settings icon
share icon
கேள்வி

விதியின்வாதம் என்றால் என்ன? நிர்ணயவாதம் என்றால் என்ன?

பதில்


சில பொதுவான வரையறைகளுடன் ஆரம்பிக்கலாம்:

நிர்ணயவாதம்: ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உள்ளது மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் முற்றிலும் காரணகரமான விதிகளைச் சார்ந்தது மற்றும் நிர்வகிக்கப்படுகிறது என்கிற பார்வை. மனித நடவடிக்கைகள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்று நிர்ணயவாத கோட்பாட்டாளர்கள் நம்புவதால், நிர்ணயவாதம் பொதுவாக சுதந்திரமான விருப்பத்துடன் பொருந்தாது என்று கருதப்படுகிறது.

விதியின்வாதம்: கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்வுகள் அனைத்தும் ஏற்கனவே தேவன் அல்லது மற்றொரு சர்வவல்லமையுள்ள சக்தியால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதால், "என்னவாக இருக்குமோ அப்படியாகவே இருக்கும்" என்ற நம்பிக்கையாகும். மதத்தில், இந்தப் பார்வையானது முன்னறிதல் என்று அழைக்கலாம்; நமது ஆத்துமா பரலோகத்திற்குச் செல்லவேண்டுமா அல்லது நரகத்திற்குச் செல்லவேண்டுமா என்பது நாம் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு, நமது விருப்பங்களிலிருந்து சுயாதீனமாக இருக்கிறது என்று அது கூறுகிறது.

சுயவிருப்பம்: மனிதர்களுக்குத் தேர்வு சுதந்திரம் அல்லது சுயநிர்ணய உரிமை உள்ளது என்கிற கோட்பாடு; அதாவது, ஒரு சூழ்நிலையில், ஒரு நபர் அவர் செய்ததைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியும் என்கிற நம்பிக்கை. சுயவிருப்பம் நிர்ணயவாதத்துடன் பொருந்தாது என்று தத்துவஞானிகள் வாதிட்டனர்.

நிர்ணயமற்றத்தன்மை: எந்த காரணமும் இல்லாத நிகழ்வுகள் உள்ளன என்கிற பார்வை; பல சுயவிருப்ப ஆதரவாளர்கள் தேர்வுச் செய்யும் செயல்கள் எந்தவொரு உடலியல் அல்லது உளவியல் காரணத்தாலும் தீர்மானிக்கப்பட முடியாது என்று நம்புவார்கள்.

இறையியல் விதியின்வாதம் என்பது ஒரு சர்வஞானமுள்ள தேவனுக்கும் சுயவிருப்பத்திற்கும் இடையே உள்ள தர்க்கரீதியான முரண்பாட்டை நிரூபிக்கும் முயற்சியாகும், அங்கு சுயவிருப்பம் என்பது மாற்றுகளுக்கு இடையே தேர்வு செய்யும் திறன் என வரையறுக்கப்படுகிறது. இதில், "சர்வ வல்லமையுள்ள தேவன் தம்மால் தூக்க இயலாத அளவுள்ள கனமான ஒரு பாறையை அவரால் உருவாக்க முடியுமா?" என்ற பிதிர் நோக்கத்திற்கு ஒத்ததாகும்.

இறையியல் விதியின்வாதத்தின் அனுமானங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றன: தேவன் சர்வஞானி. தேவன் சர்வஞானியாக இருப்பதால், தேவனுக்கு பிழையற்ற முன்னறிதல் உள்ளது. நாளை நீங்கள் ஒரு நிகழ்வில் (புல்வெளியை அறுப்பீர்கள்) ஈடுபடுவீர்கள் என்று தேவன் பிழையின்றி துல்லியமாக அறிந்திருந்தால், நீங்கள் தவறாமல் அந்த நிகழ்வில் (புல்வெளி வெட்டுதல்) ஈடுபட வேண்டும்.

எனவே, சுய-விருப்பம் சாத்தியமில்லை, ஏனென்றால் நிகழ்வில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை (புல்வெளியை வெட்டுவது). நீங்கள் நிகழ்வை நிறைவேற்றவில்லை என்றால், தேவன் சர்வஞானி அல்ல. மாற்றாக, நீங்கள் நிகழ்வில் ஈடுபட்டால், மாற்றீட்டைத் தேர்ந்தெடுக்க இயலாமையின் காரணமாக, உங்களுக்கு சுதந்திரம் இல்லை.

