settings icon
share icon
கேள்வி

ராஜாவாகிய சவுலை துன்புறுத்த தேவன் ஏன் ஒரு பொல்லாத ஆவியை அனுப்பினார்?

பதில்


"கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது" (1 சாமுவேல் 16:14). இது 1 சாமுவேல் 16:15-16, 23,18:10, மற்றும் 19:9 ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சவுலை துன்புறுத்த தேவன் ஒரு பிசாசின் "பொல்லாத ஆவியை" அனுப்பினார். சவுல் நேரடியாக இரண்டு சந்தர்ப்பங்களில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை (1 சாமுவேல் 13:1-14; 15:1-35). எனவே, தேவன் சவுலிடமிருந்து தம் ஆவியை நீக்கி, ஒரு பொல்லாத ஆவி அவனைத் துன்புறுத்த அனுமதித்தார். சாத்தானும் பிசாசுகளும் எப்போதும் சவுலைத் தாக்க விரும்பியிருக்கலாம், தேவன் இப்போது அதைச் செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்.

இது ஒரு தொடர்புடைய கேள்விக்கு இட்டுச் செல்கிறது—இன்று ஜனங்களை துன்புறுத்த தேவன் பொல்லாத ஆவிகளை அனுப்புகிறாரா? புதிய ஏற்பாட்டில் தனிநபர்கள் தண்டனைக்காக சாத்தான் அல்லது பிசாசுகளிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. ஆரம்பகால திருச்சபைக்கு ஓர் எச்சரிக்கையாகவும் முன்மாதிரியாகவும் சாத்தானின் ஆவியால் நிரப்பப்படுவதற்கு அனனியாவையும் சப்பீராளையும் தேவன் அனுமதித்தார் (அப்போஸ்தலர் 5:1-11). கொரிந்து திருச்சபையின் ஒரு மனிதன் தகாப் பாலுறவு மற்றும் விபச்சாரம் செய்து கொண்டிருந்தான், அவனுடைய பாவ இயல்பை அழித்து அவனது ஆத்துமாவைக் காப்பாற்ற "அவனை சாத்தானிடம் ஒப்புக்கொடுக்க" தேவன் சபைத்தலைவர்களுக்கு கட்டளையிட்டார் (1 கொரிந்தியர் 5:1-5). இயேசு பிசாசினால் பரீட்சைப் பார்க்கப்பட்டு சோதிக்கப்படுவதற்காக ஆவியானவரால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் (மத்தேயு 4:1-11). சாத்தானின் தூதன், அப்போஸ்தலனாகிய பவுலை துன்புறுத்துவதற்கும் தேவன் அனுமதித்தார், மேலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய சத்தியத்தின் மகத்தான மிகுதியால் கர்வப்படாமல் இருக்கவும், தேவனுடைய கிருபையிலும் வல்லமையிலும் சார்ந்திருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் (2 கொரிந்தியர் 12:7).

தேவன் இன்று ஜனங்களை துன்புறுத்துவதற்கு பொல்லாத ஆவிகளை அனுமதித்தால், அவர் நம்முடைய நன்மைக்காக மற்றும் அவரது மகிமையின் குறிக்கோளுடன் அவ்வாறு செய்கிறார் (ரோமர் 8:28). பிசாசுகள் பொல்லாதவையாக இருந்தாலும், அவை இன்னும் தேவனுடைய இறையாண்மையின் கட்டுப்பாட்டில் உள்ளன. யோபுவின் விஷயத்தைப் போலவே, சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் தேவன் அனுமதிப்பதை மட்டுமே செய்ய முடியும் (யோபு 1:12; 2:6). அவை ஒருபோதும் தேவனின் இறையாண்மை மற்றும் பரிபூரண சித்தம் மற்றும் நோக்கத்திலிருந்து சுயாதீனமாக செயல்பட மாட்டார்கள். விசுவாசிகள் பிசாசின் சக்திகளால் துன்புறுத்தப்படுவதாக சந்தேகித்தால், அறியப்பட்ட எந்தவொரு பாவத்திற்கும் வருந்துவது முதல் பதில். சூழ்நிலையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஞானத்தைக் கேட்க வேண்டும். அப்படியானால், தேவன் நம் வாழ்வில் அனுமதித்துள்ளவற்றுக்கு அடிபணிய வேண்டும், அது நம் விசுவாசத்தையும் தேவனின் மகிமையையும் வளர்க்கும் என்று நம்புகிறோம்.

English



முகப்பு பக்கம்

ராஜாவாகிய சவுலை துன்புறுத்த தேவன் ஏன் ஒரு பொல்லாத ஆவியை அனுப்பினார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries