settings icon
share icon
கேள்வி

இருபொருள்வாதம் என்றால் என்ன?

பதில்


இறையியலில், இருபொருள்வாதம் என்ற கருத்து இரண்டு தனித்தனி பொருள்களின் உள்ளடக்கமாகும் - நன்மை மற்றும் தீமை - சமமாக இரண்டும் சக்திவாய்ந்தவை என்று கருதுகிறது. "கிறிஸ்தவ" இருபொருள்வாதத்தில், தேவன் நல்ல பொருளடக்கத்தையும், சாத்தான் தீய அமைப்பையும் குறிக்கிறது.

இருப்பினும், உண்மை என்னவென்றால், சாத்தானுக்கு சில எல்லைக்குட்பட்ட நிலையில் வல்லமை இருந்தாலும், அவன் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சமமானவன் அல்ல, ஏனென்றால் அவன் கலகம் செய்வதற்கு முன்பு தேவனால் ஒரு தேவதூதனாக படைக்கப்பட்டான் (ஏசாயா 14:12-15; எசேக்கியேல் 28:13-17). வேதவாக்கியங்கள் கூறுவது போல், “பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவான் 4:4). வேதாகமத்தின் படி, இருபொருள்வாதம் இல்லை, நன்மை மற்றும் தீமை என்று அழைக்கப்படும் சம வல்லமையின் இரண்டு எதிர்க்கும் சக்திகளும் இல்லை. எல்லாம் வல்ல தேவனால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நல்லது, பிரபஞ்சத்தில் விதிவிலக்கு இல்லாமல் மிக வல்லமைவாய்ந்த சக்தியாகும். சாத்தானால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தீமை, நன்மைக்கு பொருந்தாத ஒரு குறைந்த சக்தி. எந்தவொரு நேருக்கு நேர் போட்டிகளிலும் ஒவ்வொரு முறையும் தீமை தோற்கடிக்கப்படும், ஏனென்றால் சர்வவல்லமையுள்ள தேவன், நன்மையின் சாராம்சம் எல்லாம் வல்லவர், அதேசமயம் தீமை, சாத்தானால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

எந்தவொரு கோட்பாடும் நன்மை மற்றும் தீமையை இரண்டு சமநிலையில் எதிர்க்கும் சக்திகளாக சித்தரிக்கும் போதெல்லாம், அந்த கோட்பாடு சர்வவல்லமையுள்ள தேவனால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நல்லது என்கிற கோட்பாடு, பிரபஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்ற வேத நிலைப்பாட்டிற்கு முரணானது. சாத்தான் ஒருபோதும் தேவனுக்கு சமமாக இருக்க மாட்டான் என்பதால், அவன் தேவனுக்கு சம சக்தியுள்ளவன் என்று சொல்லும் எந்தவொரு கோட்பாடும் ஒரு தவறான கோட்பாடாகும். தேவனுக்கு மேலே உயர முயன்றதற்காக சாத்தான் பரலோகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டான் என்பதல்ல, தேவனைவிட சமமாகவோ அல்லது உயர்ந்தவனாகவோ இருக்க முயற்சிப்பதை சாத்தான் கைவிட்டுவிட்டான் என்றும் அர்த்தமல்ல, மனித ஞானத்தின் தத்துவத்தண்டு மூலம் பெருமளவில் கீழே வந்துள்ள “இருபொருள்வாதத்தின்” அடிப்படைக் கோட்பாடுகளுக்கு சான்றாக இருக்கிறது.

நமது பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும் இருபொருள்வாதம் இருக்க முடியாது. ஒரே ஒரு வல்லமை மட்டுமே மீறுகிறது, வேதாகமத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள அந்த வல்லமை எல்லாம் வல்ல தேவன் ஆகும். வேதப்பூர்வ சான்றுகளின்படி, சர்வவல்லமையுள்ள ஒரே ஒரு வல்லமை மட்டுமே உள்ளது, இரண்டல்ல. ஆகவே, இரண்டு சமத்துவ சக்திகள்/வல்லமைகள் ஒருவருக்கொருவர் எதிர்க்கின்றன (நல்லதும் தீமையும்) என்று வாதிடும் இருபொருள்வாதத்தின் எந்தவொரு கோட்பாடும் தவறான கோட்பாடு ஆகும்.

English



முகப்பு பக்கம்

இருபொருள்வாதம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries