கேள்வி
மனிதர்களுக்கு உண்மையிலேயே சுய சித்தம் இருக்கிறதா?
பதில்
“சுய சித்தம்” என்றால், மனிதர்கள் தங்கள் விதியை உண்மையாக பாதிக்கும் தேர்வுகளை செய்ய தேவன் வாய்ப்பளிக்கிறார் என்றால், ஆம், மனிதர்களுக்கு ஒரு சுய சித்தம்/விருப்பம் உள்ளது. உலகின் தற்போதைய பாவ நிலை ஆதாம் மற்றும் ஏவாள் செய்த தேர்வுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது (தொடர்புடையதாக இருக்கிறது). தேவன் தம்முடைய சாயலில் மனிக்குலத்தை படைத்தார், அதில் தேர்ந்தெடுக்கும் திறனும் உள்ளடங்கி இருந்தது.
இருப்பினும், சுய சித்தம் என்பது மனிதனால் அவன் விரும்பும் எதையும் செய்ய முடியும் என்று அர்த்தமல்ல. நம்முடைய தேர்வுகள் நம் இயல்புக்கு ஏற்ப மட்டுமே உள்ளன. உதாரணமாக, ஒரு மனிதன் ஒரு பாலத்தின் குறுக்கே நடக்க அல்லது குறுக்கே நடக்காமல் இருப்பதை தேர்வு செய்யலாம்; ஆனால் அவன் தேர்வு செய்யாமல்/இயலாமல் இருப்பது அந்த பாலத்தின் மீது பறப்பதுதான் – கரணம் அவனது இயல்பு அவனைப் பறப்பதிலிருந்து தடுக்கிறது. இதேபோல், ஒரு மனிதன் தன்னை நீதியுள்ளவனாக தேர்வு செய்ய முடியாது — அவனுடைய (பாவ) இயல்பு அல்லது பாவ சுபாவம் அவன் குற்றத்தை ரத்து செய்வதிலிருந்து தடுக்கிறது (ரோமர் 3:23). எனவே, சுய சித்தம் இயற்கையால் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பு நம்முடைய பொறுப்புணர்வைத் தளரச்செய்யாது. நமக்கு தேர்ந்தெடுக்கும் திறன் மட்டுமல்ல, புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. பழைய ஏற்பாட்டில், தேவன் ஒரு தேசத்தை (இஸ்ரவேலை) தேர்ந்தெடுத்தார், ஆனால் அந்த தேசத்திலுள்ள நபர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுப்பதற்கான கடமையைக் கொண்டுள்ளனர். இஸ்ரவேலுக்கு வெளியே உள்ள நபர்கள் தேவனை நம்பவும் பின்பற்றவும் தேர்வு செய்ய முடிந்தது (உதாரணமாக, ரூத் மற்றும் ராகப்).
புதிய ஏற்பாட்டில், பாவிகள் "மனந்திரும்ப" மற்றும் "விசுவாசிக்க" வேண்டும் மீண்டும் மீண்டுமாக கட்டளையிடப்படுகிறார்கள் (மத்தேயு 3:2; 4:17; அப்போஸ்தலர் 3:19; 1 யோவான் 3:23). மனந்திரும்புவதற்கான ஒவ்வொரு அழைப்பும் தேர்வு செய்வதற்கான அழைப்பு ஆகும். நம்புவதற்கான கட்டளை, கேட்பவர் கட்டளைக்குக் கீழ்ப்படிய தேர்வு செய்யலாம் என்று கருதப்படுகிறது.
சில அவிசுவாசிகளின் பிரச்சினையைக் கண்ட இயேசு, “என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை" (யோவான் 5:40) என்று சொன்னார். அவர்கள் விரும்பினால் அவர்கள் வந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது; அவர்கள் விரும்பாதது அவர்களின் பிரச்சினை. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7), இரட்சிப்பிற்கு வெளியே இருப்பவர்களும் “சாக்குபோக்கு சொல்ல” இடமில்லை (ரோமர் 1:20-21).
ஆனால் பாவ இயல்புகளால் கட்டுப்படுத்தப்பட்ட மனிதன் எப்போதுமே நல்லதை எவ்வாறு தேர்வு செய்யமுடியும்? தேவனுடைய கிருபையினாலும் பெலத்தினாலும் மட்டுமே, இரட்சிப்பைத் தேர்வுசெய்ய முடியும் என்ற பொருளில் சுயசித்தம் உண்மையிலேயே “சுதந்திரமாக” மாறும் (யோவான் 15:16). பரிசுத்த ஆவியானவர் ஒரு நபரை மீண்டும் பிறந்த அனுபவத்தில் கொண்டுவர அந்த நபரின் சுய விருப்பத்தின் மூலமாகவும் செயல்படுகிறார் (யோவான் 1:12-13) மற்றும் அவனுக்கு / அவளுக்கு ஒரு புதிய சுபாவத்தைக் கொடுப்பது “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுதல்” (எபேசியர் 4:24) ஆகும். இரட்சிப்பு என்பது தேவனுடைய வேலையாயிருக்கிறது. அதே நேரத்தில், நம்முடைய நோக்கங்கள், ஆசைகள் மற்றும் செயல்கள் தானாக முன்வந்து செயல்படுகின்றன, மேலும் அவற்றுக்கு நாம் பொறுப்பேற்கிறோம்.
English
மனிதர்களுக்கு உண்மையிலேயே சுய சித்தம் இருக்கிறதா?