கேள்வி
ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் உண்மையில் தடைப்பண்ணப்பட்டக் கனியைச் சாப்பிட்டதா?
பதில்
"தடைபண்ணப்பட்ட கனி" என்ற சொற்றொடர் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் கதையைக் குறிக்கிறது. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று அவர்கள் தேவனால் தடைப் பண்ணப்பட்டனர் (ஆதியாகமம் 2:9; 3:2). அது எந்த வகையான கனி என்பது பற்றி வேதாகமம் எதுவும் கூறவில்லை. பாரம்பரியம் அதை ஒரு ஆப்பிள் என்று அடையாளம் கண்டுள்ளது, ஆனால் அது என்ன வகையான கனி என்பதை உறுதியாக அறிய முடியாது. ஆதியாகமத்தின் வாசகத்திலிருந்து, ஒவ்வொரு அறிகுறியும் அது ஒரு சொல்லர்த்தமான கனியைக் கொண்ட ஒரு சொல்லர்த்தமான மரம் என்பதுமட்டும் தெளிவாகிறது.
வேதப்பகுதியில் உள்ள முக்கிய உறுப்பு கனி அல்ல, ஆனால் அதை சாப்பிடுவதற்கு போடப்பட்ட தடைதான். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரே ஒரு தடையைக் கொடுத்தார். கனிக்குள் ஏதாவது ஆவிக்குரிய பண்பு இருந்ததா என்பது உண்மையில் பொருத்தமற்றது. பாவம் தேவனுடைய கட்டளையை மீறியது. கனியைப் புசிப்பதன் மூலம் (கீழ்ப்படியாமையின் செயல்), ஆதாமும் ஏவாளும் தீமையைக் குறித்த தனிப்பட்ட அறிவைப் பெற்றனர். அவர்கள் ஏற்கனவே நல்லதை அறிந்திருந்தார்கள், ஆனால் இப்போது கீழ்ப்படியாமையின் தீமையின் மாறுபட்ட அனுபவமும், அதனுடன் வந்த குற்றமும் அவமானமும் அவர்களுக்கு இருந்தது. சாத்தானின் பொய் என்னவென்றால், நன்மை தீமைகளை அறிந்துகொள்வது அவர்களை தேவர்களைப் போல ஆக்கும் (ஆதியாகமம் 3:5) என்பதாகும். உண்மையில், அவர்கள் ஏற்கனவே தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் மற்றும் அவருடைய மகிழ்ச்சியின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள்.
தேவன் எதையாவது தடை செய்தால், அது நம் நன்மைக்காகவே என்பதுதான் இன்று நமக்குள்ளப் பாடம். அவருக்குக் கீழ்ப்படியாமல் போவது, நம் வழியில் செல்வது அல்லது நமக்கு நன்மை பயக்காதது எது என்பதை நாமே தீர்மானிப்பது எப்போதும் பேரழிவையே ஏற்படுத்தும். நம்மைப் படைத்த நம் பரலோகத் தகப்பன் நமக்கு எது சிறந்தது என்பதை அறிந்திருக்கிறார், அவர் எதையாவது தடைசெய்யும்போது, நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும். அவருடைய பரிபூரணமான மற்றும் பரிசுத்த சித்தத்திற்குப் பதிலாக நம்முடைய சொந்த விருப்பத்திற்குக் கீழ்ப்படிய நாம் தேர்ந்தெடுக்கும்போது, காரியங்கள் நமக்கு ஒருபோதும் நன்றாக நடக்காது. ஆதாமும் ஏவாளும் தடைப்பண்ணப்பட்ட கனியைப் புசித்த பிறகு அந்த சோகமான கண்டுபிடிப்பை செய்தார்கள், மேலும் மனிதகுலம் அவர்களின் முடிவின் விளைவுகளை அன்றிலிருந்து அனுபவித்து வருகிறது (ரோமர் 5:12).
English
ஆதாம் மற்றும் ஏவாளின் பாவம் உண்மையில் தடைப்பண்ணப்பட்டக் கனியைச் சாப்பிட்டதா?