settings icon
share icon
கேள்வி

கடைசிக் காலங்களில் இஸ்ரவேலின் பங்கு என்ன?

பதில்


ஒவ்வொரு முறையும் இஸ்ரவேலில் அல்லது அதைச் சுற்றி ஒரு மோதல் ஏற்படும் போது, பலர் அதை சீக்கிரத்தில் நெருங்கும் இறுதி காலத்தின் அடையாளமாகக் கருதுகின்றனர். இதன் பிரச்சனை என்னவென்றால், இஸ்ரவேலில் நடக்கும் மோதலில் நாம் இறுதியில் சோர்வடையலாம், அதனால் உண்மையாக, தீர்க்கதரிசனமாக குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நிகழும்போது நாம் அடையாளம் காண முடியாது. இஸ்ரவேலில் மோதல் என்பது கடைசிக் காலங்களின் அடையாளம் அல்ல.

இஸ்ரவேல் ஒரு தேசமாக இருந்த போதெல்லாம் இஸ்ரவேலில் மோதல் உண்டாயிருந்தது என்பது உண்மை. எகிப்தியர்கள், அமலேக்கியர்கள், மீதியானியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள், எமோரியர்கள், பெலிஸ்தியர்கள், அசீரியர்கள், பாபிலோனியர்கள், பெர்சியர்கள் அல்லது ரோமர்கள் என்று யாராக இருந்தாலும், இஸ்ரவேல் தேசம் எப்போதும் அதன் அண்டை நாடுகளால் துன்புறுத்தப்படுகிறது. இது ஏன்? வேதாகமத்தின் படி, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை வைத்திருப்பதால், சாத்தான் அந்தத் திட்டத்தை தோற்கடிக்க விரும்புகிறான். இஸ்ரவேலின் மீது குறிப்பாக இஸ்ரவேலின் தேவன் மீது சாத்தானிய வெறுப்பு காரணமாக இஸ்ரவேலின் அண்டை நாடுகள் எப்போதும் இஸ்ரேல் அழிக்கப்படுவதைக் காண விரும்பின. அது அசீரியாவின் அரசர் சனகெரிப்பாக இருந்தாலும் சரி; பெர்சியாவின் அதிகாரியாகிய ஆமானாக இருந்தாலும்; ஜெர்மனியின் நாசித் தலைவர் ஹிட்லராக இருந்தாலும்; அல்லது ஈரானின் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் என யாராக இருந்தாலும் இஸ்ரவேலை முற்றிலுமாக அழிக்கும் முயற்சிகள் எப்போதும் தோல்வியடைகிரதாக இருந்தது. இஸ்ரவேலை துன்புறுத்துபவர்கள் வந்து போவார்கள், ஆனால் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரை துன்புறுத்தல் இருக்கும். ஆகவே இதன் விளைவாக, இஸ்ரவேலில் உண்டாகும் மோதல்/சண்டை என்பது கடைசிக் காலங்களில் இயேசுவின் விரைவான வருகையின் நம்பகமான அடையாளம் அல்ல.

இருப்பினும், கடைசிக் காலங்களில் இஸ்ரவேலில் பயங்கரமான மோதல் ஏற்படும் என்று வேதாகமம் கூறுகிறது. அதனால்தான் அந்த காலம் உபத்திரவம், மகா உபத்திரவம் மற்றும் "யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்" என்றும் அழைக்கப்படுகிறது (எரேமியா 30:7). கடைசிக் காலங்களில் இஸ்ரவேலைப் பற்றி வேதாகமம் சொல்வது இங்கே:

இஸ்ரவேல் தேசத்திற்கு மீண்டுமாய் யூதர்கள் பெருமளவில் திரும்புவார்கள் (உபாகமம் 30:3; ஏசாயா 43:6; எசேக்கியேல் 34:11-13; 36:24; 37:1-14).

அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலுடன் 7 வருட "சமாதானத்தின்" உடன்படிக்கையை செய்வான் (ஏசாயா 28:18; தானியேல் 9:27).

எருசலேமில் தேவாலயம் மீண்டும் கட்டப்படும் (தானியேல் 9:27; மத்தேயு 24:15; 2 தெசலோனிக்கேயர் 2:3-4; வெளிப்படுத்துதல் 11:1).

அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலுடனான தனது உடன்படிக்கையை முறித்துக் கொள்வான், மேலும் இஸ்ரவேல் மீதான உலகளாவிய உபத்திரவம் ஏற்படும் (தானியேல் 9:27; 12:1, 11; சகரியா 11:16; மத்தேயு 24:15, 21; வெளிப்படுத்துதல் 12:13). இஸ்ரவேல் படையெடுக்கப்படும் (எசேக்கியேல் அதிகாரங்கள் 38-39).

இஸ்ரவேல் இறுதியாக இயேசுவை தங்கள் மேசியாவாக அறிந்துகொள்வார்கள் (சகரியா 12:10). இஸ்ரவேல் மீளுருவாக்கம் செய்யப்படும், மீட்கப்படும், மற்றும் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் (எரேமியா 33:8; எசேக்கியேல் 11:17; ரோமர் 11:26).

இன்று இஸ்ரவேலில் பெரும் கொந்தளிப்பு இருக்கிறது. இஸ்ரவேல் உபத்திரவப்படுத்தப்படுகிறது, எதிரிகளால் சூழப்பட்டுள்ளது—அதாவது சிரியா, லெபனான், ஜோர்டான், சவுதி அரேபியா, ஈரான், ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், ஹெஸ்புல்லா போன்றவை. ஆனால் இஸ்ரவேலின் இந்த வெறுப்பும் துன்புறுத்தலும் கடைசிக் காலங்களில் என்ன சம்பவிக்கும் என்பதற்கான குறிப்பு மட்டுமே (மத்தேயு 24:15-21). 1948 இல் இஸ்ரேல் ஒரு தேசமாக மறுசீரமைக்கப்பட்டபோது சமீபத்திய உபத்திரவம் தொடங்கியது. பல வேதாகம தீர்க்கதரிசன அறிஞர்கள் 1967 இல் நிகழ்ந்த அரபு-இஸ்ரேலிய ஆறு நாள் யுத்தம் "முடிவின் ஆரம்பம்" என்று நம்பினர். இன்று இஸ்ரவேலில் நடப்பது முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் குறிக்க முடியுமா? ஆம். இது முடிவு சமீபித்திருக்கிறது என்று அர்த்தமா? இல்லை. இயேசு இதைக்குறித்து மிக அருமையாகச் சொன்னார், "ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது" (மத்தேயு 24:4-6).

English



முகப்பு பக்கம்

கடைசிக் காலங்களில் இஸ்ரவேலின் பங்கு என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries