளவர்களாக, அதிகாரத்தை மதிக்காதவர்களாக வளர்கின்றனர், இதன் முடிவு தேவனுக்கு கீழ்படிவதும் அவரை பின்பற்றுவதும் அவர்களுக்கு மிகவும் கடினமாக்குகிறது. தேவன் நம்மை ஒழுக்குபடுத்த மற்றும் சரியான பாதையில் நடத்த மற்றும் நம்முடைய தவறான நடக்கையில் இருந்து மனந்திரும்புவதற்கேதுவான ஊக்கப்படுத்த சிட்சையை பயன்படுத்துகிறார் (சங்கீதம் 94:12 நீதிமொழிகள் 1:7; 6:23; 12:1; 13:1; 15:5; ஏசாயா 38:16; எபிரெயர் 12:9).
வேதாகமப் பிரமாணங்களோடு சீர்திருத்துதலை சரியாக கையாள பெற்றோர் சீர்திருத்துதலை பற்றி வேதவசனங்களின் போதனைகளை சரியாக அறிந்திருக்க வேண்டும். பிள்ளைகளை குறித்து அநேக ஞானமான காரியங்களை நீதிமொழிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதாவது பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும், தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான் (நீதிமொழிகள் 25:15). இந்த வசனம் பிள்ளைகளை சீர்படுத்தாததினால் உண்டாகும் விளைவை விளக்குகிறது. அதாவது பெற்றோருக்கு வெட்கத்தை உண்டுபண்ணுவான். நிச்சயமாக சீர்படுத்துதலின் நோக்கம் பிள்ளைகளுக்கு நன்மையை உண்டாக்கவேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர இது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்தவோ அல்லது தவறாக குழந்தைகளை கையாளப்படுவதை நியாயப்படுத்தவோ இருக்க கூடாது.
சீர்படுத்துதல் என்பது பிறரை சரிசெய்து அவர்களை சரியான பாதையில் நடக்க பயிற்சிவிப்பதாகும். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்காணும், ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் (எபிரெயர் 12:11). தேவனுடைய சிட்சை அன்பாயிருக்கிறது அதுபோலவே பெற்றோருடைய சிட்சையும் தங்கள் பிள்ளைகளிடத்தில் இருக்க வேண்டும். உடல்ரீதியான சிட்சை ஒரு போதும் எந்த விதமான நீடித்த உடல் தீங்கையாவது அல்லது வேதனையாவது ஏற்படுத்த கூடாது. உடல்ரீதியான தண்டனையோடு எப்பொழுதும் அன்பான அரவணைப்பும் இருக்கவேண்டும் அதுவே அவர்கள் நேசிக்கப்படுகின்றனர் என்ற நிச்சயத்தை அவர்களுக்கு கொடுக்கும். இப்படிபட்ட சமயங்களே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க ஏற்ற தருணங்கள் ஏனென்றால் பெற்றோராக நாம் அதை நம்முடைய பிள்ளைகளுக்கு செய்யும் போது தேவன் நம்மை நேசிக்கிறார் என்கிற காரணமும் அதில் விளங்குகிறதாக இருக்கிறது.
உடல் ரீதியான சிட்சைகளை தவிர பிற சிட்சைகளாகிய “டயம்-அவுட்” பேன்;ற சிட்சைளை பயன்படுத்த முடியுமா? உடல் ரீதியான சிட்சைகளுக்கு தங்கள் குழந்தைகள் சரியாக பிரதியுத்திரம் தருவதில்லை என்பதை சில பெற்றோர்களால் பார்க்க முடியும். ஒரு சிலர் பிள்ளைகளை சீர்படுத்த “டயம்-அவுட்” என்கிறதான குறுகிய கால நேரம் எடுப்பது, அடிப்படை பயிற்சி கொடுப்பது, ஏதேனும் ஒரு பொருளை பிள்ளைகளிடமிருந்து எடுப்பது ஆகியவைகள் மிகவும் பயனுள்ள ஊக்குவிக்கும் நடத்தையின் மாற்றத்தை உண்டுபண்ணும். அப்படிப்பட்ட சூழல் ஏற்படுமே ஆனால் தேவையான நடத்தையில் மாற்றத்தை தரக்கூடிய சீர்படுத்தும் முறைகளை எல்லா பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டும். வேதாகமம் மறுக்கமுடியாத வண்ணம் உடல் ரீதியான சிட்சையை வலியுறுத்தும்போதெல்லாம், தெய்வீக சுபாவத்தை உருவாக்குவதையே இலக்காக கொண்டு வேதாகமம் வலிறுருத்துகிறதேயல்லாமல், இலக்கை கொடுக்க கூடிய பயிற்சிக்கான முறையை வரையறுக்கவில்லை.
இந்த பிரச்சனையை இன்னும் கடினமாக்கும் வகையில் அரசாங்கம் உடல் ரீதியான அனைத்து சிட்சைளையும் குழந்தைகள் வதைப்பு என்று வகைப்படுத்த தொடங்கியதே ஆகும். அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தண்டிக்காததற்கு காரணம் அவர்கள் அரசாங்கத்திடம் அறிவித்து விடுவார்கள் என்கிற பயம் மற்றும் தங்கள் குழந்தைகளை தங்களை விட்டு எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதே ஆகும். அரசாங்கம் குழந்தைகளை தண்டிப்பதை சட்ட விரோதமான செயலாக கருதும்போது பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? ரோமர் 13:1-7ன் படி பெற்றோர் அரசாங்கத்திற்கு கீழ்ப்படியவேண்டும். அரசாங்கமானது வேத வசனத்திற்கு முரண்பாடாக இருக்கக்கூடாது. வேதத்தின் அடிப்படையில் உடல் ரீதியான சிட்சை குழந்தைகளின் சிறப்பான நலனுக்காகவே சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்க்கும் மேலாக பிள்ளைகள் குடும்பத்தோடு இருந்து சில ஒழுங்கங்களை கற்றுக்கொள்வது அவர்கள் அரசாங்கத்தின் “கருதுதலுக்குக்” கீழ் இருப்தைவிட மிக சிறந்தது.
எபேசியர் 6:4ல் தகப்பன் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை தேவனுடைய வழிகளில் வளர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிள்ளைகளை தேவனுடைய போதனைகளில் வளர்ப்பது என்பது கட்டுப்படுத்துதல், சரிசெய்தல் மற்றும் உடல் ரீதியான சிட்சை ஆகியவைகளை உள்ளடக்கியதே ஆகும்.
English
கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி ஒழுக்கமான நிலையில் திருத்த வேண்டும்? இதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?