settings icon
share icon
கேள்வி

நம்முடைய குடும்பத்தில் முன்னுரிமைகளின் வரிசை என்னவாக இருக்க வேண்டும்?

பதில்


குடும்ப உறவு குறித்த முன்னுரிமைகளுக்கு படிப்படியான உத்தரவை வேதாகமம் வகுக்கவில்லை. இருப்பினும், நாம் வேதவசனங்களைப் பார்த்து, நம்முடைய குடும்ப உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான பொதுவான கொள்கைகளைக் காணலாம். முதலாவதாக வெளிப்படையான நிலையில் தேவன் முதலில் வருகிறார்: உபாகமம் 6:5, “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” ஒருவரின் இருதயம், ஆத்மா மற்றும் வல்லமை அனைத்தும் தேவனை நேசிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும், அப்படி செய்வது தேவனை முதல் முன்னுரிமையாக ஆக்குகிறது.

நீங்கள் திருமணம் செய்து கொண்டவராக இருந்தால், உங்கள் மனைவி அடுத்தாக வருகிறார். கிறிஸ்து திருச்சபையை நேசித்ததைப் போல ஒரு திருமணமான மனிதன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் (எபேசியர் 5:25). கிறிஸ்துவின் முதல் முன்னுரிமை - பிதாவிற்குக் கீழ்ப்படிந்து மகிமைப்படுத்திய பிறகு – திருச்சபையானது வருகிறது. ஒரு கணவன் பின்பற்ற வேண்டிய ஒரு எடுத்துக்காட்டு இங்கே இருக்கிறது: தேவன் முதலில், பின்னர் அவரது மனைவி. அதேபோல், மனைவிகள் தங்கள் கணவருக்கு “கர்த்தருக்கு கீழ்ப்படிவதுப் போலவே” கீழ்ப்படிய வேண்டும் (எபேசியர் 5:22). கொள்கை என்னவென்றால், ஒரு பெண்ணின் கணவர் தனது முன்னுரிமைகளில் தேவனுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

கணவனும் மனைவியும் நம்முடைய முன்னுரிமைகளில் தேவனுக்கு அடுத்தபடியாக இருந்தால், கணவன்-மனைவி ஒரே மாம்சமாக இருக்கும் (எபேசியர் 5:31) திருமண உறவின் விளைவாக வருகிற - குழந்தைகள் அடுத்த முன்னுரிமையாக இருக்க வேண்டும். முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசிப்பவர்களின் அடுத்த தலைமுறையாக இருக்கும் தெய்வீக பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் (நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:4), இங்கே தேவன் முதலில் வருகிறார் என்பதை மீண்டும் காட்டுகிறார். மற்ற அனைத்து குடும்ப உறவுகளும் அதை பிரதிபலிக்க வேண்டும்.

உபாகமம் 5:16 நாம் நம் பெற்றோரைக் கனம்பண்ண வேண்டும் என்று சொல்லுகிறது, இதனால் நாம் நீண்ட காலம் வாழலாம், அதனிமித்தமாக காரியங்கள் யாவும் நன்றாக நடக்கும். இங்கே குறிப்பிட்ட எந்த ஒரு வயது வரம்பும் குறிப்பிடப்படவில்லை, இது நம்முடைய பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை, நாம் அவர்களை கனம்பண்ண வேண்டும் என்று நம்புவதற்கு வழிவகுக்கிறது. நிச்சயமாக, ஒரு குழந்தை வயதுக்கு வந்தவுடன், அவர்களுக்குக் கீழ்ப்படிய அவர் இனி கடமைப்பட்டிருக்க மாட்டார் (“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்...”), ஆனால் அவர்கள் அவர்களுடைய பெற்றோர்களை கனம்பண்ண வயது வரம்பு எதுவும் இல்லை. ஆகவே முதலாவதாக தேவன், அடுத்து நம்முடைய வாழ்க்கைத்துணை, மற்றும் நம் குழந்தைகளுக்குப் பிறகு முன்னுரிமைகள் பட்டியலில் பெற்றோர்கள் வருகிறார்கள் என்று இதிலிருந்து நாம் முடிவு செய்யலாம். பெற்றோர்களுக்குப் பிறகு ஒருவரின் குடும்பத்தின் மற்றவர்கள் வருகிறார்கள் (1 தீமோத்தேயு 5:8).

முன்னுரிமைகள் பட்டியலில் ஒருவரின் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தைப் பின்தொடர்வது சக விசுவாசிகள் ஆகும். ரோமர் 14 நம்முடைய சகோதரர்களை நியாயந்தீர்க்கவோ, இழிவாகப் பார்க்கவோ கூடாது (வச. 10) அல்லது ஒரு சக கிறிஸ்தவர் “தடுமாற” அல்லது ஆவிக்குரிய ரீதியில் வீழ்ச்சியடைய எதையும் செய்ய வேண்டாம். 1 கொரிந்தியர் புத்தகத்தின் பெரும்பகுதி, திருச்சபையானது எவ்வாறு ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் அன்பாக வாழ வேண்டும் என்பதற்கான பவுலின் அறிவுறுத்தல்களாக இருக்கிறது. கிறிஸ்துவில் உள்ள நம் சகோதர சகோதரிகளைக் குறிக்கும் மற்ற அறிவுரைகள் “அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” (கலாத்தியர் 5:13); "ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (எபேசியர் 4:32); "ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:11); மேலும் “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிக்கவேண்டும்” (எபிரெயர் 10:24). இறுதியாக உலகின் பிற பகுதிகளுக்கும் வருகிறது (மத்தேயு 28:19), அதாவது சுவிசேஷத்தை யாருக்கு அறிவித்து கிறிஸ்துவின் சீஷர்களை உருவாக்கி கொண்டு வர வேண்டுமோ அவர்களுக்கு என்று நீளுகிறது.

முடிவில், முன்னுரிமைகளின் வேதப்பூர்வ வரிசை யாதென்றால், தேவன், வாழ்க்கைத்துணை, குழந்தைகள், பெற்றோர்கள், நீட்டிக்கப்பட்ட குடும்பம், கிறிஸ்துவிலுள்ள சகோதர சகோதரிகள், பின்னர் உலகின் பிற பகுதிகள். சில நேரங்களில் ஒரு நபர் மீது ஒருவர் கவனம் செலுத்துவதற்கு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், ஆனால் நம்முடைய எந்தவொரு உறவையும் புறக்கணிக்காமல் இருப்பதுதான் நமது குறிக்கோள். வேதாகம சமநிலை என்பது நம் குடும்பங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நம்முடைய உறவு முன்னுரிமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய தேவனை அனுமதிக்கிறதாகும்.

English



முகப்பு பக்கம்

நம்முடைய குடும்பத்தில் முன்னுரிமைகளின் வரிசை என்னவாக இருக்க வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries