கேள்வி
கிறிஸ்தவர்கள் நாத்திகர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தல் யாவை?
பதில்
தேவனுடைய அன்பை அறிந்த கிறிஸ்தவர்களாக, பரலோகத்தில் நித்தியத்தின் நிச்சயத்தைப் பெற்றுள்ளதால், ஏன் ஒருவர் நாத்திகராக இருக்க விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஆனால், பாவத்தின் தன்மையையும், மனதிலும் இருதயத்திலும் அதன் வலுவான தாக்கத்தையும் நாம் உணரும்போது, நாத்திகர் எங்கிருந்து வருகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில், நாத்திகர் என்று எதுவும் இல்லை. சங்கீதம் 19:1-2 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது என்று கூறுகிறது. அவர் படைத்த எல்லாவற்றிலும் அவருடைய படைப்பின் வல்லமையைக் காண்கிறோம். ரோமர் 1:19-20 இந்த யோசனையைப் பின்பற்றுகிறது, தேவனைப் பற்றி அறியக்கூடிய அறிவு படைப்பின் மூலம் நமக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன, இதை மறுக்கும் எவரும் "சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிறார்கள்" (வசனம் 18). சங்கீதம் 14:1 மற்றும் 53:1 தேவன் இருக்கிறார் என்பதை மறுப்பவர்கள் மதிகெட்டவர்கள் என்று அறிவிக்கிறது. எனவே நாத்திகன் ஒன்று பொய் சொல்கிறான் அல்லது அவன் ஒரு மதிகெட்டவன் அல்லது இரண்டும். அப்படியானால், ஒருவன் தேவனை மறுக்க என்ன காரணம்?
பாவ சுபாவத்தின் செல்வாக்கின் கீழ் இருப்பவர்களின் முக்கிய குறிக்கோள், தன்னை ஒரு தேவனாக ஆக்கிக்கொள்வது, தனது வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது அல்லது அவன் அப்படி நினைக்கிறது. பின்னர் மதமானது கடமைகள், நியாயத்தீர்ப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வருகிறது, அதே நேரத்தில் நாத்திகர்கள் தங்கள் சொந்த அர்த்தத்தையும் ஒழுக்கத்தையும் வரையறுக்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு அடிபணிய விரும்பவில்லை, ஏனென்றால் அவர்களுடைய இருதயம் “தேவனுக்கு விரோதமாக” இருக்கிறது, மேலும் அவருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய அவர்களுக்கு விருப்பமில்லை. உண்மையில் அவர்கள் அவ்வாறு செய்ய இயலாதவர்கள், ஏனென்றால் அவர்களுடைய பாவம் அவர்களை சத்தியத்திற்குக் குருடாக்கி விட்டது (ரோமர் 8:6-7). இதனால்தான் நாத்திகர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வேத ஆதார நூல்களைப் பற்றி அல்ல, மாறாக "செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" பற்றிப் புகார் கூறுவதையும் மற்றும் வாதிடுவதையுமே செய்கிறார்கள். அவர்களின் இயற்கையான கலகம் தேவனுடைய கட்டளைகளை வெறுக்கிறது. எதையும்—அல்லது ஏதேனும் ஒரு—தங்கள் மீதுள்ள கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். சாத்தான் அவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களைக் குருடாக்கி, அவர்களின் ஆத்துமாக்களை நரகத்திற்குச் செல்லத் தயார்படுத்துகிறான் என்பதை அவர்கள் உணரவில்லை.
நாத்திகர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதைப் பொறுத்தவரை, அவர் அல்லது அவள் ஒரு நாத்திகர் என்று கூறிக்கொண்டு ஒருவரிடமிருந்து நற்செய்தியைத் தெரிவிக்காமல் தடுக்கக்கூடாது. ஒரு முஸ்லீம், இந்து அல்லது பௌத்தர் போல் நாத்திகனும் இழந்துபோனவன் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் சுவிசேஷத்தைப் பரப்பவும் (மத்தேயு 28:19) அவருடைய வார்த்தையின் சத்தியங்களைப் பாதுகாக்கவும் தேவன் நிச்சயமாக விரும்புகிறார் (ரோமர் 1:16). மறுபுறம், விருப்பமில்லாதவர்களை நம்ப வைப்பதற்காக முயற்சிக்கும் வகையில் நேரத்தை வீணடிக்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லை. உண்மையில், எந்தவொரு நேர்மையான விவாதங்களிலும் தெளிவாக ஆர்வமில்லாதவர்கள் மீது அதிக முயற்சியை செலுத்தி நேரத்தை செலவிட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறோம் (மத்தேயு 7:6). இயேசு அப்போஸ்தலர்களிடம் சென்று வார்த்தையைப் பிரசங்கிக்கும்படி கூறினார், ஆனால் கடைசியாக ஒவ்வொரு நபரும் மனமாற்றம் அடையும் வரை அவர்கள் எங்கும் இருப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை (மத்தேயு 10:14).
குறைந்தபட்சம் முதலில் ஒவ்வொரு நபருக்கும் சந்தேகத்தின் பலனை வழங்குவதே சிறந்த தந்திரமாக இருக்கலாம். ஒவ்வொரு கேள்வியும், நேர்மையாகவும் உண்மையாகவும் பதிலளிக்கப்படும் காரியம், அந்த நபருக்கு நற்செய்தியைக் கேட்கும் வாய்ப்பை அளிக்கிறது. ஆனால் அந்த நபர் வாதிடுகிறார், விரோதமாக பேசுகிறார் அல்லது கூறுவதைக் கேட்கவில்லை என்றால், அது அவரைவிட்டு வேறு எங்காவது செல்ல வேண்டிய நேரம். சிலர் சுவிசேஷத்திற்கு முற்றிலும் மற்றும் பூரணமாக இருதய கடினமானவர்கள் (நீதிமொழிகள் 29:1). அவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள் அல்லது பகுத்தறிவற்றவர்களாக இருக்கலாம், ஆனால் சிலர் பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கிற்கு விருப்பத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று நம்புவதற்கு வேதப்பூர்வமான காரணங்கள் உள்ளன (ஆதியாகமம் 6:3). ஒருவரிடம் பேசுவதற்கு நாம் நல்ல நம்பிக்கையுடன் முயற்சி செய்து, அவர் அல்லது அவள் அணுக முடியாத நிலையில் இருக்கும்போது, நமது கால்களில் உள்ள "தூசியை உதறிவிட்டு" செல்லுவதற்கு கட்டளையிடப்படுகிறோம் (லூக்கா 9:5) மற்றும் ஆவிக்குரிய நிலையில் திறந்த மனதுடன் இருப்பவர்களிடம் நம் நேரத்தை செலவழித்து பேசுகிறோம். எல்லாவற்றையும் போலவே, தேவனுடைய ஞானம் முக்கியமானது. நாம் கேட்டால் அந்த ஞானத்தை வழங்குவதாக தேவன் நமக்கு வாக்களித்துள்ளார் (யாக்கோபு 1:5), அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் மற்றும் ஒரு விரோதமாக இருக்கும் நாத்திகருடன் எப்படி, எப்போது உரையாடலை முடிக்க வேண்டும் என்று தேவனுடைய ஏவுதலை பெற நம்ப வேண்டும்.
English
கிறிஸ்தவர்கள் நாத்திகர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தல் யாவை?