கேள்வி
கடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை?
பதில்
"காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலாத்தியர் 4:5). இந்த வசனம் "காலம் நிறைவேறினபோது" பிதா தம்முடைய குமாரனை அனுப்பினார் என்று கூறுகிறது. முதல் நூற்றாண்டின் போது பல விஷயங்கள் நிகழ்ந்தன, குறைந்தபட்சம் மனித காரணங்களால், கிறிஸ்து வரும்போது அது சிறந்ததாக தோன்றுகின்றன.
1) அந்தக் காலத்தில் யூதர்கள் மத்தியில் மேசியா வருவார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இஸ்ரவேலின்மீது உண்டாயிருந்த ரோமர்களின் ஆட்சி, யூதர்கள் மேசியாவின் வருகையை எதிர்நோக்கும் பசியைத் தந்தது.
2) பல்வேறு நாடுகளை ஒன்றாக இணைத்து ஒற்றுமையை ரோமாபுரி கொண்டுவந்தது. அதனிமித்தம் தனது அரசாங்கத்தின் கீழ் உலகின் பெரும்பகுதியை ஐக்கியப்படுத்தியது. மேலும், ரோமப்பேரரசு ஒப்பீட்டளவில் அமைதியானதாக இருந்ததால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தை பரப்புவதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். பயணத்தின் இத்தகைய சுதந்திரம் மற்ற காலங்களில் சாத்தியமற்றதாக இருந்திருக்கும்.
3) ரோம் இராணுவத்தை வென்றிருந்த போது, கிரேக்கம் கலாச்சார ரீதியைக் கைப்பற்றியது. கிரேக்க மொழியின் ஒரு "பொதுவான" வடிவம் (கிளாசிக்கல் கிரேக்கத்தில் இருந்து வேறுபட்டது) வர்த்தக மொழியாக இருந்தது, இது பேரரசு முழுவதும் பேசப்பட்டது, ஒரு பொதுவான மொழியால் பல்வேறு ஜனங்களின் குழுக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க முடிந்தது.
4) பல பொய்யான விக்கிரகசிலைகளால் ரோமர்கள்மேல் வெற்றிபெறத் தவறிவிட்டதால், அந்த சிலைகளை வணங்குவதை பலர் கைவிட்டுவிட்டனர். அதே சமயத்தில், இன்னும் "வளமான" நகரங்களில் கிரேக்க தத்துவமும் அறிவியல் காலமும் ஆவிக்குரிய நிலையில் வெறுமையாக இருந்தன. அதேப்போல கம்யூனிச அரசாங்கங்களின் நாத்திகம் இன்று ஒரு ஆவிக்குரிய வெற்றிடத்தை விட்டு விடுகிறது.
5) இரகசிய மதங்கள் ஒரு இரட்சகரான தேவனை மற்றும் இரக்கமுள்ள பலிகளை வழங்குவதற்கு அவசியமான ஆராதனையை வலியுறுத்தின, இவ்வாறு இறுதியான பலியில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்றினார்கள். கிரேக்கர்களும் ஆத்மாவின் அழியாமையில் நம்பிக்கை கொண்டனர் (ஆனால் உடலில் அல்ல).
6) ரோமானிய இராணுவம் மாகாணங்களிடமிருந்து படையினரை ஆட்சியில் அமர்த்தியது, ரோமானிய கலாச்சாரத்திற்கும், அந்த வெளிப்புறமான மாகாணங்களை இன்னும் அடைந்துவிடாத எண்ணங்களை (நற்செய்தி போன்று) அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பிரிட்டனுக்கு சுவிசேஷத்தை அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவ படைவீரர்களின் முயற்சியின் விளைவாக இருந்தது.
மேலே கூறப்பட்ட கருத்துகள் ஏன் அந்த நேரத்தில் பார்த்து மனிதர்கள் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் கிறிஸ்து வர ஒரு நல்ல நேரம் என்று ஊகிக்கின்றன என்பதை அடிப்படையாக கொண்டவை. ஆனால் தேவனுடைய வழிகள் நம் வழிகள் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் (ஏசாயா 55:8), இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஏன் தேவன் தம்முடைய குமாரனை அனுப்பும்படி சித்தம் கொண்டார் என்பதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். கலாத்தியர் 3 மற்றும் 4 ஆகியவற்றின் பின்னணியில், மேசியாவின் வருகைக்காக யூதச் சட்டங்களின் மூலமாக ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக்கொள்ள தேவன் விரும்பினார் என்பது தெளிவாகிறது. நியாயப்பிரமாணம் ஜனங்கள் தங்களுடைய பாவத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள உதவியது (அந்த நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தனர்), அதனால் அவர்கள் மேசியாவாகிய இயேசு மூலமாக அந்த பாவத்திற்கான பரிகாரத்திற்காக உடனடியாக அவரை ஏற்றுக்கொள்வதற்காக (கலாத்தியர் 3:22-23; ரோமர் 3:19-20) அமைந்தது. மேசியாவாக இயேசுவை ஜனங்களுக்கு வழிநடத்துவதற்கு நியாயப்பிரமாணத்திற்கு "பொறுப்பு" (கலாத்தியர் 3:24) கொடுக்கப்பட்டது. இயேசு மேசியாவைப்பற்றியதான பல தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியதன் மூலம் இதைச்செய்தார். பாவத்திற்காக பலி செலுத்தப்பட வேண்டிய அவசியத்தையும், அதனது சொந்தப் பற்றாக்குறையையும் (ஒவ்வொரு பலி செலுத்துவதன் மூலம் பிற்பாடு கூடுதல் தேவையும் இருக்கிறது) சுட்டிக்காட்டிய இந்த பலி முறைமைக்குச் சேர்க்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் வரலாறு கிறிஸ்துவின் நற்செய்தியையும் செயலையும் பல நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களின் மூலமாக சித்தரித்தது (அதாவது ஆபிரகாம் ஈசாக்கைப் பலிசெலுத்த விருப்பம் கொண்டது, அல்லது எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் இஸ்ரவேலர்கள் ஆசரித்த பஸ்காவின் விவரங்கள் போன்றவை), ஆகியவைகள் கிறிஸ்துவின் வேலையைப் பறைசாற்றியது.
இறுதியாக, குறிப்பிட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்போது கிறிஸ்து வந்தார். தானியேல் 9:24-27 வரையிலுள்ள வசனங்கள் "எழுபது வாரங்கள்" அல்லது “எழுபது ஏழுகளைப்" பற்றி பேசுகிறது. இதன் பின்னணியிலிருந்து, இந்த "வாரங்கள்" அல்லது "ஏழுகள்" ஏழு நாட்கள் அல்ல, மாறாக வருஷங்களைக் குறிக்கிறதாக இருக்கிறது. முதல் அறுபத்தொன்பது வாரங்களின் விவரங்களை நாம் வரலாற்றைப் பார்த்து சரிபார்த்துக் கொள்ளலாம் (எழுபது வாரங்கள் எதிர்காலத்தில் நடைபெறும்). எழுபது வாரங்களின் எண்ணிக்கை "எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல்" தொடங்குகிறது (வசனம் 25). இந்த கட்டளை அர்தசஷ்டா ராஜாவினால் கி.மு. 445-ல் வழங்கப்பட்டது (நெகேமியா 2:5-ஐ பார்க்கவும்). ஏழு "ஏழுகள்" மற்றும் 62 "ஏழுகள்" அல்லது 69 x 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்க்கதரிசனம் கூறுகிறது: "மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்" (பெரிய அழிவு என்று பொருள்) (வச 26). இங்கே நமக்கு தவறாக புரிந்துகொள்ள இயலாத நிலையில் தெளிவாக இரட்சகராகிய மேசியாவின் மரணம் பற்றிய குறிப்பு உள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னால், ராபர்ட் ஆண்டர்சன் அவரது “வருகிறவராகிய பிரபு” என்கிற புத்தகத்தில், அறுபது ஒன்பது வாரங்கள் குறித்த விரிவான கணக்கீடுகளை 'தீர்க்கதரிசன ஆண்டுகளைப்' பயன்படுத்தி, லீப் ஆண்டுகளுக்கும் அனுமதிக்கிறார், காலெண்டரில் உள்ள பிழைகள், கி.மு. முதல் கி.பி. வரை, போன்றவை, மற்றும் இயேசுவின் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், எருசலேமிற்கு வரும் வெற்றி பவனி நாளில் அறுபத்து ஒன்பது வாரங்கள் முடிவுக்கு வந்தன என தெளிவாக விளக்குகிறார். ஒருவர் இந்த கால அட்டவணையைப் பயன்படுத்துகிறாரா இல்லையா என்பதல்ல, கிறிஸ்துவின் மனித பிறப்பின் காலம் மற்றும் மரணம் ஆகியவற்றைக் குறித்து தானியேல் புத்தகத்தில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவுசெய்த இந்த விரிவான தீர்க்கதரிசனத்துடன் இணைந்திருக்கிறது.
கிறிஸ்துவின் மனித அவதாரம் குறித்த நேரம் அந்த நேரத்தில் வாழ்ந்திருந்த ஜனங்கள் அவரது வருகைக்கு தயாராக இருந்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது. பின்னர் வந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழ்ந்த ஜனங்கள் இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு போதுமான சான்றுகள் இருப்பதையும் அதிகமான விவரங்களையும் வேதவாக்கியங்கள் எடுத்துரைக்கிறது.
English
கடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை?