settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவன் உடற்பயிற்சி செய்யவேண்டுமா? உடல் நலத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


வாழ்க்கையில் பல காரியங்கள் இருப்பது போலவே உடல்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிலர் தங்களின் உடல் சார்ந்த காரியங்களை தவிர்ப்பதற்காகவே ஆவிக்குரிய காரியங்களில் தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர். பிறர் தங்களின் உடலின் அமைப்பிற்கும் உருவத்திற்கும் அதிக முக்கியதுவம் கொடுக்கின்றனர் அதனால் ஆவிக்குரிய வளர்ச்சியை மற்றும் முதிர்ச்சியை புறக்கணிக்கின்றனர். இவைகளில் எதுவுமே வேதாகமம் சமச்சீர் நிலையில் குறிப்பிடவில்லை. 1 தீமோத்தேயு 4:8-ல் வாசிக்கிறோம்: “சரீரமுயற்ச்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது”. இந்த வசனம் உடல்பயிற்சியின் அவசியத்தை மறுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். உடல்பயிற்சி விலை மதிப்பிற்குரியது ஆனால் முக்கியத்துவம் கொடுப்பதில் தெய்வீக சுபாவம் உடற்பயிற்சியைப் பார்க்கிலும் அதிக மதிப்புமிக்கது ஆகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் உடற்பயிற்சியை, ஆவிக்குரிய உண்மையை தெளிவுபடுத்துவதற்கு உதாரணமாக 1 கொரிந்தியர் 9:24-27-ல் பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கையை ஓட்டப்பந்தயத்தில் பரிசைப் பெறதக்க விதத்திலே ஒடுகிற பந்தயத்திற்கு ஒப்பாகப் பவுல் கூறுகிறார். ஆனால், நாம் எதிர்ப்பார்க்கிற பரிசு அழிவில்லாத மற்றும் வாடாத நித்திய கிரீடம் ஆகும். 2 தீமோத்தேயு 2:5-ல் “மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்” என்று வாசிக்கிறோம். பவுல் மீண்டும் 2 தீமோத்தேயு 4:7-ல் தடகளப்போட்டியின் ஒப்புமையைப் பயன்படுத்துகிறார்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” இந்த வசனம் உடற்பயிற்ச்சியை முக்கிய படுத்தாவிட்டாலும் ஆவிக்குரிய உண்மைகளை போதிக்கத் தடகளப்போட்டியின் வார்த்தைகளை பயன்படுத்தியது, பவுலின் உடற்பயிற்சியை மற்றும் போட்டியைக் நேர்மறையான நிலையில் கண்டார் என்பதையே இது நமக்குக் காட்டுகிறது. நாம் சரீரத்திற்குரியவர்களாகவும் மற்றும் ஆவிக்குரியவர்களாகவும் இருக்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் மிக முக்கியமானதாக இருக்கும் போது, நாம் எதையாகிலும் ஒன்றை அதாவது ஆவிக்குரிய அல்லது சரீரத்திற்குரிய அம்சங்களை புறக்கணிக்க வேண்டியதாக இருக்கிறது.

எனவே கிறிஸ்தவர்கள் உடற்பயிற்ச்சி செய்வது எந்த விதத்திலும் தவறு அல்ல என்பது தெளிவாகிறது. நாம் நம்முடைய சரீரத்தை நன்றாகப் பேணி காத்துக்கொள்ள வேண்டும் என்று வேதாகமம் (1 கொரிந்தியர் 6:19-20) தெளிவாய் குறிப்பிடுகிறது. அதே சமயத்தில் வேதாகமம் வீணான தற்பெருமையை எதிர்க்கிறது (1 சாமுவேல் 16:7; நிதீமொழிகள் 31:30; 1 பேதுரு 3:3-4). நம்முடைய உடற்பயிற்சியின் நோக்கம் நம்முடைய உடலின் தன்மையையும் மேனியின் பொலிவையும் மேம்படுத்துதன் மூலம் பிறருடைய கவனத்தை ஈர்ப்பதாக/கவருவதாக இருக்கக்கூடாது. மாறாக, நம்முடைய உடல் நலத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆவிக்குரிய இலக்குகளை அடைவதற்கு ஏதுவான உடல் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.

English



முகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவன் உடற்பயிற்சி செய்யவேண்டுமா? உடல் நலத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries