settings icon
share icon
கேள்வி

ஃப்ரீமேசன்ரி என்றால் என்ன மற்றும் ஃப்ரீ மேசன்கள் எதை நம்புகிறார்கள்?

பதில்


தயவாய் கவனிக்கவும், இந்தக் கட்டுரையின் மூலம், ஃப்ரீமேசன்ரியில் (அதாவது ஃப்ரீமேசன்ரி என்பது மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு) ஈடுபட்டுள்ள அனைவரும் வழிபாட்டு மரபைக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் கூறவில்லை, அல்லது அனைத்து ஃப்ரீமேசன்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் காரியங்களையும் நம்புகிறார்கள். நாங்கள் சொல்வது இதுதான்: ஃப்ரீமேசன்ரி அதன் மையத்தில் ஒரு கிறிஸ்தவ அமைப்பு அல்ல. ஃப்ரீமேசன்ரியில் இருந்து வெளியேறிய பல கிறிஸ்தவர்கள் உள்ளனர், அது உண்மையில் என்ன என்பதைக் கண்டுபிடித்த பிறகுள்ள நல்ல மற்றும் தெய்வபக்தியுள்ள மனிதர்களும் உள்ளனர், கிறிஸ்துவில் உண்மையான விசுவாசிகள் ஃப்ரீமேசன்களாக இருக்கிறார்கள். ஃப்ரீமேசன்ரியை அவர்கள் உண்மையாகப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம் என்பது எங்கள் கருத்து. ஃப்ரீமேசன்ரியில் ஈடுபடலாமா என்பது குறித்து ஒவ்வொரு நபரும் தேவனிவனிடமிருந்து ஞானம் மற்றும் பகுத்தறிவுக்காக ஜெபிக்க வேண்டும். இந்தக் கட்டுரையானது ப்ளூ லாட்ஜின் முன்னாள் ஆராதனைக்குரிய மாஸ்டரால் மதிப்பாய்வு செய்யப்பட்டு துல்லியமாக அங்கீகரிக்கப்பட்டது.

கேள்வி: “ஃப்ரீமேசன்ரி என்றால் என்ன, ஃப்ரீமேசன்கள் எதை நம்புகிறார்கள்?”

பதில்: ஃப்ரீமேசன்ரி, ஈஸ்டர்ன் ஸ்டார் மற்றும் பிற ஒத்த "இரகசிய" நிறுவனங்கள் பாதிப்பில்லாத கூட்டுறவுக் கூடிவரவுகளாகத் தோன்றுகின்றன. அவர்களில் பலர் கடவுள் நம்பிக்கையை ஊக்குவிக்கிறார்கள். இருப்பினும், நெருக்கமான ஆய்வில், ஒரே நம்பிக்கைத் தேவை உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவனை நம்புவது அல்ல, மாறாக, "கடவுள்களை" உள்ளடக்கிய ஒரு "உயர்நிலை" இருப்பதை ஒருவர் நம்ப வேண்டும். இஸ்லாம், இந்து மதம் அல்லது வேறு எந்த உலக மதமும். இந்த அமைப்பின் பைபிளுக்கு புறம்பான மற்றும் கிறிஸ்தவ விரோத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள், கிறிஸ்தவ நம்பிக்கையுடன் பொருந்தக்கூடியதாகக் கூறப்படும் வெளிப்புறத் தோற்றத்தின் அடியில் ஓரளவு மறைக்கப்பட்டுள்ளன. பின்வருவது, ஃப்ரீமேசன்ரியின் "அதிகாரப்பூர்வ" நிலைப்பாட்டுடன் வேதாகமம் கூறுவதை ஒப்பிடுவது:

பாவத்திலிருந்து இரட்சிப்பு:

வேதாகமத்தின் பார்வை: இயேசு தம் இரத்தத்தைச் சிந்தியபோது தேவனுக்கு முன்பாக பாவியின் பாவத்திற்கான பலியாக ஆனார் மற்றும் எப்போதும் அவரை விசுவாசிக்கிற அனைவரின் பாவங்களுக்கான பாவப்பரிகாரமாக (விலைக்கிரையமாக) மரித்தார் (எபேசியர் 2:8-9, ரோமர் 5:8, யோவான் 3: 16)

மேசனின் பார்வை: லாட்ஜில் சேர்வதற்கான செயல்முறையே கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவானவர் கர்த்தரும் இரட்சகருமாய் இருக்கிற தனித்துவத்தை புறக்கணிக்க வேண்டும். ஃப்ரீமேசன்ரியின் கூற்றுப்படி, ஒரு நபர் தனது நல்ல செயல்கள் மற்றும் தனிப்பட்ட சுய முன்னேற்றத்தின் விளைவாக இரட்சிக்கப்பட்டு சொர்க்கத்திற்குச் செல்வார்.

வேதாகமம் குறித்த பார்வை:

வேதாகமத்தின் பார்வை: வேதவசனங்களின் இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் முழுமையான ஏவுதலால்—அவை பிழையற்றவை மற்றும் அவற்றின் போதனைகளும் அதிகாரமும் முழுமையானது, மேலானது மற்றும் இறுதியானது. வேதாகமம் தேவனுடைய வார்த்தை (2 தீமோத்தேயு 3:16, 1 தெசலோனிக்கேயர் 2:13).

மேசனின் பார்வை: வேதாகமம் என்பது பல "புனித நியாயப்பிரமாணத்தின் தொகுதிகளில்” ஒன்றாகும், இவை அனைத்தும் ஃப்ரீமேசன்ரியில் சமமாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு குரான் எப்படி முக்கியமோ, அதே போல கிறிஸ்தவர்கள் என்று கூறும் உறுப்பினர்களைப் பொறுத்த வரையில் வேதாகமம் ஒரு முக்கியமான புத்தகம். வேதாகமம் தேவனுடைய பிரத்தியேக வார்த்தையாகக் கருதப்படவில்லை, அல்லது அது மனிதகுலத்திற்கு தேவன் அருளிய தன்னைப் பற்றிய ஒரே வெளிப்பாடாகக் கருதப்படவில்லை; ஆனால் பல மத ஆதார புத்தகங்களில் ஒன்று மட்டுமே எனக் கருதப்படுகிறது. அறநெறிக்கு இது ஒரு நல்ல வழிகாட்டி. வேதாகமம் முதன்மையாக தேவனுடைய சித்தத்தின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது, இது குரான் அல்லது ரிக் வேதங்கள் போன்ற பிற புனித நூல்களிலும் கைப்பற்றப்படலாம்.

தேவ சாஸ்திரம்:

வேதாகமத்தின் கருத்து: தேவன் ஒருவரே. தேவனுடைய பல்வேறு நாமங்கள் இஸ்ரவேலின் தேவனைக் குறிக்கின்றன மற்றும் தேவனுடைய சில பண்புகளை வெளிப்படுத்துகின்றன. மற்ற கடவுள்களை வணங்குவது அல்லது மற்ற தெய்வங்களை தொழுதுகொள்ளுவது விக்கிரகாராதனை (யாத்திராகமம் 20:3). விக்கிரகாராதனை ஒரு கொடிய பாவம் என்று பவுல் கூறினார் (1 கொரிந்தியர் 10:14) மேலும் விக்கிரகாராதனை செய்பவர்கள் நரகத்தில் அழிந்து போவார்கள் என்று யோவான் கூறினார் (வெளிப்படுத்துதல் 21:8).

மேசனின் பார்வை: அனைத்து உறுப்பினர்களும் ஒரு தெய்வத்தை நம்ப வேண்டும். வெவ்வேறு மதங்கள் (கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம் போன்றவை) ஒரே தேவனை ஒப்புக்கொள்கின்றன, அவரை வெவ்வேறு நாமங்களில் அழைக்கின்றன. ‘நூறு நாமங்களில் நாமமில்லாத ஒருவருக்கு’ வெவ்வேறு நாமங்களைப் பயன்படுத்தினாலும், அவர்கள் எல்லா மதத்தினரும் ஒரே தேவனையும் பிதாவையும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பும்படி ஃப்ரீமேசன்ரி அழைக்கிறது.

இயேசு மற்றும் திரித்துவத்தின் கோட்பாடு:

வேதாகமத்தின் பார்வை: இயேசு மனித வடிவில் வந்த தேவன் (மத்தேயு 1:18-24, யோவான் 1:1). இயேசு திரித்துவத்தின் இரண்டாவது நபர் (மத்தேயு 28:19, மாற்கு 1:9-11). பூமியில் இருந்தபோது, அவர் முழு மனிதனாகவும் (மாற்கு 4:38, மத்தேயு 4:2) முழு தெய்வீகமாகவும் இருந்தார் (யோவான் 20:28, யோவான் 1:1-2, அப்போஸ்தலர் 4:10-12). கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைப் பொருட்படுத்தாமல், இயேசுவின் நாமத்தில் ஜெபித்து, மற்றவர்களுக்கு முன்பாக அவரை அறிவிக்க வேண்டும் (யோவான் 14:13-14, 1 யோவான் 2:23, அப்போஸ்தலர் 4:18-20).

மேசனின் பார்வை: இயேசு கிறிஸ்து அல்லது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய திரியேக தேவனில் தனித்தன்மை இல்லை; எனவே இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம் பற்றிய கோட்பாடு இல்லை. ஜெபிக்கும்போது இயேசுவின் நாமத்தைச் சொல்வது அல்லது லாட்ஜில் அவருடைய நாமத்தைக் குறிப்பிடுவது மேசோனிக் அல்ல என்று கருதப்படுகிறது. தேவனுக்கான ஒரே வழி இயேசு மட்டுமே என்று பரிந்துரைப்பது சகிப்புத்தன்மையின் கொள்கைக்கு முரணானது. மேசோனிக் சடங்குகளில் பயன்படுத்தப்படும் வேதாகம வசனங்களில் இருந்து இயேசுவின் நாமம் தவிர்க்கப்பட்டுள்ளது. இயேசு மற்ற மதத் தலைவர்களைப் போலவே இருக்கிறார்.

மனித இயல்பு மற்றும் பாவம்:

வேதாகமத்தின் பார்வை: எல்லா மனிதர்களும் பாவ சுபாவத்துடன் பிறந்தவர்கள், முற்றிலும் சீர்கெட்டுப்போனவர்கள், மேலும் பாவத்திலிருந்து மீட்படைவதற்கு மீட்பர் தேவை (ரோமர் 3:23, ரோமர் 5:12, சங்கீதம் 51:5, எபேசியர் 2:1). தார்மீக முழுமைக்கான திறனை மனிதகுலம் தன்னுள் கொண்டுள்ளது என்பதை வேதாகமம் மறுக்கிறது (1 யோவான் 1:8-10, ரோமர் 1:18-25).

மேசனின் பார்வை: சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம், மனிதன் பாவமுள்ளவன் அல்ல, “இயல்பிலேயே முரட்டுத்தனமானவன் மற்றும் பூரணமற்றவன்” என்று மேசன்கள் கற்பிக்கிறார்கள். தொண்டு, ஒழுக்கநெறியுள்ள வாழ்வு மற்றும் குடிமைக் கடமையின் தன்னார்வச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனிதர்கள் தங்கள் குணத்தையும் நடத்தையையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். மனிதகுலம் பூரணமில்லாமையிலிருந்து முழுமையான முழுமையை நோக்கி நகரும் திறனைக் கொண்டுள்ளது. தார்மீக மற்றும் ஆவிக்குரிய முழுமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது.

ஒரு கிறிஸ்தவன் ஃப்ரீமேசன்ரியின் சத்தியப்பிரமாணத்தை மேற்கொள்ளும்போது, தேவன் பொய்யாகவும் பாவமாகவும் உச்சரித்த பின்வரும் கோட்பாடுகளுக்கு அவர் சத்தியம் செய்கிறார்:

1. இரட்சிப்பை மனிதனின் நற்கிரியைகளால் அடைய முடியும்.

2. சமமாக மதிக்கப்படும் தீர்க்கதரிசிகளில் இயேசுவும் ஒருவர்.

3. அவர்கள் லாட்ஜில் அமைதியாக இருப்பார்கள், கிறிஸ்துவைக் குறித்துப் பேச மாட்டார்கள்.

4. அவர்கள் ஆவிக்குரிய இருளிலும் அறியாமையிலும் லாட்ஜை அணுகுகிறார்கள் என்று வேதாகமம் கூறும்போது, கிறிஸ்தவர்கள் ஏற்கனவே வெளிச்சத்தில் இருக்கிறார்கள், வெளிச்சத்தின் பிள்ளைகள், மற்றும் உலகத்தின் ஒளியாகிய இயேசு கிறிஸ்துவால் வாழ்கிறார்கள்.

5. கிறிஸ்தவர்கள் மேசோனிக் பொருத்தனை செய்ய வேண்டும் என்று கோருவதன் மூலம், மேசன்கள் கிறிஸ்தவர்களை அவதூறாக வழிநடத்துகிறார்கள் மற்றும் கர்த்தருடைய நாமத்தை வீணிலே எடுத்துக்கொள்கிறார்கள்.

6. மேசன்ரி அதன் G.A.O.T.U. [பிரபஞ்சத்தின் சிறந்த கட்டிடக் கலைஞர்], பிரபஞ்சத்தின் உண்மையான கடவுள் என்று மேசன்ரி நம்பும் அனைத்து மதங்களிலும் உள்ள அனைத்து கடவுள்களின் பிரதிநிதி என்று கப்பிக்கிறது.

7. மேசன்ரி கிறிஸ்தவர்களை அவர்களின் பிரார்த்தனைகளில் உலகளாவிய அணுகுமுறையை எடுக்க வைக்கிறது, மேசோனிக் "சகோதரர்களாக" இருக்கும் விசுவாசிகள் அல்லாதவர்களை புண்படுத்தாமல் இருக்க ஒரு "பொதுவான" பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறது.

8. மேசோனிக் பொருத்தனை செய்வதன் மூலமும், லாட்ஜின் கோட்பாடுகளில் பங்கேற்பதன் மூலமும், கிறிஸ்தவர்கள் மற்ற லாட்ஜ் உறுப்பினர்களுக்கு ஒரு தவறான நற்செய்தியை நிலைநிறுத்துகிறார்கள், அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வதற்கான மேசன்ரியின் இரட்சிப்பின் திட்டத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இத்தகைய ஒத்திசைவு வகை அமைப்பில் அவர்கள் அங்கம் வகித்ததன் மூலம், அவர்கள் கிறிஸ்தவர்களாக சாட்சி கொடுப்பதில் கடுமையாக சமரசம் செய்துகொண்டுள்ளனர்.

9. மேசோனிக் கடமையை ஏற்றுக்கொள்வதன் மூலம், பொய்யான கடவுள்களுக்கு சேவை செய்பவர்கள் மற்றும் தவறான கோட்பாடுகளை நம்புபவர்களால் அவர்களது மனம், ஆவி மற்றும் உடல் மாசுபடுவதை அனுமதிக்க கிறிஸ்தவர் ஒப்புக்கொடுக்கிகிறார்கள்.

மேசன்ரியானது பல சிக்கல்களில் வேதத்தின் தெளிவான போதனைக்கு முரண்படுகிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மேசன்ரி, வேதாகமம் கண்டிக்கும் செயல்களில் ஜனங்கள் ஈடுபட வேண்டும். இதன் விளைவாக, ஒரு கிறிஸ்துவர் ஃப்ரீமேசன்ரியுடன் எந்த தொடர்பும் கொண்ட எந்த இரகசிய சமூகம் அல்லது அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

English



முகப்பு பக்கம்

ஃப்ரீமேசன்ரி என்றால் என்ன மற்றும் ஃப்ரீ மேசன்கள் எதை நம்புகிறார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries