கேள்வி
தேவன் சாத்தானை நேசிக்கிறாரா?
பதில்
இல்லை, தேவன் சாத்தானை நேசிக்கவில்லை, நாமும் அவனை நேசிக்கக்கூடாது. தேவன் பொல்லாங்கான மற்றும் அசுத்தமானதை நேசிக்க முடியாது, சாத்தான் அதையெல்லாம் உள்ளடக்குகிறான். அவன் எதிராளி (1 பேதுரு 5:8); பொல்லாங்கன் (மத்தேயு 6:13); பொய்க்குப் பிதா மற்றும் கொலைபாதகன் (யோவான் 8:44); தேவனுடைய ஜன்கனளைக் குற்றம் சாட்டுபவன் (வெளிப்படுத்துதல் 12:10); சோதனைக்காரன் (1 தெசலோனிக்கேயர் 3:5); பெருமையுள்ளவன், துன்மார்க்கன் மற்றும் வன்முறையாளன் (ஏசாயா 14:12-15); ஏமாற்றுகிறவன் (அப். 13:10); ஒரு தந்திரக்காரன் (எபேசியர் 6:11); ஒரு திருடன் (லூக்கா 8:12); மற்றும் இன்னும் பல தீயக் காரியங்கள் உள்ளடக்கியவன். உண்மையில், தேவன் வெறுக்கும் அனைத்தும் அவன்தான். தேவனின் மீதான வெறுப்பில் சாத்தானின் இருதயம் நிலைநிறுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது, அவனது நியாயத்தீர்ப்பு இறுதியானது, மற்றும் அவனது அழிவு நிச்சயம். வெளிப்படுத்தல் 20 சாத்தானுக்கான தேவனுடைய எதிர்காலத் திட்டத்தை விவரிக்கிறது, மேலும் சாத்தானின் மீதான அன்பிற்கு அதில் எந்தப் பங்கும் இல்லை.
நாம் நம் சத்துருக்களை நேசிக்க வேண்டும் என்ற இயேசுவின் கட்டளை (மத்தேயு 5:44) இந்த உலகில் உள்ள ஒருவருக்கொருவர் உறவுகளை நிர்வகிப்பதாகும். நாம் தேவனை நேசிக்கிறோம், தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்களை (நம் சத்திருக்களை கூட) நேசிக்கிறோம். தேவதூதர்கள் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்படவில்லை. பரிசுத்த தேவதூதர்களை நேசிக்கும்படி நாம் ஒருபோதும் சொல்லப்படவில்லை, தீய தேவதூதர்களை மெய்யாகவே நேசிக்கும்படி நாம் ஒருபோதும் சொல்லப்படவில்லை.
நாம் விரும்பும் தேவனுக்கு எதிரானவன் சாத்தான் என்பதால், நாம் சாத்தானை நேசிக்க முடியாது. நாம் சாத்தானை நேசித்தால், நாம் நம் தேவனை வெறுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம், ஏனென்றால் பரிசுத்தம் பாவத்திற்கு எதிரானது.
சாத்தானுக்கு மன்னிப்பு இருக்காது என்று தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்; நாம் தேவனுடைய தியாக அன்பின் வெளிப்பாடு, சிலுவையில் காட்டப்பட்டுள்ளன. தேவன் மனிதகுலத்தை அன்போடு மீட்டுக்கொண்டதால், அவர் சாத்தானை "உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி" வைத்தார் (கொலோசெயர் 2:15). சாத்தானின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நம்மீது அவர் கொண்டுள்ள அன்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
English
தேவன் சாத்தானை நேசிக்கிறாரா?