கேள்வி
எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு அவர்களைப் புண்படுத்தாமல் அல்லது என்னை விட்டு ஒதுங்கிப்போகும்படிச் செய்யாமல் சுவிசேஷம் அறிவிப்பது எப்படி?
பதில்
ஏதோ சில நிலையில், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிப்புக்குள் வராத அல்லது கிறிஸ்தவரல்லாத ஒரு குடும்பத்தினர், ஒரு நண்பன், உடன் வேளையால் அல்லது அறிமுகமானவர் இருக்கலாம். மற்றவர்களுடன் சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது கடினமான காரியம்தான், அதுவும் தெரிந்த உற்றார் உறவினர்களிடம் நாம் சுவிசேஷத்தை அறிவிப்பது என்பது இன்னும் அதிக கடினமான ஒன்றாகும். சிலர் சுவிசேஷத்தின் நிமித்தம் புண்படுத்தப்பட்டு இடறல் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 12:51–53). ஆனாலும், சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும் என்கிற கட்டளையைப் பெற்றிருக்கிறோம், நாம் சுவிசேஷம் அறிவிக்காமல் இருப்பதற்கு போக்கு சொல்ல இடமில்லை (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:8; 1 பேதுரு 3:15).
ஆகவே குடும்பத்தினர்கள், நண்பர்கள், உடன்வேலை செய்பவர்கள் அல்லது அறிமுகமானவர்களுக்கு நாம் எப்படி சுவிசேஷத்தை அறிவிப்பது? நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால் நாம் அவர்களுக்காக ஜெபிப்பதுதான். தேவன் அவர்கள் இருதயங்களை மாற்றவும் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு அவர்கள் கண்கள் திறக்கப்படுவும் ஜெபிக்க வேண்டும் (2 கொரிந்தியர் 4:4). அவர்கள்மேல் தேவன் காண்பிக்கிற அன்பினை அவர்கள் அறிந்து கொள்ளவும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர்கள் இரட்சிப்படைய வேண்டும் என்கிற தேவையை அவர்களுக்கு தேவன் உணர்த்தும்படியாகவும் ஜெபிக்க வேண்டும் (யோவான் 3:16). நாம் அவர்களுக்கு எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்கிற ஞானத்தை தேவன் நமக்கு அருளும்படிக்கு ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5).
நாம் சுவிசேஷம் சொல்லுவதற்கு வாஞ்சையுள்ளவர்களாகவும் தைரியமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்த்துவின் மூலமாக வருகிறதான இரட்சிப்பைக்குறித்து செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லுங்கள் (ரோமர் 10:9–10). மென்மையோடும் மரியாதையோடும் உங்கள் விசுவாசத்தை மற்றவர்களிடம் பேச எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாக இருங்கள் (1 பேதுரு 3:15). தனிப்பட்ட முறையில் சுவிசேஷம் அறிவிப்பதற்கு மாற்றாக வேறே ஒரு சிறந்த முறை இல்லை: “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” ரோமர் 10:17).
ஜெபிப்பது மற்றும் நமது விசுவாசத்தை பகிர்ந்துகொள்வதோடு, நமது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்பாக நாம் தேவபக்தியுள்ளவர்களாக நடந்துகொள்வது மிகவும் முக்கியமான காரியம், ஏனென்றால் நமது வாழ்கையில் தேவன் செய்த மாற்றங்களை அவர்கள் கண்டுகொள்ள முடியும் (1 பேதுரு 3:1–2). முடிவாக, நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்பைக் குறித்த விஷயத்தை தேவனுடைய கரத்தில் விட்டுவிட வேண்டும். நமது பிரயாசங்கள் மற்றும் முயற்சிகள் அல்ல அவர்களை இரட்சிப்பது, மாறாக தேவனுடைய வல்லமை மற்றும் கிருபை மட்டுமே ஜனங்களை இரட்சிக்கக்கூடும். நாம் அவர்களுக்காக செய்யும் சிறந்த காரியம் என்னவென்றால் அவர்களுக்காக ஜெபிப்பது, சாட்சியைப் பகிர்ந்துகொள்வது, மற்றும் அவர்கள் முன்பாக கிறிஸ்தவர்களாக வாழ்வது மட்டுமே. விளையச்செய்வது தேவன் ஒருவர் மட்டுமே (1 கொரிந்தியர் 3:6).
English
எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு அவர்களைப் புண்படுத்தாமல் அல்லது என்னை விட்டு ஒதுங்கிப்போகும்படிச் செய்யாமல் சுவிசேஷம் அறிவிப்பது எப்படி?