ஒரு எதிர் வாதம் தேவன் சர்வஞானி என்று கூறலாம். தேவன் சர்வஞானி என்பதால், அவரும் பிழையில்லாதவர். நாளை நீங்கள் ஒரு நிகழ்வில் ஈடுபடுவீர்கள் என்று தேவனுக்கு பிழையின்றி முன்னறிந்தால், உங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இதை நீங்கள் சுயமாக தேர்வு செய்வீர்கள், அந்த நிகழ்வைப் பற்றிய கடமை அல்லது விருப்பமின்மையால் அல்ல. நிகழ்வில் ஈடுபட உங்களுக்கு இன்னும் சுதந்திரம் உள்ளது; நீங்கள் அதைச் செய்வதற்கு முன் தேவன் உங்கள் விருப்பத்தை அறிந்திருக்கிறார். 'பி' (டென்னிஸ் விளையாடுதல்) தேர்வை விட 'ஏ' (புல்வெளியை வெட்டுதல்) தேர்வு செய்ய நீங்கள் கடமைப்பட்டிருக்கவில்லை. நீங்கள் உங்கள் மனதை மாற்றப் போகிறீர்கள் என்றால், தேவன் அதையும் பார்த்திருப்பார் மற்றும் அறிந்திருப்பார், எனவே எல்லா காரியங்களிலும் உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. மேலும், எதிர்காலத்தைப் பார்க்கக் கூடாது என்று தேவன் தேர்வு செய்தாலும், நீங்கள் அதே தேர்வுகளை (சுதந்திரத்துடன்) செய்வீர்கள். தேவன் எதிர்காலத்தைப் பார்ப்பது அல்லது பார்க்காதது உங்கள் சுதந்திரமான விருப்பத்தை மாற்றாது.

செயலற்ற முன்அறிவு, அதை மறைத்து வைத்திருந்தால், எந்தவொரு தர்க்கரீதியான அல்லது பகுத்தறிவு வழியிலும் சுயவிருப்பத்தை செல்லுபடியாகாமல் பண்ணாது. தனிப்பட்ட தேர்வு நிகழ்வான 'A', தேவன் தேர்வுகளை முன்பே அறிந்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அதே தேர்வுகளைச் செய்வார். தேவன் எதிர்காலத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ (செயலற்ற முறையில்) தனிநபர்களின் சுயவிருப்பத்தை மாற்றமாட்டார். தனிநபர்களின் சுதந்திரமான விருப்பத்தேர்வு தொடர்பாக தேவன் தமது அறிவைப் பகிரங்கப்படுத்தினால் மட்டுமே சுதந்திரம் அழிக்கப்படும்; இது எதிர்கால சுதந்திர விருப்பத்தை மாற்றி அதை ஒரு கடமையாக மாற்றும். ஒரு எளிய உதாரணம், ஒரு மனநோயாளி, ஒரு பேருந்தைப் பிடிக்க ஓடும்போது, உலகின் மறுபக்கத்தில் யாரோ ஒருவர் தடுமாறி கால் உடைவதை முன்கூட்டியே பார்ப்பது. இந்த நிகழ்வை முன்னறிவிப்பதன் மூலம் மனநோயாளி யதார்த்தத்தை மாற்ற மாட்டார், ஏனெனில் இந்த நிகழ்வு யாராவது பார்த்திருந்தாலும் பார்க்காவிட்டாலும் இன்னும் அது நடக்கும். தேவனுடைய சர்வ ஞானத்திற்கும் இது பொருந்தும்: அது செயலற்றதாக இருக்கும் வரை, அது உண்மை அல்லது மற்றொருவரின் அறிவில் தலையிடாத வரை, அது மனிதர்களின் சுயவிருப்பத்திற்கு முரணாக இருக்காது.

இருப்பினும், தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்றால், அது தேவனுடைய எந்த செயலற்ற அறிவுக்கும் ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. சர்வஞானத்தைப் பற்றிய புரிதல், காலப்போக்கில் தேவன் எங்கும் நிறைந்திருப்பதைப் பற்றிய புரிதலுடன் இணைக்கப்பட வேண்டும். கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் தேவன் அறிந்திருந்தால், ஒரு நபர் எடுக்கும் அனைத்து நிகழ்வுகளையும் முடிவுகளையும் அவர் அறிவார், இருப்பினும் தனிப்பட்ட பார்வையில் அந்த நிகழ்வுகள் மற்றும் முடிவுகள் இன்னும் நிகழவில்லை. இது எந்தவொரு தனிநபருக்கும் சுதந்திரமான விருப்பத்தை ரத்து செய்வதைக் குறிக்கலாம், இருப்பினும் தேவனுடைய வெளிப்படையான முன்னறிதல் செயல்படுவதற்கான சுதந்திரத்தைத் தடுக்கும் எந்த வழிமுறையும் இறையியல் விதியின்வாதத்தின் கொள்கையால் முன்வைக்கப்படவில்லை. கிறிஸ்தவ இறையியலின் படி, தேவன் காலத்துக்கு அப்பாற்பட்டவர் (அவர் காலத்திற்கு வெளியே இருக்கிறார்), தேவன் சிருஷ்டிப்பிலிருந்து ஒருவரின் வாழ்க்கையின் முழுப் போக்கையும் அறிந்திருக்கிறார், மேலும் அந்த நபர் தனது தெய்வீக அதிகாரத்தை ஏற்றுக்கொள்வாரா இல்லையா என்பதும் கூட. இந்த முன்நிபந்தனைகளுடன், அப்பட்டமான விதியின்வாதத்தின் இறையியல் நிலை மட்டுமே சிலருக்கு கற்பனை செய்யக்கூடியதாகத் தெரிகிறது.

இன்னும் ஒரு படி மேலே செல்ல, இங்கே வேறு சில தாக்கங்கள் உள்ளன: முன்னறிதல், விதியின்வாதம் மற்றும் வாய்ப்பு (அல்லது அதிர்ஷ்டம்) ஆகியவற்றுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

ஒரு குருட்டுத்தனமான, ஆள்தன்மையற்ற சக்தி இருப்பதாகவும், அதன் மீது யாருக்கும் கட்டுப்பாடு இல்லை—தேவனுக்குக் கூட இல்லை என்றும், இந்த குருட்டுத்தனமான, நோக்கமற்ற சக்தியால் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன என்றும் விதியின்வாதக் கொள்கைக்காரர்கள் கற்பிக்கின்றனர். இது விதியின்வாதம்.

வாய்ப்பு (அல்லது அதிர்ஷ்டம்) என்பது ஒரு கேப்ரிசியோஸ் சக்தியாகும், இது "அதிர்ஷ்டவசமாக" தேவனுடைய எந்தக் கட்டுப்பாடும் அல்லது வழிகாட்டுதலும் இல்லாமல் நடக்கும் என்று கூறப்படுகிறது. வாய்ப்பால் ஆளப்படும் உலகில், என்ன நடக்கும் என்பதை தேவனால் முன்கூட்டியே பார்க்க முடியும், ஆனால் அவ்வளவுதான். எல்லாம் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்துள்ளது. ஏன் அல்லது எப்படி காரியங்கள் நடக்கின்றன என்று வாய்ப்பின் கொள்கைக்காரர்களிடம் கேட்டால், "அது அப்படியே நடந்தது" என்று கூறுவதைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை.

வேதாகமத்தின் கோட்பாடான முன்குறித்தல், தேவனுக்கு ஒரு நோக்கம் இருப்பதாகவும், அவர் தனது சொந்த விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப எல்லாவற்றையும் செய்கிறார் என்றும் கூறுகிறது (எபேசியர் 1:11; தானியேல் 4:35; ஏசாயா 14:24; மற்றும் 46:10). தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்யவோ அல்லது அனுமதிக்கவோ இல்லை என்று முன்குறித்தல் போதிக்கிறது (சங்கீதம் 33:11). தேவன் உலகத்தின் ராஜாதி ராஜா, அவர் விரும்பியபடியே அனைத்தையும் செய்பவர் என்பது இதன் பொருள்.

"எதுவாக இருந்தாலும், அது இருக்கும்" என்று கண்மூடித்தனமாக நம்புபவர்கள், வாய்ப்பின் ஆதரவாளர்களைப் போலவே தவறான கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். நிகழ்வுகள் நிச்சயமானவை என்பது உண்மைதான், ஆனால் தன் சொந்த ஆணைகளை நிறைவேற்றும் இறையாண்மையுள்ள தேவனால் மட்டுமே அது சாத்தியமாகிறது.

வேதாகமத்தின் தீவிரமான மாணவர்கள், காரியங்கள் "அப்படியே நடக்கும்" என்று நம்புவதில்லை. ஞானமுள்ள, பரிசுத்தமான, நல்ல மற்றும் இறையாண்மையுள்ள தேவன் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் (மத்தேயு 10:29-30). உண்மையில் தேவனுடைய இந்த கட்டுப்பாட்டை விரும்பாத மனிதன் இந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது தேவனுடைய இறையாண்மையின் சத்தியத்தை வெறுக்கிறான், தேவனை நேசிக்காதவன் மற்றும் தனது வாழ்க்கையில் தேவனை விரும்பாதவன் அவன். அவன் தனது சொந்த வழியை விரும்புகிறான். அவன், பண்டைய பிசாசுகளைப் போலவே, "எங்களைத் தனியே விட்டுவிடுங்கள்" என்று கூறுகிறான் (மாற்கு 1:24).

English



முகப்பு பக்கம்

விதியின்வாதம் என்றால் என்ன? நிர்ணயவாதம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries