கேள்வி
ஜீவபுஸ்தகத்திலிருந்து ஒரு நபரின் பெயரை அழிக்க முடியுமா?
பதில்
வெளிப்படுத்துதல் 22:19 கூறுகிறது, “ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்" (KJV). இந்த வசனம் பொதுவாக நித்திய பாதுகாப்பு பற்றிய விவாதத்தில் ஈடுபடுகிறது. வெளிப்படுத்தல் 22:19 என்பது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் ஒரு நபரின் பெயர் எழுதப்பட்ட பிறகு, அது எதிர்காலத்தில் எப்போதாவது அழிக்கப்படுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு கிறிஸ்தவர் தனது இரட்சிப்பை இழக்கக் கூடுமா?
முதலாவது, ஒரு உண்மையான விசுவாசி தேவனுடைய வல்லமையால் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார், மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரைப்போடப்படுகிறார் (எபேசியர் 4:30), மற்றும் பிதா குமாரனுக்குக் கொடுத்த அனைவரையும் அவர் இழக்க மாட்டார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது (யோவான் 6:39). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உரைத்தார், "நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது" (யோவான் 10:28-29). இரட்சிப்பு தேவனுடைய கிரியை, நம்முடையது அல்ல (தீத்து 3:5), மேலும் அவருடைய வல்லமைதான் நம்மை பாதுகாக்கிறது.
வெளிப்படுத்தல் 22:19 இல் குறிப்பிடப்பட்டுள்ள "எவனாவது" விசுவாசிகள் இல்லையென்றால், அவர்கள் யார்? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேதாகமத்தின் வார்த்தைகளைச் சேர்க்கவோ அல்லது குறைக்கவோ யார் விரும்பலாம்? அநேகமாக, தேவனுடைய வார்த்தையில் உள்ள இந்த முறைகேடு உண்மையான விசுவாசிகளால் செய்யப்படாது, ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் இருப்பதாக கருதுபவர்கள். பொதுவாக, தேவனுடைய வெளிப்பாட்டை பாரம்பரியமாகத் தடுத்த இரண்டு முக்கிய குழுக்கள், போலி-கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் மற்றும் மிகவும் தாராளவாத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்கள். பல வழிபாட்டு முறைகள் மற்றும் இறையியல் தாராளவாதிகள் கிறிஸ்துவின் பெயரை தங்களுடையதாகக் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் "மறுபடியும் பிறக்கவில்லை"—இது ஒரு கிறிஸ்தவருக்கான உறுதியான வேதாகமச் சொல்.
தங்களை விசுவாசிகள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களின் பல உதாரணங்களை வேதாகமம் மேற்கோள் காட்டுகிறது, ஆனால் அவர்களின் கிரியை அதைப் பொய் என்று நிரூபிக்கப்பட்டது. யோவான் 15 இல், இயேசு மெய்யான திராட்சைச் செடியான அவரில் நிலைத்திராத கிளைகள் என்று குறிப்பிடுகிறார், அவைகளால் எந்தப் பலனையும் தரமுடியவில்லை என்று குறிப்பிடுகிறார். அவை பொய்யானவை என்று நமக்குத் தெரியும், ஏனென்றால் "அவைகளின் கனிகளால் நீங்கள் அவர்களை அறிவீர்கள்" (மத்தேயு 7:16, 20); உண்மையான சீஷர்கள் தங்களுக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரின் கனியை வெளிப்படுத்துவார்கள் (கலாத்தியர் 5:22). 2 பேதுரு 2:22 இல், கள்ளப் போதகர்கள் நாய் தான் கக்கினதைத் தின்னவும் மற்றும் "கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது" (ESV) போல இருக்கிறார்கள். கனிகொடா மலட்டு கிளை, நாய் மற்றும் பன்றி அனைத்தும் தாங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்றுக் கூறிக்கொள்ளுகிறவர்களின் அடையாளங்கள், ஆனால் தங்களுடைய சொந்த நீதியைத் தவிர வேறு எதுவும் இல்லை, மெய்யாகவே இரட்சிக்கிற கிறிஸ்துவின் நீதியை அல்ல. தங்கள் பாவத்தை நினைத்து மனந்திரும்பி மறுபடியும் பிறந்தவர்கள் தேவனுடைய வார்த்தையை மனமுவந்து இந்த வழியில் சேர்த்துக் கொள்வார்கள் என்பது சந்தேகமே—அதாவது அதனோடு கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் இருப்பது. தேவனுடைய வார்த்தைக்கு வேண்டுமென்றே சீர்கேட்டை கொண்டுவருவது விசுவாசமின்மையை வெளிப்படுத்துகிறது
வெளிப்படுத்துதல் 22:19 இன் அர்த்தத்தைப் பற்றி மற்றொரு முக்கியமான கருத்தில் உள்ளது, மேலும் இது மொழிபெயர்ப்பை உள்ளடக்கியது. எந்த ஆரம்ப கிரேக்க கையெழுத்துப் பிரதியிலும் கூட "ஜீவபுஸ்தகம்" என்று குறிப்பிடப்படவில்லை; அதற்கு பதிலாக, ஒவ்வொரு கிரேக்க கையெழுத்துப் பிரதியிலும் "ஜீவவிருட்சம்" என்று உள்ளது. NIV இல் வெளிப்படுத்துதல் 22:19 இவ்வாறு உள்ளது: “ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன சுருளின் வார்த்தைகளிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவவிருட்சத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் சுருளில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.” பிற மொழிபெயர்ப்புகள் “புஸ்தகம்” என்பதற்கு பதிலாக “விருட்சம்” என்று வருகிறது, அவற்றுள் NASB, ESV, NLT, HCSB, ISV, NET மற்றும் ASV போன்ற மொழிபெயர்ப்புகள் அடங்கும். KJV மொழிபெயர்ப்பு மட்டும் அதை ஜீவ ”புஸ்தகம்” என்று மொழிபெயர்த்து கிட்டத்தட்ட தனித்து நிற்கிறது. எராஸ்மஸ், தனது கிரேக்க உரையைத் தொகுத்ததில், வெளிப்படுத்துதலின் கடைசி ஆறு வசனங்களை லத்தீன் வல்கேட்டிலிருந்து கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது பிழை ஏற்பட்டது. ஒரு எழுத்தாளர் தற்செயலாக லத்தீன் மொழியை ("மரம்") லிப்ரோ ("புத்தகம்") கொண்டு மாற்றியதால் "மரம்" ஒரு "புத்தகம்" என்றானது. KJV போன்ற டெக்ஸ்டஸ் ரெசெப்டஸைப் (பெறப்பட்ட உரையைப்) பின்பற்றும் அனைத்து மொழிபெயர்ப்புகளும் இவ்வாறு "ஜீவவிருட்சம்" என்பதற்குப் பதிலாக "புஸ்தகம்" என்று தவறாகக் கூறுகின்றன.
"ஜீவவிருட்சம்" மொழிபெயர்ப்பிற்கு பதிலாக "ஜீவபுஸ்தகம்" என்னும் மொழிபெயர்ப்பிற்கு வாதிடுவது ஒரே அதிகாரத்தில் உள்ள மற்ற இரண்டு வசனங்கள்: வெளிப்படுத்துதல் 22:2 மற்றும் 14. இரண்டும் "ஜீவவிருட்சம்" மற்றும் "நகரம்" ஆகியவற்றை வசனம் 19 போலவே ஒன்றாக குறிப்பிடுகின்றன. மேலும், சொல் பகுதி அல்லது பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. தேவனுடைய வார்த்தையை சீர்கெடுப்பவர், அந்த கனியில் தனக்கு எந்த உரிமை கோரப்பட்டாலும், ஜீவவிருட்சத்தை அணுகுவதை இழப்பார்கள்.
வெளிப்படுத்தல் 3:5 இந்தப் பிரச்சினையை பாதிக்கும் மற்றொரு வசனம். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ...ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல்”. சர்தை சபைக்கு இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "ஜெயங்கொள்ளுகிறன்" கிறிஸ்தவன். இதை 1 யோவான் 5:4 உடன் ஒப்பிடுக: "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்." மற்றும் வசனம் 5: "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?” (1 யோவான் 2:13 ஐயும் பார்க்கவும்.) அனைத்து விசுவாசிகளும் "ஜெயங்கொள்ளுகிறவர்களாக" இருக்கிறார்கள், அதில் அவர்கள் உலகின் பாவம் மற்றும் அவிசுவாசத்தின் மீது வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சில மக்கள் வெளிப்படுத்துதல் 3:5 இல் தேவனுடைய பேனாவின் சித்திரத்தைக் காண்கிறார்கள், பாவம் செய்யும் எந்த கிறிஸ்தவரின் பெயரையும் அடிக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் இதை இவ்வாறாக படித்தார்கள்: "நீங்கள் குழப்பமடைந்து ஜெயங்கொள்ளாவிட்டால், நீங்கள் உங்கள் இரட்சிப்பை இழக்கப் போகிறீர்கள்! உண்மையில், நான் உங்கள் பெயரை ஜீவபுஸ்தகத்திலிருந்து அழிப்பேன்!” ஆனால் வசனம் சொல்வது இதுவல்ல. இயேசு இங்கே ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார், ஒரு எச்சரிக்கை அல்ல.
ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து தேவன் ஒரு விசுவாசியின் பெயரை அழிக்கிறார் என்று வேதம் ஒருபோதும் சொல்லவில்லை—அவர் அதைப் பற்றி அவ்வாறு சிந்திக்கிறார் என்று கூட ஒரு எச்சரிக்கையும் இல்லை! வெளிப்படுத்தல் 3:5 இன் அற்புதமான வாக்குறுதி என்னவென்றால், இயேசு ஒருவரின் பெயரை அழிக்க மாட்டார். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் மீட்கப்பட்ட "ஜெயங்கொள்ளுகிறவர்களுடன்" பேசும்போது—இயேசு அவர்களின் பெயர்களை நீக்க மாட்டார் என்று தனது வார்த்தையை கொடுக்கிறார். ஒரு முறை ஒரு பெயர் இருந்தால், அது என்றென்றும் இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். இது தேவனுடைய உண்மைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.
வெளிப்படுத்தல் 3:5 இன் வாக்குறுதி விசுவாசிகளுக்கு எழுதப்பட்டுள்ளது, அவர்கள் தங்கள் இரட்சிப்பில் பாதுகாப்பாக உள்ளனர். மாறாக, வெளிப்படுத்தல் 22:19 இன் எச்சரிக்கை அவிசுவாசிகளுக்கு அனுப்பப்பட்டது, அவர்கள் தேவனை நோக்கி தங்கள் இருதயங்களை மாற்றுவதற்கு பதிலாக, தேவனுடைய வார்த்தையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அத்தகைய மக்கள் ஜீவவிருட்சத்தின் கனியை சாப்பிட மாட்டார்கள்.
English
ஜீவபுஸ்தகத்திலிருந்து ஒரு நபரின் பெயரை அழிக்க முடியுமா?