settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


மிகவும் பாதுகாப்பான, பக்தியுள்ள விசுவாசி கூட மரணத்திற்கு அஞ்சும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். மரணத்தைத் தவிர்க்க ஆசைப்படுவது என்பது இயற்கையானதே. மேலும் மரணம் என்பது தேவனுடைய சிருஷ்டிப்புக்கான திட்டத்தின் முதல் பகுதியாக இல்லை. நாம் முழுமையாய், பரிசுத்தமானவர்களாக ஆக்கப்பட்டோம், அவரோடு ஐக்கியத்தினால் பரதீசுவில் வாழ்கிறோம். உலகில் பாவத்தை ஒப்புக்கொள்வதற்கு மரணத்தின் அறிமுகம் அவசியமான பதிலாக இருந்தது. நாம் இறப்பது ஒரு கிருபை. நாம் அவ்வாறு செய்யாவிட்டால், நாம் என்றென்றும் பாவ உலகில் வாழவேண்டியிருக்கும்.

அந்த அறிவு உங்கள் சொந்த மரணம் பற்றிய சிந்தனைக்கு உள்ளான எதிர்வினையை எதிர்க்க வேண்ம் என்கிற அவசியமில்லை. நமது சரீரங்களின் பலவீனம் மற்றும் வாழ்க்கையின் திடீர் இடைநிறுத்தத்தின் எடுத்துக்காட்டுகள் ஒரு பெரிய, ஆபத்தான உலகில் நமது கட்டுப்பாடு இல்லாததை நினைவூட்டுகின்றன. நம்மில் இருப்பவர் உலகத்தில் உள்ளவனை விடப் பெரியவர் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது (1 யோவான் 4:4). நாம் அவருடன் சேர்ந்து இருக்கும்படிக்கு நமக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்த அவர் சென்றார் (யோவான் 14:2). ஆனால் நாம் எதிர்கொள்ளும் உடனடி, நடைமுறைக் கருத்தாய்வுகளைக் கருத்தில் கொள்ள இது உதவும்.

பயத்தை ஏற்படுத்தக்கூடிய மரணத்தின் பல அம்சங்கள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, அவை ஒவ்வொன்றிற்கும் தேவனிடத்தில் பதில் இருக்கிறது.

தெரியாமையின் பயம்

மரிப்பது சரியாக எதை உணர்கிறது? உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டு வெளியேறும்போது நீங்கள் என்ன பார்க்க முடியும்? அது எப்படி வரும்? ஜனங்கள் தெரிவிப்பது போல்—ஏதாவது ஒரு பிரகாசமான வெளிச்சமா? உறவினர்களின் குழுவா?

அது எப்படி இருக்கும் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாது, ஆனால் என்ன நடக்கிறது என்பதை வேதாகமம் விவரிக்கிறது. 2 கொரிந்தியர் 5:6-8 மற்றும் பிலிப்பியர் 1:23 கூறுகிறது, நாம் நம் தேகத்தை விட்டு வெளியேறும்போது, நாம் கர்த்தருடன் அவருடைய வீட்டில் இருக்கிறோம். என்ன ஒரு உறுதியான சிந்தனை! கிறிஸ்து மீண்டுமாய் வந்து விசுவாசிகளை உயிர்ப்பிக்கும் வரை (1 கொரிந்தியர் 15:20-22, 6:14) நாம் இந்த நிலையில் இருப்போம், அப்போது நமக்கு ஒரு புதிய, மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் வழங்கப்படும்.

கட்டுப்பாட்டை இழந்துவிடுமோ என்கிற பயம்

மனிதர்கள் முதிர்வயதை அடையும் நேரத்தில், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது அவர்களுக்கு நல்ல யோசனையாக இருக்கும். அவர்களுக்குத் தேவையானதை எப்படிக் கண்டுபிடிப்பது, அவர்கள் இருக்க விரும்பும் இடத்திற்குச் செல்வது மற்றும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வது எப்படி என்பது போன்றவை அவர்களுக்குத் தெரியும்.

பலர், தேவன் மீது நம்பிக்கை வைப்பவர்கள் கூட, தங்களுக்குத் தேவையானதைப் பெறவில்லை என்று மிகவும் பயப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களையும் தங்களைச் சுற்றியுள்ள ஜனங்களையும் தங்கள் நன்மைக்காக கையாள வேண்டும் என்று நினைக்கிறார்கள். துஷ்பிரயோகம் செய்யும் மற்றும் பயத்தால் பிடிக்கப்பட்டிருக்கும் ஆண்களையும் பெண்களையும் நாம் அனைவரும் சந்தித்திருக்கிறோம். அவர்கள் தங்கள் தேவைகளை வழங்குவதற்கு தேவனை நம்புவதில்லை, எனவே அவர்களே காரியங்களை கவனித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களுக்கு கவனம் செலுத்துவார்கள் என்று அவர்கள் நம்ப மாட்டார்கள், எனவே அவர்கள் தங்களுக்குத் தேவையானதைக் கோருகிறார்கள்.

தங்கள் மரணத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்று அவர்கள் எவ்வளவு அதிகமாக பயப்பட வேண்டும்! இயேசு பேதுருவிடம், அவன் எப்படி மரிப்பான் என்பதை விவரித்துக் கூறியது போல், "நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (யோவான் 21:18). பேதுரு இந்த எச்சரிக்கையைப் பெறுவதற்கு முன்பு, பயத்தில் இயேசுவை மறுதலித்தார். ஆனால் இயேசு பரலோகத்திற்குத் திரும்பிய பிறகு, பேதுரு ஒரு புதிய நபராக மாறினார்—கிறிஸ்துவின் செய்தியின் பேரார்வம் அவரது சுற்றுப்புறங்களைக் கட்டுப்படுத்தும் தேவையை விட அதிகமாக இருந்தது (அப்போஸ்தலர் 5:17-42). பரிசுத்த ஆவியானவர் மட்டுமே அவர் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள அவருக்கு பலம் கொடுத்தார்.

பின்னாக கைவிடப்பட்டவர்களைக் குறித்த பயம்

மரணத்தைப் பற்றிய கிறிஸ்தவ பார்வை "வேறுபாடு." முடிவான மரணம் என்பது தேவனை விட்டுப் பிரிவது ஆகும். சரீரம் மரிக்கும்போது, பூமியில் உள்ள நம் அன்புக்குரியவர்களிடமிருந்து சிறிது காலம் பிரிந்து விடுவோம். அவர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தால், நித்தியத்துடன் ஒப்பிடும்போது பிரிவினை கொஞ்சக்காலமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால், அப்படி இருக்காது. அப்படியானால், அவர்கள் இறக்கும் போது அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதைப் பற்றி அவர்களுடன் பேசுவதற்கு இந்த நேரத்தை ஒன்றாகப் பயன்படுத்த நம்முடைய எண்ணம் மாறுகிறது. இறுதியில் முடிவு அவர்களிடமே உள்ளது.

மரிக்கும் செயலைக் குறித்ததான பயம்

நாம் எப்படி மரிப்போம் என்பது நம்மில் சிலருக்குத் தெரியும். விரைவான மற்றும் வலியற்ற மரணம், நம் தூக்கத்தில், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு—அதன் இரகசியம் என்னவெனில், அதற்காக ஆயத்தப்படாத நிலை பயமுறுத்தும். நமக்குத் தெரிந்தால், நமக்கு ஒரு சீக்கிரமாக மரணிக்கும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அது நமக்கு இன்னும் பயமாக இருக்கும்.

ஆனால் அது ஒரு கணம் மட்டுமே. ஏறக்குறைய அனைவரும் கடந்துவிட்ட அல்லது கடந்து செல்லும் ஒரு கணம். கிறிஸ்தவர்கள் பிலிப்பியர் 3:20-21 ஐக் கூறலாம்: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”

பயத்தைத் தணிக்க அல்லது போக்க, உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மரணத்திற்குத் ஆயத்தப்படுத்த நீங்கள் சில நடவடிக்கை எடுக்கலாம்.

மரண பயத்தை ஜெயித்தல் – நடைமுறை படிகள்

பலர் தாங்கள் மரிக்கக்கூடாது என்று நம்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் இன்னும் அதிகமாக வாழ்வதற்கு இருக்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள். பெரும்பாலும், இதன் பொருள் அவர்களுக்கு பொறுப்புகள் மற்றும் முடிக்கப்படாத வணிகங்கள் உள்ளன, அவர்கள் போய்விட்டால் அவை யாவும் கவனிக்கப்படாமல் போய்விடும். ஆனால் பொறுப்புகள் இருப்பது உங்கள் நேரம் என்றால் அதற்காக உங்களை மரிப்பதில் இருந்து அது தடுக்காது. மாறாக முன்கூட்டிய திட்டமிடல் ஒருவேளை பயத்தைப் போக்கலாம்.

