கேள்வி
நான் இரட்சிக்கப்பட்டதாக உணரவில்லை எனில் என்ன செய்வது?
பதில்
இது கிறிஸ்தவர்களிடையே கேட்கப்படும் மிகவும் பொதுவான ஒரு கேள்வி. உணர்வுகள் அல்லது அவற்றின் இல்லாமை காரணமாக பலர் தங்கள் இரட்சிப்பை சந்தேகிக்கிறார்கள். இரட்சிப்பைப் பற்றி சொல்வதற்கு வேதாகமத்திற்கு நிறைய இருக்கிறது, ஆனால் "இரட்சிக்கப்பட்ட உணர்வு" பற்றி எதுவும் சொல்லவில்லை. இரட்சிப்பு என்பது பாவத்தின் "கோபத்திலிருந்து" அதாவது பாவத்திற்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படும் ஒரு செயல்முறையாகும் (ரோமர் 5:9; 1 தெசலோனிக்கேயர் 5:9). குறிப்பாக, சிலுவையில் இயேசுவின் மரணம் மற்றும் அடுத்தபடியாக அவரது உயிர்த்தெழுதல் இவற்றால் நாம் இரட்சிப்பை அடைந்திருக்கிறோம் (ரோமர் 5:10; எபேசியர் 1:7).
இரட்சிப்பின் செயல்பாட்டில் நமது பங்கு என்னவென்றால், நாம் விசுவாசத்தால் இரட்சிக்கப்படுகிறோம். முதலில், நாம் சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும்—அதாவது இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தியைக் கேட்கவேண்டும் (எபேசியர் 1:13). பிறகு நாம் அதை விசுவாசிக்க வேண்டும்—அதாவது நாம் கர்த்தராகிய இயேசுவை முழுமையாக நம்பவேண்டும் (ரோமர் 1:16) மற்றும் அவருடைய சிலுவை பலியில் மட்டும் நம்பிக்கை வைக்கவேண்டும். இரட்சிப்பை அடைய மாம்சத்தின் கிரியைகளில் நமக்கு நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கை—இது தேவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஈவு, நாம் சொந்தமாக உற்பத்தி செய்யும் ஒன்று அல்ல (எபேசியர் 2: 8-9)—மனந்திரும்புதல், பாவத்திலிருந்து மனமாற்றம் மற்றும் கிறிஸ்துவைப் பற்றி மனம் மாறுதல் (அப். 3:19) மற்றும் கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுதல் (ரோமர் 10:9-10, 13). நாம் புதிய சிருஷ்டியாக வாழத் தொடங்குகையில் இரட்சிப்பு மாற்றப்பட்ட வாழ்க்கையை விளைவிக்கிறது (2 கொரிந்தியர் 5:17).
நாம் ஒரு உணர்வு சார்ந்த சமூகத்தில் வாழ்கிறோம், துரதிர்ஷ்டவசமாக, அது சபைக்குள்ளும் பரவியது. ஆனால் உணர்வுகள் நம்பமுடியாதவை. உணர்ச்சிகள் நம்பிக்கையில்லாதவை. அவை கடலின் அலைகள் போல் பாய்ந்து ஓடுகின்றன, அவை அனைத்து வகையான கடற்பாசி மற்றும் குப்பைகளையும் கொண்டு வந்து கரையில் வைக்கும், பின்னர் திரும்பிச் சென்று, நாம் நிற்கும் தரையை அரித்து கடலில் கழுவுகிறோம். உணர்ச்சிகளால் தங்கள் வாழ்க்கையை ஆள்பவர்களின் நிலை அப்படியிருக்கிறது. எளிமையான சூழ்நிலைகள்—தலைவலி, மேகமூட்டமான நாள், நண்பரால் சிந்திக்காமல் பேசப்படும் வார்த்தை—நம் நம்பிக்கையை சிதைத்து, விரக்தியில் "கடலுக்கு வெளியே" அனுப்பலாம். சந்தேகங்கள் மற்றும் ஊக்கமின்மை, குறிப்பாக கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி, நம் உணர்வுகளை உண்மை என்று விளக்குவதற்கு முயற்சிப்பதன் தவிர்க்க முடியாத விளைவு. அவைகள் இல்லை.
ஆனால் முன்னெச்சரிக்கையுள்ள மற்றும் நன்கு ஆயுதம் ஏந்திய கிறிஸ்தவர் உணர்வுகளால் ஆளப்படாமல் ஆனால் அவருக்குத் தெரிந்த சத்தியத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நபர் ஆவார். அவர் எதையும் நிரூபிக்க அவருடைய உணர்வுகளை நம்பவில்லை. உணர்வுகளை நம்புவது என்பதுதான் துல்லியமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் செய்யும் தவறு. அவர்கள் மிகவும் உள்ளான நிலைக்கு உட்படுகிறார்கள், அவர்கள் தங்களுக்குள் ஆழ்ந்து, தொடர்ந்து தங்கள் சொந்த உணர்வுகளை பகுப்பாய்வு செய்கிறார்கள். இவர்கள் தேவனுடனான தங்கள் உறவை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறார்கள். "நான் உண்மையாகவே தேவனை நேசிக்கிறேனா?" "அவர் உண்மையாகவே என்னை நேசிக்கிறாரா?" "நான் நல்லவனா?" நாம் உண்மையில் செய்ய வேண்டியது நம்மைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, நம் உணர்வுகளில் கவனம் செலுத்துவதை விடவேண்டும், மற்றும் தேவனிடம் நம் கவனத்தை திருப்பவேண்டும், அவருடைய வார்த்தையிலிருந்து அவரைப் பற்றி நமக்குத் தெரிந்த சத்தியத்திற்கு நேராக திரும்பவேண்டும்.
தேவனை மையமாகக் கொண்ட புறநிலை உண்மையைக் காட்டிலும் நம்மை மையமாகக் கொண்ட அகநிலை உணர்வுகளால் நாம் கட்டுப்படுத்தப்படும் போது, நாம் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில் வாழ்கிறோம். விசுவாசத்தின் சிறந்த கோட்பாடுகள் மற்றும் வாழ்க்கைக்கு அவற்றின் சம்பந்தம் ஆகியவற்றை மையப்படுத்திய சத்தியம்: தேவனுடைய ராஜ்யபாரம், கிறிஸ்துவின் பிரதான ஆசாரிய பரிந்துபேசுதல், பரிசுத்த ஆவியின் வாக்குறுதி மற்றும் நித்திய மகிமையின் நம்பிக்கை. இந்த மாபெரும் சத்தியங்களைப் புரிந்துகொள்வதும், நம் எண்ணங்களை மையமாக வைத்து, அவற்றை நம் மனதில் மீண்டும் மீண்டும் சிந்தனை செய்வதும், நமது வாழ்க்கையின் அனைத்து சோதனைகளிலும் சத்தியத்திலிருந்து பகுத்தறிவு செய்ய உதவும், மேலும் நமது நம்பிக்கை உறுதியானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். தேவனைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட, நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றிய பகுத்தறிவு ஆவிக்குரிய தோல்விக்கான உறுதியான பாதையாகும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மரணம் மற்றும் "புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளுவது" (ரோமர் 6:4), மற்றும் அந்த புதிய ஜீவன் நம்மை இரட்சித்த அவரைப் பற்றிய எண்ணங்களால் வகைப்படுத்தப்படுகிறது, மரித்த மாம்சத்தின் உணர்வுகள் பற்றிய எண்ணங்கள் அல்ல அது கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டது. நம்மைப் பற்றியும் நம் உணர்வுகளைப் பற்றியும் நாம் தொடர்ந்து சிந்திக்கும்போது, நாம் அழுகிய மற்றும் மரித்துப்போன ஒரு சடலத்தைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம்.
நாம் விசுவாசத்துடன் அவரிடம் வந்தால் தேவன் நம்மை இரட்சிப்பார் என்று உறுதியளித்திருக்கிறார். நாம் இரட்சிக்கப்பட்டதாக உணருவோம் என்று அவர் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை.
English
நான் இரட்சிக்கப்பட்டதாக உணரவில்லை எனில் என்ன செய்வது?