கேள்வி
பிசாசுகள் விழுந்துபோன தேவதூதர்களா?
பதில்
தேவன் தேவதூதர்களை எப்பொழுது சிருஷ்டித்தார் என்கிற காரியம் விவாதத்திற்குரியதாகும், ஆனால் நமக்கு தெரிந்தவைகள் யாதெனில், தேவன் எல்லாவற்றையும் நன்றாகவே படைத்திருக்கிறார் என்பதாகும், காரணம் பரிசுத்தமுள்ள தேவன் பாவமான எதையும் உருவாக்க முடியாது. எனவே சாத்தானாகிய லூசிபர் முன்பு ஒருமுறை தேவதூதனாக இருந்தான், பிறகு தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து பரலோகத்திலிருந்து விழுந்துபோனான் (ஏசாயா 14; எசேக்கியேல் 28), தேவதூதரின் சேனைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அவனோடு சேர்ந்து தேவனுக்கு எதிராக கலகம் செய்து விழுந்து போனார்கள் (வெளி. 12:3-4,9). விழுந்துபோன தேவதூதர்கள் இப்போது பிசாசுகளாக அறியப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மத்தேயு 25:41-ல் கூறியுள்ளதின் படி பிசாசிற்கும் அவனுடைய தூதர்களுக்கும் தயாராக்கப்பட்டது தான் நரகம் என்பதை நாம் அறிவோம்: “அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” என்று சொல்லுவார். இயேசு, தனது சொந்த பெயர்ச்சொல்லை பயன்படுத்தி “அவரது" என்பது மூலம் இந்த தேவதூதர்கள் சாத்தானை சேர்ந்தவர்கள் என்று தெளிவுபடுத்துகிறது. வெளி. 12:7-9ல் மிகாவேல் மற்றும் "அவருடைய தேவதூதர்களுக்கும்" பிசாசு மற்றும் "அவனுடைய தேவதூதர்களுக்கும்" இடையேயுள்ள கடைசிக்கால யுத்தத்தை விவரிக்கிறது. இவை மற்றும் இதே போன்ற பிற வசனங்களிலிருந்து பிசாசுகளும் விழுந்துபோன தேவதூதர்களும் ஒரேகூட்டத்தினர் என்பது தெளிவாகிறது.
யூதா 6வது வசனத்தில், “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.” எனினும், பாவம் செய்த எல்லா தேவதூதர்களும் "காவல்பண்ணப்படவில்லை" என்பது சாத்தான் இன்னமும் சுதந்திரமாக இருப்பதில் தெளிவாகிறது (1 பேதுரு 5:8). ஏன் தேவன் கலகம் செய்த தலைவனாகிய சாத்தானை விட்டு விட்டு அவனோடு விழுந்துப்போன தேவதூதர்களை சிறைப்படுத்தினார்? ஆதியாகமம் 6-ம் அதிகாரத்தில் "தேவகுமாரர்" சம்பவத்தை ஒருவேளை கலகம் செய்து விழுந்த தேவதூதர்களை தேவன் காவல் பண்ணியிருப்பதை யூதா வசனம் 6 குறிப்பிடுகிறது.
பிசாசுகளின் தோற்றத்திற்கான மிகவும் பொதுவான விளக்கம், ஆதியாகமம் 6-லுள்ள நெஃபிலிம் ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்டபோது, அவைகளின் உடலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆத்மாக்கள் பிசாசுகள் ஆனார்கள் என்பதாகும். அவர்கள் கொல்லப்பட்டபோது நெபிலீமின் ஆத்துமாவுக்கு என்ன நடந்தது என்று வேதாகமம் எதுவும் சரியாக குறிப்பிடவில்லை என்றாலும், ஜலப்பிரளயத்தில் தேவன் நெபிலிமை அழிக்கப்போகிறாரே தவிர, அவர்களுடைய ஆத்மாக்கள் பிசாசுகளாக இருப்பதற்கும் இன்னும் அதிக தீமையை விளைவிக்கவும் தேவன் அனுமதிக்கவில்லை. பிசாசுகளின் தோற்றத்திற்கான மிகவும் வேதப்பூர்வமான சரியான விளக்கம் என்னவென்றால், அவர்கள் சாத்தானுடன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்த விழுந்துபோன தேவதூதர்கள் என்பதாகும்.
English
பிசாசுகள் விழுந்துபோன தேவதூதர்களா?