உங்களிடம் வணிகம் அல்லது குழந்தைகள் அல்லது பிற சார்ந்திருப்பவர்கள் இருந்தால், அவர்களின் கவனிப்பைக் கவனியுங்கள். உங்கள் பங்கை யார் ஏற்பார்கள் என்பதை முடிவு செய்து, அந்த நபருடன் ஒரு திட்டத்தை உருவாக்கவும். உயில் அல்லது பத்திரத்தை எழுதுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் ஒழுங்கமைக்கப்பட்டவை மற்றும் கண்டுபிடிக்க எளிதானவை என்பதை உறுதிப்படுத்தவும். உங்களால் முடியாததற்கு முன் உடைந்த உறவுகளை சரிசெய்யவும் முற்படுங்கள். ஆனால் இறப்பதற்காக வாழாதீர்கள். நியாயமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆவேசப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

மரண பயத்தை ஜெயிப்பது – சரீரப்பிரகாரமான படிகள்

நீங்கள் செயலிழந்து போனால், உங்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு வலுவான உணர்வுகள் இருந்தால், அவற்றை இப்போதே வெளிப்படுத்துங்கள். ஒரு நோய் அல்லது காயத்தின் போது, நீங்கள் நிலைமையின் கட்டுப்பாட்டை இழந்து, உங்கள் விருப்பங்களைத் தெரிவிக்க முடியாமல் போவது முற்றிலும் சாத்தியமாகும். வாழும் போதே உங்கள் விருப்பத்தைப் பெறுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது குறைந்தபட்சம் அது எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். உங்களால் முடிவெடுக்க முடியாவிட்டால், உங்களுக்காக முடிவெடுக்க அங்கீகரிக்கப்பட்ட நீங்கள் நம்புகிற ஒருவரை ஏற்படுத்துங்கள்.

மரண பயத்தை ஜெயித்தல் - ஆவிக்குரிய படிகள்

மரணத்தைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியம் வாழ்க்கையைப் பற்றிய சத்தியம். நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசிக்கிறீர்கள், அவர்களை கவனித்துக்கொள்கிறீர்கள், ஆனால் தேவன் அவர்களை அதிகமாக நேசிக்கிறார். உங்கள் பூமிக்குரிய மரபைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம், ஆனால் தேவன் பரலோகக் கண்ணோட்டத்தில் அதிக அக்கறை காட்டுகிறார். உலகில் உள்ள அனைத்து ஆவணங்களும் ஒரு எளிய செயலின் மன அமைதியைக் கொண்டு வராது: நிலைத்திருங்கள்.

வாழ்கின்ற இந்த வாழ்க்கையின் மத்தியில், இது ஒரு தற்காலிக நிலை என்பதை மனதில் வைத்திருப்பது கடினம். 1 யோவான் 2:15-17 கூறுகிறது, “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." நாம் இதை எப்படி நினைவில் கொள்கிறோம் என்றால் அது நிலைத்திருப்பதன் மூலமாகும் (1 யோவான் 2:24). அவருடைய வார்த்தையின் சத்தியத்தில் நிலைத்திருப்பது, நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் அவர் சொல்வதை நம்புவது, இந்த வாழ்க்கையையும் நாம் பெறப்போகும் வாழ்க்கையையும் பற்றிய சரியான கண்ணோட்டத்தை நமக்குத் தரும்.

அந்த நித்திய கண்ணோட்டத்தை நாம் வைத்திருக்க முடிந்தால், நாம் 1 யோவான் 3:1-3 ஐ நிறைவேற்ற முடியும்: “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.” நாம் இவ்வுலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரியும், மற்றவர்களும் அதைக் காண்பார்கள். நாம் கிறிஸ்துவைப் போல இருக்கவும், அவரைப் போலவே பார்க்கவும் கூடிய நாளைத் தீவிரமாகத் தேடுவதற்கு, தேவனுடைய பிள்ளைகள் என்கிற நமது நிலையை நாம் உரிமைக்கொள்வோம்.

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries