settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ சொப்பனத்தின் விளக்கம்? நம்முடைய சொப்பனங்கள் தேவனிடத்திலிருந்து வருகின்றனவா?

பதில்


GotQuestions.org/Tamil கிறிஸ்தவர்களின் சொப்பனத்திற்கு விளக்கம் கொடுக்கும் சேவைமையம் அல்ல. நாங்கள் சொப்பனத்திற்கு விளக்கம் கொடுக்கிறதில்லை. தனிமனிதனுடைய சொப்பனமும் அதனுடைய அர்த்தமும் அவனுக்கும் தேவனுக்கும் இடைப்பட்டது என்று நாங்கள் உறுதியாக விசுவாசிக்கிறோம். கடந்த காலங்களில் தேவன் சில நேரங்களில் சொப்பனங்கள் மூலமாக மனிதர்களிடம் பேசினார். உதாரணம் யாக்கோபின் குமாரனான யோசேப்பு (ஆதியாகமம் 37:5-10); மரியாளின் கணவனாகிய யோசேப்பு (மத்தேயு 2:12-22); சாலமோன் (1 இராஜாக்கள் 3:5-15); மற்றும் பலர் (தானியேல் 2:1; 7:1; மத்தேயு 27:19). அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 2:17ல் குறிப்பிடுகிற யோவேல் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் தேவன் சொப்பனத்தைப் பயன்படுத்துகிறார் என்று சொல்லுகிறது. எனவே தேவன் விரும்பினால் அவர் சொப்பனங்களின் மூலமாக பேச முடியும்.

எனினும் வேதாகமம் முழுமையானது ஆகும், இன்று முதல் நித்தியம்வரை நாம் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது. இது தேவன் அற்புதத்தை செயல்படுத்தவில்லை அல்லது சொப்பனங்கள் மூலமாக பேச வில்லை என்று சொல்வதற்காக அல்ல ஆனால் தேவன் சொப்பனம், தரிசனம், உணர்வு அல்லது சிரிய சத்தத்தின் மூலம் எதை வெளிப்படுத்தினாலும் அது ஏற்கனவே வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதற்கு ஒத்ததாகத்தான் இருக்க வேண்டும். சொப்பனம் வசனத்தினுடைய அதிகாரத்தை மேற்கொள்ள கூடாது.

உங்களுக்கு சொப்பனம் வந்தால் அது தேவனால் கொடுக்கப்பட்டதாக இருந்தால் ஜெபத்தோடு அதனை சோதித்து அது வேத வசனத்தோடு ஒத்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்களுடைய சொப்பனம் வேதவசனத்தோடு ஒத்துபோகுமேயானால் உங்கள் சொப்பனத்தின்படி நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஜெபத்தோடு தீர்மானிக்க வேண்டும் (யாக்கோபு 1:5). வேதவாக்கியங்களில் எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சொப்பனத்தைப் யாராவது பெற்றால் அந்த சொப்பனத்தினுடைய அர்த்தத்தை அந்த நபரிடம் நேரடியாகவோ, தேவதூதர்கள் மூலமாகவோ அல்லது மற்றொரு தூதுவர் மூலமாக தேவன் மிகத்தெளிவாக அதை விளக்குகிறார் (ஆதியாகமம் 40:5-11; தானியேல் 2:45 4:19). தேவன் நம்மோடு பேசும்போது அவருடைய செய்தியை நாம் புரிந்துகொள்ள தக்க விதத்தில் அதை தெளிவான நிலையில் வெளிப்படுத்துகிறார்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ சொப்பனத்தின் விளக்கம்? நம்முடைய சொப்பனங்கள் தேவனிடத்திலிருந்து வருகின்றனவா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries